செய்திகள் :

MP: பில்லி சூனிய நம்பிக்கை; பக்கத்து வீட்டுக்காரர்களை வெட்டிப் பலி கொடுத்த நபர்; வெளியான பகீர் தகவல்

post image

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் மனைவிக்குக் கருச்சிதைவு ஏற்பட்டதற்குப் பக்கத்து வீட்டுக்காரர்கள் இரண்டு பேரை கடவுளுக்குப் பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அங்குள்ள அதர்வா என்ற கிராமத்தில் வசிப்பவர் சத்ரபதி சிங்(21). இவரது மனைவிக்குச் சமீபத்தில் கருச்சிதைவு ஏற்பட்டது. இதனால் சிங் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தார். கடவுளின் கோபத்தால்தான் இது போன்ற சம்பவம் நடந்துவிட்டதாக நம்பினார்.

இதனால் கடவுளைச் சாந்தப்படுத்த தனது வீட்டில் சிங் பூஜை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தப் பூஜைக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் பூல்குமாரி சிங்(50), கமலா சிங்(65) ஆகியோரை தனது வீட்டிற்கு அழைத்திருந்தார்.

பூஜை நடந்து கொண்டிருந்தபோது திடீரென சிங் பக்கத்து வீட்டுக்காரர்கள் இரண்டு பேரையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். அவர்களின் சத்தம் கேட்டு பக்கத்து வீடுகளில் வசிக்கும் ராஜ்பஜன் சிங் மற்றும் சுமித்ரா சிங் ஆகியோர் வந்து தடுக்க முயன்றனர்.

கைது
கைது

அவர்கள் இரண்டு பேரையும் சிங் தாக்கினார். அவர்கள் இரண்டு பேரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்தனர்.

கொலை செய்யப்பட்ட இரண்டு பேர் உடல் அருகில் தேங்காய், அகர்பத்தி மற்றும் பூஜைப் பொருட்கள் கிடந்தன. போலீஸார் சிங்கைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வெளியில் மிகப்பெரிய மேடை ஒன்றை சிங் கட்டி இருக்கிறார். அதில் மிகப்பெரிய பூஜை செய்யப்போவதாகவும் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி காயத்ரி கூறுகையில், ''பில்லி சூனியத்தால் இச்சம்பவம் நடந்திருப்பதாகச் சந்தேகப்படுகிறோம். கொலை செய்யப்பட்டவர்களும், கொலை செய்தவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த தூரத்து உறவினர்கள் ஆவர்.

அதே கிராமத்தைச் சேர்ந்த யாரோ தனக்கு பில்லி சூனியம் வைத்திருப்பதாகக் கருதி சிங் இக்காரியத்தைச் செய்துள்ளார். அதோடு சிங் மனைவிக்குச் சமீபத்தில் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக கடவுளைச் சாந்தப்படுத்த இது போன்ற பலிகளைக் கொடுத்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது'' என்றார்.

சென்னை: பெண் காவலர் மர்ம மரணம்; உள்ளாடையுடன் சடலம் மீட்பு; கணவரிடம் விசாரணை

சென்னை எழும்பூர் காவல் குடியிருப்பில் வசித்து வருபவர் காவலர் சிலம்பரசன். இவரின் மனைவி புவனேஸ்வரி. இவர், எழும்பூர் குற்றப்பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தார்.சிலம்பரசனுக்கும் புவனேஸ்வரிக்கும் அடிக்கடி... மேலும் பார்க்க

நடிகர் ரன்வீர் சிங்கை தொடர்ந்து சல்மான் கான் மைத்துனர்! தொடரும் பிஷ்னோய் கேங்க் மிரட்டல் சம்பவங்கள்

மும்பையில் நேற்று முன்தினம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆட்கள் பல கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்திருந்தனர். வாட்ஸ் ஆப் மூலம் ரன்வீர் சிங் செ... மேலும் பார்க்க

முக்கோண காதல்: நண்பனை கொலை செய்து 190 கி.மீ தூரம் எடுத்துச்சென்று உடலை எரித்து மும்பை போலீஸ்காரர்

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் போலீஸ்காரராக இருப்பவர் பந்து பிசே (49). இவர் தான் விரும்பும் பெண்ணை தனது நண்பரும் விரும்பியதால் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து தனது நண்பரை கொலை செய்து கிணற்றில் த... மேலும் பார்க்க

பேரணாம்பட்டு: பேருந்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் - தோல் வியாபாரி கைது

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் தனியார் பேருந்தில... மேலும் பார்க்க

குடியாத்தம்: பாலியல் வன்முறைக்குள்ளான 14 வயது சிறுமி - போலீஸார் தீவிர விசாரணை

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 14 வயது வளர்ப்பு மகள், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பத்தாம் வகுப்புப் பயின்றுவந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக... மேலும் பார்க்க

நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயியான இவரது பெயரில் உள்ள நான்கு வீடுகளை அவரது மகன் பெயருக்கு மாற்றி, சொத்து வரி விதிக்கக் கோரி, நாமக்கல் மாநகராட்சியி... மேலும் பார்க்க