செய்திகள் :

Balu Mahendra: அழியாத கோலங்கள் `டு' தலைமுறைகள் - பாலுமகேந்திரா திரைப்பயணம் ஒரு பார்வை!

post image

பாலுமகேந்திரா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர். ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றி இருந்தாலும், இயக்குநராக 23 படங்களை அவர் இயக்கி இருக்கிறார். அவரின் நினைவு நாளான இன்று (பிப்.13)

அவர் இயக்கிய சில படங்கள் குறித்த தகவல்களைப் பார்ப்போம். 


* 1977-ல் 'கோகிலா' என்ற கன்னடப் படத்தை இயக்கி, ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இது அவருடைய முதல் படம். இந்தப் படத்தில் கமல்ஹாசன், மோகன், ஷோபா ஆகியோர் நடித்திருக்கின்றனர். சிறந்த ஒளிப்பதிவிற்கான முதல் தேசிய விருதினை பாலுமகேந்திராவுக்கு இந்தப் படம் பெற்று தந்திருக்கிறது. 

பாலுமகேந்திரா
பாலுமகேந்திரா

* 1979-ல் 'அழியாத கோலங்கள்' படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். பிரதாப் போத்தன், ஷோபா நடித்த இந்தப் படம் மூன்று இளைஞர்களின் வாழ்க்கை, பருவ வயதில் எப்படி இருக்கும் என்பதை அப்படியே சொன்ன படம். 

* 1980-ல் வெளியான படம் 'மூடுபனி'. மீண்டும் பிரதாப் போத்தன், ஷோபாவை வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். பாலுமகேந்திராவுக்கு இளையராஜா இசையமைத்த முதல் படம் இது. 

* 1982-ல் மலையாளத்தில் வெளியான படம் 'ஓளங்கள்'. இது அவர் இயக்கிய முதல் மலையாளப் படம். பூர்ணிமா ஜெயராம், அம்பிகா, அமோல் பாலேகர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தில் ஜானகி பாடிய ‘தும்பி வா தும்பக்குளத்தில்’ பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் க்ளாஸ் ஹிட் அடித்தது. 

* 1982-ல் வெளியான படம் நிரீக்ஷனா. பானு சந்தர், அர்ச்சனா இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். தெலுங்கில் சோதனை முயற்சியில் இறங்கி அங்கேயும் ஹிட் அடித்திருக்கிறார். 

* 1982-ல் 'மூன்றாம் பிறை' படத்தை இயக்கி, ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். கமல்ஹாசன், ஸ்ரீதேவி இருவரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். நடிப்பிற்காக கமலுக்கும், ஒளிப்பதவிற்காக பாலுமகேந்திராவிற்கும் என இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது. கண்ணதாசனின் கடைசி பாடலான ‘கண்ணே கலைமானே!’ இன்றைக்கும் எவர் கீரின். 

மூன்றாம் பிறை
மூன்றாம் பிறை

* 1983-ல் வெளியான மலையாளப் படம் ‘ஓமக்குயில்’. ஒய்.ஜி மகேந்திரன், அருணா, பூர்ணிமா ஜெயராம் நடித்திருக்கின்றனர். கன்னடத்தில் வெளியான ‘கோகிலா’ படத்தின் ரீமேக் இது. 

* 1983-ல் இந்தியில் வெளியான படம் ‘சாத்மா’ கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த இந்தப் படம் மூன்றாம் பிறை படத்தின் இந்தி ரீமேக். இளையராஜா இசையமைத்த முதல் இந்திப் படமும் இதுதான்.

* 1985-ல் வெளியான படம் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ ரஜினிகாந்த், மாதவி இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். பாலுமகேந்திரா இயக்குநராக ரஜினியுடன் சேர்ந்த முதல் படம் இதுதான். 

* 1988-ல் வெளியான படம் ‘வீடு’. அர்ச்சனா பானுசந்தர் நடித்திருக்கின்றனர். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படம். சிறந்த படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. 

பாலுமகேந்திரா , சசிகுமார்
பாலுமகேந்திரா , சசிகுமார்

* 1989-ல் வெளியான படம் ‘சந்தியா ராகம்’. இந்தப் படத்தில் சொக்கலிங்க பாகவதர், அர்ச்சனா நடித்திருக்கின்றனர். அவருக்கு இந்தப் படமும் தேசிய விருதை அள்ளிக்கொடுத்தது. ‘ எந்த சமரசமும் இல்லாமல் நான் நினைத்ததை இயக்கியிருக்கிறேன்’ என்று பாலுமகேந்திரா சொன்ன படம் இது. 

* 2013-ல் வெளியான படம் ‘தலைமுறைகள்’. பாலு மகேந்திரா, சசிகுமார், ரம்யா சங்கர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். பாலு மகேந்திராவின் கடைசிப் படம் இது.

தமிழையும், இந்தத் தாத்தாவையும் மறக்கவே முடியாது!

My Lord Review: கிட்னி திருட்டிற்கு எதிரான சாமானியனின் போராட்டம்; படமாகவும் வெல்கிறதா மை லார்ட்?

கோவில்பட்டி, மைப்பாறையில் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் முத்து சிற்பியும் (சசிகுமார்), அவரது மனைவி சுசிலாவும் (சைத்ரா) இறந்து போய்விட்டதாக அரசால் போலியான இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்... மேலும் பார்க்க

மைலாஞ்சி விமர்சனம்: வழக்கமான முக்கோண காதல் கதைதான்; `மிஸ்டர் நேர்மை' நாயகன் ஜெயித்தாரா?

ஊட்டியில் வசித்து வரும் சாரு (கிருஷா குரூப்) பெற்றோர் அரவணைப்பின்றி சித்தியால் வளர்க்கப்படுகிறார். சித்தி ஏற்பாடு செய்யும் திருமணத்தில் துளியும் விருப்பமில்லாத சாரு, அங்கிருந்து எவரையாவது காதலித்து வெ... மேலும் பார்க்க

Pookie: "ஒவ்வொரு முறை இந்தப் படத்தை நான் பார்த்தபோதும் அழுதேன்"- 'பூக்கி' படம் குறித்து விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் 'மார்கன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் நடித்திருந்தார். தற்போது விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்திருக்கும் படத்தில் 'பூக்கி'... மேலும் பார்க்க

Mrunal Thakur: `பிப்.14 ஆம் தேதி எனக்கு திருமணமா?' - மிருணாள் தாகூர் விளக்கம்

நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாகவும், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் 'India Today' ஊ... மேலும் பார்க்க

With Love: "`இதுதான் சக்ஸஸா'ன்னு கேட்டேன், அதுக்கு அப்பா என்ன பார்த்து..!"- சௌந்தர்யா ரஜினிகாந்த்

'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'வித் லவ்'. இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் 'வித் லவ்' படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் 'டூரிஸ்ட் ஃ... மேலும் பார்க்க