சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து? - இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு... வீட்...
Singles Manifesto: காதலர் தினத்துக்கு `சிங்கிள்ஸ் சர்வைவல் கைடு - 2026' | 20 Tips
காதலர் தினத்தை கொண்டாடும் ஜோடிகளை விட, அதை `சர்வைவ்’ செய்யும் சிங்கிள்ஸ்தான் அதிகம். வீர சிங்கிள்களுக்கான சர்வைவல் கைடு. இதைப் படிக்கும்போது சிரிப்பு வரவில்லை என்றால், நீங்கள் இன்னும் உங்கள் `Ex'-ஐ மறக்கவில்லை என்று அர்த்தம்!
கடலில் விழுந்தவன் தத்தளிப்பது இயல்பு, ஆனால் கரையிலேயே இருந்து வேடிக்கை பார்ப்பவன்தான் அறிவாளி! காதல் கடலில் விழுந்தவர்களைக் காப்பாற்றப் படகு இல்லையென்றாலும், கரையில் அமர்ந்து அவர்களைப் பார்த்துச் சிரிக்க இந்த `சிங்கிள்ஸ் மேனிஃபெஸ்டோ’ நிச்சயம் உதவும்.

1. காலை எழுந்ததும் பல் துலக்குகிறீர்களோ இல்லையோ, Instagram Story-யை மட்டும் ஓப்பன் செய்யாதீர்கள். ரோஜாப்பூ, கைகோத்த புகைப்படங்கள், My World கேப்ஷன்கள் உங்கள் கண்களைக் குருடாக்கலாம்.
2. சோகமான லவ் ஃபெயிலியர் பாடல்களை (எ.கா: போ நீ போ, கண்மணி அன்போடு) ஸ்டேட்டஸில் வைப்பதை தவிர்க்கவும். அதற்கு பதில், `சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ ரஜினி டயலாக் அல்லது `சாப்பாடு தான் முக்கியம்’ வடிவேலு மீம்ஸை தெறிக்க விடுங்கள்.
3. உங்களைப் போலவே சிங்கிளாக இருக்கும் 3 நண்பர்களுக்கு கான்பரன்ஸ் கால் செய்து, "மச்சான், இன்னைக்கு மதியம் பிரியாணி எங்க சாப்பிடலாம்?" என்று மட்டும் பேசுங்கள். காதலைத் தவிர்த்து, கறியைப் பற்றி பேசுவதே புத்திசாலித்தனம்.
4. காதலர் தின கிஃப்ட், டெடி பியர், வாட்ச், டின்னர் என்று ஜோடிகள் செலவு செய்யும் பட்டியலை ஒரு பேப்பரில் எழுதுங்கள். அந்தத் தொகையை கூட்டிப் பார்த்து, "ஆஹா! இவ்வளவு பணமா? இதை வெச்சு ஒரு புது போனே வாங்கலாமே!" என்று பெருமைப்படுங்கள்.
5. இன்று குளிக்க வேண்டும் என்றோ, தலை வார வேண்டும் என்றோ எந்த கட்டாயமும் இல்லை. லுங்கி, பர்முடாஸ் அல்லது நைட்டி தான் இன்றைய அதிகாரப்பூர்வ உடை. "யார் என்னைப் பார்க்கப் போறா?" என்ற சுதந்திரம் விலைமதிப்பற்றது.
6. மொபைல் சார்ஜ் விரைவாகக் குறையாது . "சாப்டியா?", "தூங்குனியா?", "யார் கூட பிஸி?" என்று மெசேஜ் டைப் செய்து விரல் வலிக்கத் தேவையில்லை.

7. கரகரப்பான உங்கள் சொந்தக் குரலிலேயே பேசலாம். கிசு கிசு குசு குசுவென கொஞ்சிப் பேசி தொண்டையைக் கட்டிக்கொள்ளத் தேவையில்லை.
8. தவறியும் கூட பார்க், பீச், தியேட்டர் பக்கம் தலை வைத்து படுக்காதீர்கள். அங்கு ஜோடிகள் செய்யும் சேட்டைகளைப் பார்த்தால், வயிற்றெரிச்சல் என்னும் கொடிய நோய் வர வாய்ப்புள்ளது.
9. ரோட்டில் ஏதேனும் ஜோடியைப் பார்த்தால், "பாவம், இன்னும் ரெண்டு மாசத்துல பிரேக்-அப் பண்ணிட்டு அழப்போறாங்க" என்று மனதிற்குள் சாபம் விட்டுக்கொண்டே கடந்து செல்லுங்கள்.
10. உங்களுக்காக ஒரு கிஃப்ட் வாங்கி, அதில் "To: My Sweetheart, From: Me" என்று எழுதி அமேசானில் ஆர்டர் போடுங்கள். டெலிவரி பாய் பெல் அடிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏது?
11. ஜோடியாகச் சென்றால் பீட்சாவை ஷேர் செய்ய வேண்டி வரும். ஆனால் நீங்கள் சிங்கிள்! ஒரு லார்ஜ் பீட்சா அல்லது முழு கிரில் சிக்கன் முழுக்க முழுக்க உங்களுக்கே. Joey Doesn't Share Food பாலிசியை கடைபிடியுங்கள்.
12. ரொமான்ஸ் படங்களைத் தடை செய்யுங்கள். 'வடசென்னை', 'கே.ஜி.எஃப்', 'விக்ரம்' போன்ற ஆக்ஷன் படங்களை மட்டும் பார்த்து ரத்தத்தைச் சூடேற்றுங்கள்.

13. இரவு 9 மணிக்கே மொபைல் டேட்டாவை ஆஃப் செய்யவும். "Good Night" சொல்ல யாரும் இல்லை என்று வருந்தாதே, நடுராத்திரியில் எழுந்து ரிப்ளை பண்ணத் தேவையில்லை என்று சந்தோஷப்படு. போர்வைக்குள் புகுந்து நிம்மதியாகத் தூங்கு.
14. உங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டா பாஸ்வேர்டை யாருக்கும் தரத் தேவையில்லை. உங்கள் ரகசியம் உங்கள் கையில்.
15. பிங்க் கலர் சட்டை போட வேண்டிய கட்டாயம் இல்லை. பிடித்த அழுக்கு டீ-ஷர்ட், டவுசரைப் போட்டு வலம் வரலாம்.
16. ஊர் சுற்றத் தேவையில்லை என்பதால் வண்டியில் பெட்ரோல் மிச்சம். அந்த காசில் கூடுதலாக இரண்டு டீ குடிக்கலாம்.
17. போன் அடித்தால் பயப்படத் தேவையில்லை. அப்பா அல்லது நண்பன் தான் கூப்பிடுவான். "எதுக்கு போன் பிஸியா இருந்துச்சு?" என்ற சிபிஐ விசாரணை இருக்காது.
18. "தாடி குத்துது, ஷேவ் பண்ணுங்க" என்று சொல்ல ஆளிருக்காது. தேவதாஸ் போலவோ அல்லது புஷ்பா போலவோ தாடி வளர்ப்பது உங்கள் உரிமை.

19. மொபைல் கேலரியில் தேவையில்லாத 500 செல்ஃபிக்கள் இருக்காது. மெமரி ஃபுல் ஆகாது.
20. எல்லோரும் காதலிக்கும்போது, நீங்கள் மட்டும் கரியரில் கவனம் செலுத்தி பெரிய ஆளாகி, பின்னர் அவர்கள் கல்யாணத்திற்கு 'சீஃப் கெஸ்ட்' ஆக போவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.
லாஸ்ட் பஞ்ச்:
பிப்ரவரி 14 சனிக்கிழமைதான் வருகிறது. ஆக இந்தச் சனி போல் அந்தச் சனியும், அந்தச் சனி போல் இந்தச் சனியும் என எல்லாச் சனிபோல் இதுவும் ஒரு சாதாரண சனியே என்று பெருந்தன்மையுடன் கடந்துவிடவும்.!
















