அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆட...
What To Watch: 'TTT' முதல் 'மை லார்ட் வரை' - இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ்கள் இவைதான்!
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள திரைப்படங்கள், சீரிஸ்களின் லிஸ்ட்.
'மை லார்ட்' (தமிழ்)
சசிகுமார், சைத்ரா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மை லார்ட்'. ராஜு முருகன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ஒலிம்பியா மூவீஸ் தயாரித்திருக்கிறது. இந்தப் படம் இந்த வாரம் திரையரங்குகளில் (பிப்.13) வெளியாகியிருக்கிறது.
பூக்கி (தமிழ்)
விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் 'மார்கன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் நடித்திருந்தார். தற்போது விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்திருக்கும் படத்தில் 'பூக்கி' (Pookie) படத்தில் அஜய் தீஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை சலீம் பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இயக்கியிருக்கிறார். 'பூக்கி' (Pookie) படம் இந்த வாரம் வெளியாகியிருக்கிறது.
மைலாஞ்சி (தமிழ்)
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'மைலாஞ்சி’. சிங்கம்புலி,முனீஷ் காந்த் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தில் நாயகி ஆக கிரிஷா க்ரூப் நடித்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
இதைத் தவிர தமிழில் ‘மின்னலே’, ‘மௌனம் பேசியதே’, ‘காதலர் தினம்’, ‘உயிருள்ள வரை உஷா’ போன்ற படங்கள் ரீ- ரிலீஸூம் செய்யப்பட்டிருக்கிறது.
Couple Friendly ( தெலுங்கு):
அஸ்வின் சந்திரசேகர் கதை ,திரைக்கதை எழுதி இயக்க சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி , யோகி பாபு , லிவிங்க்ஸ்டன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘Couple Friendly’. இண்ட்டீரியர் டெக்ரேசன் டிசைனர் ஆக சென்னையில் வாழும் நாயகன் நாயகியை சந்தித்ததும் அவர் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் தான் கதை.
Funky (தெலுங்கு):
கயாடு லோஹர் நாயகியாக நடிக்கும் இந்தப்படத்தை கே.வி அனுதீப் இயக்கி இருக்கிறார். தெலுங்கு படமான ‘Funky’ தமிழ் டப்பிங்கிலும் வெளியாகிறது.
ஓ ரோமியோ (இந்தி):
விஷால் பரத்வாஜ் இயக்கத்தில், ஷாஹித் கபூர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘ஓ ரோமியோ’ (O’ Romeo). திரிப்தி திம்ரி, தமன்னா, திஷா பதானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது.
சீதா பயணம்:
ஆக்ஷ்ன் கிங் அர்ஜூன் தயாரித்து இயக்கி இருக்கும் படம் இது. அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நாயகி ஆக நடிக்க அர்ஜூனும், நடிகர் துருவா சர்ஜாவும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது.

வூதரிங் ஹைட்ஸ் (ஹாலிவுட்):
எமரால்ட் பென்னெல் இயக்கத்தில் மார்கோட் ராபி மற்றும் ஜேக்கப் எலோர்டி நடிப்பில் உருவாகியுள்ள 'வூதரிங் ஹைட்ஸ்' படம் இந்த வாரம் (பிப்.13) வெளியாகி இருக்கிறது.
ஓடிடி ரிலீஸ்கள்:
1. அநாகாநாகா ஒரு ராஜு - Netflix - February 11, 2026
2. மனா ஷங்கர வரபிரசாத் காரு - ZEE5 - February 11, 2026
3. தலைவர் தம்பி தலைமையில் - Netflix - February 12, 2026
4. பேபி கேர்ள் - Sony LIV - February 12, 2026
5. கோஹ்ரா சீசன் 2 - Netflix - February 11, 2026
6. தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ் - JioHotstar - February 13, 2026
7. கிராஸ் சீசன் 2 - Netflix - February 11, 2026


















