அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆட...
`குதிரைவாலி களி, நாட்டுக்கோழி பெப்பர் கறி...’ - வேலூரில் கமகமத்த அவள் விகடன் சமையல் போட்டி
சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர், விகடன் பிளே, ஹலோ எஃப்.எம்ஆகியவை இணைந்து வழங்கும் `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3’ போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. போட்டியின் நடுவராக, தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா பொறுப்பேற்றுள்ளார்.
மதுரை, திருச்சி, புதுச்சேரியைத் தொடர்ந்து... வேலூரில் இன்றைய தினம் இப்போட்டி நடைபெற்றது. வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியிலுள்ள சாந்தி மஹாலில் காலை 10 மணியளவில், குத்து விளக்கேற்றிப் போட்டியைத் தொடங்கிவைத்தார் நடுவர் தீனா. வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம் மற்றும் அருகேயுள்ள ஆற்காடு, ராணிப்பேட்டை, மேல்விஷாரம், வாலாஜாபேட்டை மற்றும் திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும் 119 போட்டியாளர்கள் ஆர்வமுடன் வந்து கலந்துகொண்டனர். பரவலாக சமைக்கப்படும் பாரம்பர்ய, சத்தான, விருப்பமான, ஆரோக்கியம் தரக்கூடிய உணவு வகைகளை அவர்கள் காட்சிப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது.

விதிமுறைப்படி முதல் சுற்றுக்கு வீட்டிலிருந்தே வகை வகையாக சமைத்துக் கொண்டு வந்திருந்திருந்தனர். அரங்கம் கமகமக்க மில்லட் களி, மொச்சக்கொட்டை காரப்பொங்கல், சாமைப்பொங்கல், வரகு அரிசி உப்புமா, கருப்புக் கவனி அல்வா, வெண்ணைப் புட்டு, பன்னீர் சமோசா, சிறுதானியக் கொழுக்கட்டை, ராகி கேக், குதிரை வாலி அரிசி கேசரி, கருப்பு உளுந்து பொடி இட்லி, நாட்டு சர்க்கரை லட்டு, கேரளா கீ ரைஸ், பெப்பர் சிக்கன், பச்சைப் பயறு தோசை, புதினா துவையல், சிக்கன் ரோஸ்ட், நேந்திரம் வாழை வரட்டல், தவணைப் பொடி, உழுந்துச் சோறு, சிக்கன் கறி, காஞ்சிபுரம் இட்லி, வாழை இலை சட்னி, மஞ்சள் துவையல், இன்சுலின் இலை சட்னி, அவல் லட்டு, டிரைஃப்ரூட் லட்டு, கருப்பு உளுந்து லட்டு, தேங்காய் சிக்கன், மில்லட் தோசை, மில்லட் இடியாப்பம், நாட்டுக்கோழி பெப்பர் கறி, தவா ஃபிரை ரிவர் ஃபிஷ், ராகி சிக்கன் சவர்மா ரோல், ஹெல்தி பிரவுன் சாலட், கொள்ளு ரசம், முடவாட்டுக்கால் சூப், பூண்டுத் தொக்கு, வேர்க்கடலை சாலட், ராகி சிமிலி, உலர்ப் பழங்கள் மற்றும் நட்ஸ் லட்டு, மாங்காய் ஊறுகாய்,
சந்தகை, சம்பா வெஜிடபிள் பிரியாணி, குதிரை வாலி மஷ்ரூம் பிரியாணி, முல்பாகல்தோசை, மசாலா மக்ரோனி, மினி பொட்டேட்டோ பால்ஸ், பட்டர் சிக்கன், நாண், பிரிஞ்சால் தொக்கு, பன்னீர் பொட்டேட்டோ கட்லட், மல்லிப் பொங்கல், பீட்ரூட் அல்வா, சிக்கன் கிரேவி, பாலக் பராத்தா, முட்டைக்கோஸ் பஜ்ஜி, கசகசா பாயாசம், மொச்சை ஹம்மஸ், ஓட்ஸ் பேன்கேக், ரோஸ்ட் பன்னீர் கிரேவி, கோஸ் ஃபிரை, மொச்சை கோவா, மொச்சை போலி, சிக்கன் தம் பிரியாணி, லெமன் சிக்கன், கருப்பு கவுனி அரிசி இட்லி, சாமை கிச்சடி, தக்காளி ஊறுகாய், பீட்ரூட் சப்பாத்தி, எனர்ஜி நியூட்ரி லட்டு, ரவை சீஸ் பால்ஸ், வெத்தலைப் பொரி, பச்சை மஞ்சள் ஆப்பிள் அல்வா, ராகி சோகோ லாவா பால்ஸ், மஸ்ரூம் பிரியாணி, கார்ன் பன்னீர் கட்லட், பூசணிக்காய் பாயாசம், குதிரைவாலி சாதம், குதிரைவாலி களி, வரகு உப்பு உருண்டை, சுரைக்காய் அடை, பாகற்காய் சிப்ஸ், முளைக்கட்டிய நவதானிய அவியல் ஆகிய உணவு வகைகள் இடம் பிடித்தன. கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரதீஷ் என்ற 11 வயது சிறுவனும் போட்டியில் கலந்துகொண்டு தனது ரெசிப்பியைக் காட்சிப்படுத்திய முறை வாவ் சொல்ல வைத்தது.

முதல் சுற்று முடிந்து காத்திருந்த போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஜாலியான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு ஸ்பான்சர்கள் மூலம் பரிசுகளும் வழங்கப்பட்டன. இடையிடையே, அவள் விகடன் வாசகிகள் பலரும் மேடை ஏறி அவர்களின் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். ``அவள் விகடனில் முகம் தெரியாத தோழிகள் பலரும் சொல்லும் குறிப்புகள் எங்களுக்குப் பயனளிக்கின்றன. சமையல் டிப்ஸ், ஜோக்ஸ் மட்டுமன்றி மாடித்தோட்டம் அமைப்பு குறித்தும் அவள் விகடனில் படித்து தெரிந்துகொண்ட பிறகுதான் எங்கள் வீடுகளிலும் மாடித்தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறோம். தினமும் காலையில் எழுந்து வீட்டு வேலைகளைச் செய்வதில் மட்டுமே எங்களின் காலம் செல்கிறது. இந்த ஒருநாள் எங்களுக்கான நாளாகப் பார்க்கிறோம். நிறைய கற்றுக்கொண்டோம். கொஞ்சம்கூட சோர்வடையவில்லை" என்றனர். இதையடுத்து, செஃப் தீனா உணவை ருசிபார்த்து மதிப்பெண் வழங்கினார். முதல் சுற்றில் தேர்வான போட்டியாளர்கள், இரண்டாவது சுற்று `லைவ் குக்கிங்’ போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.















