செய்திகள் :

அமெரிக்கா: இந்திய மாணவர் கலிபோர்னியாவில் மர்ம மரணம்; தூதரகம் சொல்வது என்ன?

post image

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22). இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (UC Berkeley) வேதியியல் மற்றும் உயிரியல் மூலக்கூறு பொறியியல் பிரிவில் முதுகலைப் படித்து வந்தார். கடந்த பிப்ரவரி 9-ம் தேதி முதல் இவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் தங்கியிருந்த பகுதிக்கு அருகில் உள்ள டில்டன் பிராந்திய பூங்கா (Tilden Regional Park) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே, சாகேத்தின் பாஸ்போர்ட் மற்றும் லேப்டாப் இருந்த பையை போலீசார் கண்டெடுத்தனர்.

தொடர்ந்து, அன்சா ஏரி மற்றும் பெர்க்லி ஹில்ஸ் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஆறு நாள்களுக்குப் பிறகு சாகேத்தின் உடல் மீட்கப்பட்டதாகச் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சாகேத்தின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது உடலை விரைவில் இந்தியாவுக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்து உதவிகளையும் தூதரகம் செய்து வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த சாகேத், சென்னை ஐஐடி-யில் இளங்கலை முடித்தவர். Microchannel cooling system for hyperloop தொடர்பான காப்புரிமை பெற்ற ஆறு பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சகம், ``இந்தியத் தூதரகங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளன. அவர்களின் பாதுகாப்புக்காக அவ்வப்போது வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன" என்று தெரிவித்துள்ளது.

நொய்டா: காதலர் தினத்தில் முடிந்த 15 ஆண்டுக் காதல்; காதலியைச் சுட்டுக்கொன்று தற்கொலை செய்த காதலன்

நொய்டாவில் காதலர் தினத்திற்காகச் சந்தித்துக் கொண்ட ஜோடி காரில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் கார் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது.இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போல... மேலும் பார்க்க

கரூர்: "ரூ.10,000 இல் ஒரு ரூபாய் குறைந்தாலும் வேலை நடக்காது" - விவசாயியிடம் லஞ்சம் கேட்ட விஏஓ கைது

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பாப்பையம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை. விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தை பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பம் செய்திருந்தார்.அந்த வகையில... மேலும் பார்க்க

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.கைதுஇந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் எ... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு - திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் - சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகள் விற்பனை; மூவரைக் கைதுசெய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், குற்... மேலும் பார்க்க

கேரளாவில் வீடு புகுந்து 50 சவரன் தங்கநகைகள் கொள்ளை; நெல்லை இளைஞர்கள் சிக்கியது எப்படி?!

கேரள மாநிலம், பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.... மேலும் பார்க்க