செய்திகள் :

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து? - இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு... வீட்டில் ரெய்டு!

post image

சென்னை போலீஸ் கமிஷனரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மத்திய குற்றப்பிரிவின் கீழ் விபச்சார தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜலட்சுமி. இவரின் வீடு சென்னை திருமங்கலம் வெல்கம் காலனி பகுதியில் உள்ளது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாருக்கு ஆதாரங்களுடன் புகார் வந்தது. அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார், பிப்ரவரி 13-ம் தேதி காலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டீம் ராஜலட்சுமியின் வீட்டுக்குச் சென்றது. அங்கிருந்த ராஜலட்சுமியின் குடும்பத்தினரிடம் விவரத்தைத் தெரிவித்த போலீஸார், வீட்டில் சுமார் 4 மணி நேரம் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் வழக்குக்குத் தேவையான சில ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் எடுத்ததோடு அதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமியிடமும் விவரத்தை தெரிவித்து விட்டு சென்றனர்.

இன்ஸ்பெக்டரின் வீடு

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் உயரதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எங்களுக்கு புகார் வந்தது. அதனடிப்படையில்தான் சோதனை நடத்தியுள்ளோம். விரைவில் அவரிடம் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தரப்பில் நம்மிடம் பேசிய போலீஸார், ``ஆளுங்கட்சியில் செல்வாக்கு உள்ள ராஜலட்சுமி, விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார். சட்டத்துக்குட்பட்டு இந்தப் பிரிவில் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால் அவரைப் பழிவாங்கும் நோக்கில் தவறான தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸுக்கு தெரிவித்து இந்த ரெய்டை நடத்தயிருக்கிறார்கள். விசாரணை முடிவில் உண்மை தெரியவரும்" என்றனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு வட்டாரத்தில் விசாரித்தபோது, ``விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. ஏனெனில் இந்தப் பிரிவில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் மீது ஏற்கெனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு துறைரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் ஓராண்டுதான் இந்தப் பிரிவில் இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றுவதுண்டு. சென்னையில் இந்தப் பிரிவில் இன்ஸ்பெக்டர்கள் ராஜலட்சுமி, மகேஷ்குமார் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். இதில் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், விமான நிலையம் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார். அவரின் இடத்துக்கு விமான நிலையம் காவல் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் பாண்டி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அதிகாரிகள், அரசியல் செல்வாக்கு காரணமாக இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி இடமாற்றம் செய்யப்படவில்லை. இந்தச் சூழலில்தான் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்" என்றனர்.

வீடு தேடிச் சென்று பஜ்ரங் தள் பிரமுகரைக் குத்திக் கொன்ற மர்ம நபர்; புதுக்கோட்டையில் பரபரப்பு!

புதுக்கோட்டை, திருவப்பூர் குட்செட் சாலையைச் சேர்ந்தவர் மெய்யப்பன். இவர் மகன் மோகன்ராஜ் (வயது: 38). இவர், பஜ்ரங் தள் அமைபின் முன்னாள் மாவட்டத் தலைவராகவும், ராமேஸ்வரம் கோட்டப் பொறுப்பாளராகவும் இருந்தார்... மேலும் பார்க்க

MP: பில்லி சூனிய நம்பிக்கை; பக்கத்து வீட்டுக்காரர்களை வெட்டிப் பலி கொடுத்த நபர்; வெளியான பகீர் தகவல்

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் மனைவிக்குக் கருச்சிதைவு ஏற்பட்டதற்குப் பக்கத்து வீட்டுக்காரர்கள் இரண்டு பேரை கடவுளுக்குப் பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.அங்குள்ள அ... மேலும் பார்க்க

சென்னை: பெண் காவலர் மர்ம மரணம்; உள்ளாடையுடன் சடலம் மீட்பு; கணவரிடம் விசாரணை

சென்னை எழும்பூர் காவல் குடியிருப்பில் வசித்து வருபவர் காவலர் சிலம்பரசன். இவரின் மனைவி புவனேஸ்வரி. இவர், எழும்பூர் குற்றப்பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தார்.சிலம்பரசனுக்கும் புவனேஸ்வரிக்கும் அடிக்கடி... மேலும் பார்க்க

நடிகர் ரன்வீர் சிங்கை தொடர்ந்து சல்மான் கான் மைத்துனர்! தொடரும் பிஷ்னோய் கேங்க் மிரட்டல் சம்பவங்கள்

மும்பையில் நேற்று முன்தினம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆட்கள் பல கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்திருந்தனர். வாட்ஸ் ஆப் மூலம் ரன்வீர் சிங் செ... மேலும் பார்க்க

முக்கோண காதல்: நண்பனை கொலை செய்து 190 கி.மீ தூரம் எடுத்துச்சென்று உடலை எரித்து மும்பை போலீஸ்காரர்

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் போலீஸ்காரராக இருப்பவர் பந்து பிசே (49). இவர் தான் விரும்பும் பெண்ணை தனது நண்பரும் விரும்பியதால் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து தனது நண்பரை கொலை செய்து கிணற்றில் த... மேலும் பார்க்க

பேரணாம்பட்டு: பேருந்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் - தோல் வியாபாரி கைது

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் தனியார் பேருந்தில... மேலும் பார்க்க