திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி...
திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவருடன் அப்பெண்ணுக்கு நட்பு ஏற்பட்டு, கடந்த சில மாதங்களாக இருவரும் கொல்லஹல்லி பகுதியில் வாடகை வீட்டில் தம்பதிபோல் வசித்து வந்தனர்.
சமீபகாலமாக தாங்கள் மகிழ்ச்சியாக உறவில் ஈடுபடுவதற்கு இடையூறாக இருப்பதாக, குழந்தைக்கு உடல் முழுவதும் சூடு வைத்து தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளனர்
அதுமட்டுமன்றி வேலைக்குச் செல்லும்போது குழந்தையை வீட்டில் வைத்து பூட்டிவிட்டுச் சென்றும் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர்.
தொடர்ந்து சூடு வைத்ததால் உடல் முழுவதும் காயமான குழந்தைக்கு உடல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எழிலரசி சேர்த்துள்ளார். குழந்தையின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் தெரிந்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் பாட்டி புகார் கொடுத்ததைத் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அய்யப்பனையும், உடந்தையாக இருந்த தாய் எழிலரசியையும் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் தருமபுரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது



















