செய்திகள் :

நீ கவிதைகளா: `இந்த ஒரு வரிக்கு 3 நாட்கள் எடுத்துக்கொண்டோம்' - பாடலாசிரியர் ஜிகேபி | வரித்துணையே 01

post image

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'.

காதலர் தினம் ஸ்பெஷலாக முதலில் 'நீ கவிதைகளா' பாடல் பற்றி உரையாட பாடலாசிரியர் ஜிகேபி-யின் வீட்டு கதவைத் தட்டினோம். வாஞ்சையுடன் வரவேற்று மலர்ந்த சிரிப்புடன் 'நீ கவிதைகளா' பாடல் பற்றி விவரிக்கத் தொடங்கினார்....

"எப்போதும் ஒவ்வொரு பாடலுக்கும், அது இடம்பெறும் சூழலை இயக்குநர்களோ, இசையமைப்பாளர்களோ விளக்கி விடுவார்கள். ஆனால், 'நீ கவிதைகளா' பாடலைப் பொறுத்தமட்டில், பாடலை முன்பே மான்டேஜ்களாக படம்பிடித்துவிட்டார்கள். நான் எழுதத் தொடங்குவதற்கு முன் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும், இயக்குநர் சரவணனும் 'கதாநாயகியிடம் கதாநாயகன் காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பே, அவனின் வாழ்விலிருந்து அவள் விலகிச் சென்றுவிடுகிறாள்' என்பதை மட்டுமே சொன்னார்கள்.

இதை அவர்கள் விளக்கி முடித்ததுமே எனக்குள் 'நீ கடந்ததுவா, நிகழ்ந்ததுவா, பதில் மொழியே' வரிகள் தோன்றிவிட்டன. திபு நினன் தாமஸ் எப்போதும், பாடலாசிரியர்களிடம் வரிகளைக் கேட்டு வாங்குவார்.

சொல்லப்போனால், அவரொரு மலையாளி. ஆனால், அவருக்கு தமிழ் மொழி மேல் அத்தனை ப்ரியம். நான் எழுதும் வரிகளின் அர்த்தம் அவருக்குப் புரியாது. அதை என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் செய்வார். இந்தப் பாடலில் இடையில் இடம்பெறும் 'முகம் காட்டு நீ, முழு வெண்பனி, ஓடாதே நீ, என் எல்லையே, இதழோரமாய், சிறு புன்னகை, நீ காட்டடி, என் முல்லையே' என்கிற வரியை எழுதுவதற்கு மட்டும் மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டோம்.

திபு நினன் தாமஸ்
திபு நினன் தாமஸ்

முழுப் பாடலை ஒரே நாளில் முடித்துவிட்டேன். ஆனால், இந்த இடைப்பட்ட வரிகளுக்கு மட்டும் மூன்று நாட்கள் செலவழித்தோம். மூன்று நாட்களுக்கு திபு நினன் தாமஸ் என்னை நகரக்கூட விடாமல் எழுத வைத்தார். இந்த வரிக்கு 10 - 15 வெர்ஷன்களும் எழுதியும் அவரை திருப்திப்படுத்த முடியவில்லை.

இத்தனை கடின உழைப்புதான் அந்தப் பாடலை எவர்கிரீன் ஆக்கியிருக்கிறது. நான் இளையராஜா சாருடன் இணைந்து பணிபுரிந்திருக்கிறேன். பாடலின் மெட்டை அவர் லூப்பில் போடாமல், அவரே ஹார்மோனியத்தில் பாடலாசிரியர்களுக்காக மீண்டும் மீண்டும் வாசிப்பார். அப்படி திபு நினன் தாமஸும் இந்தப் பாடலுக்கு மீண்டும் மீண்டும் கைவலிக்க எனக்காக வாசித்துக் கொண்டே இருந்தார். ஏனோ, இந்தப் பாடல் அவருக்கும் அவ்வளவு நெருக்கம்!

அனைத்து மனிதனுக்குள்ளும் ஒரு ஊமைக் காதல் இருக்கும். அதன் பின் வலியும் வேதனையும் அடங்கியிருக்கும். அதற்கு உயிர் கொடுத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே இந்தப் பாடல்.

இயக்குநர் சரவணனும் 'இது கனமான காதல். அதற்கு நீ இதமான ஒரு பாடலை எழுத வேண்டும்.' எனக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்." என்றவர், "இந்தப் பாடலைப் பற்றி பேசும்போதுதான் இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. அதையும் கேளுங்கள்..." எனத் தொடர்ந்தார்,

"நான் சினிமாவில் பல துரோகங்களை சந்தித்துவிட்டேன். அது உண்டாக்கிய வலி ஒரு கட்டத்தில் எனக்கு சலிப்பையே உண்டாக்கிவிட்டது. சினிமாவிலிருந்து விலகிவிடலாம் என யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான், திபு நினன் தாமஸ் இந்தப் பாடலை எழுதுவதற்கு என்னை அழைத்தார். இப்படியான உச்சக்கட்ட சலிப்பில் இருந்தபோது இந்தப் பாடல் மூலம் எனக்கு புதியதொரு லைஃப் அமைத்துக் கொடுத்தார் திபு. என்னுடைய கம்பேக் இதுவாக இருக்கட்டும் என நினைத்துதான் எழுதத் தொடங்கினேன். நான் நினைத்ததுவே நிகழ்ந்தது என நினைக்கிறேன்!" என்றார் சிறு புன்னகையுடன்.

பாடலாசிரியர் ஜிகேபி
பாடலாசிரியர் ஜிகேபி

"நான் எத்தனை பெரிய துயரத்தில் இருந்தாலும், பாடல் எழுதும்போது அச்சமயத்தில் இயக்குநர் சொல்லும் சூழலுக்குள் என்னை புகுத்திவிடுவேன். அப்படி நான் அந்தச் சூழலுக்குள் செல்லும்போது, நேர்மையான பணியைச் செய்து கொண்டிருக்கிறோம் என்கிற முழு திருப்தி எனக்கு ஏற்பட்டுவிடும். ஆனால், நான் செய்த வேலையை நானே ரசிக்கமாட்டேன். நான் எழுதி முடித்த பிறகு அதை மறந்துவிடுவேன். ஆனால், நான் மிகவும் ரசித்து மீண்டும் மீண்டும் கேட்டப் பாடல் இந்த 'நீ கவிதைகளா'.

சொல்லப்போனால், ஒரு முறை இப்பாடல் எனக்குள் புதைந்திருக்கும் பல மனவோட்டங்களை கண்ணீராய் வெளிக்கொண்டு வரச் செய்தது. நான் இந்தப் பாடலைக் கேட்டு தேம்பி தேம்பி அழுததைப் பார்த்த என் மனைவி 'ஏன்டா இப்படி அழுகுற' எனவும் ஆச்சரியப்பட்டுவிட்டார். எனக்கு மட்டுமல்ல பலருக்குள்ளும் இந்தப் பாடல் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.

இந்தப் பாடல் வெளிவந்த பிறகு திடீரென ஒரு நாள் இரவு எனக்கு ஃபேஸ்புக்கில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. நான் அந்த அழைப்பை எடுத்ததும், எதிரிலிருப்பவர் அழத் தொடங்கிவிட்டார். அழுதுக் கொண்டே எனக்கு அளவற்ற அன்பை பொழிந்தவர்,' நான் என் காதலிக்கு இந்தப் பாடலை அனுப்பப் போகிறேன். என் காதல் வெற்றி பெற்றால் உங்களுக்குக் கோவில் கட்டுகிறேன்.' என்றார்.

பாடலாசிரியர் ஜிகேபி
பாடலாசிரியர் ஜிகேபி

மற்றொரு நாள் அவர் காதலியுடன் சேர்ந்துவிட்டார் என நன்றியும் தெரிவித்தார். எனக்கு விருதுகள் என்றைக்கும் முக்கியம் கிடையாது. மக்கள் மனதில் நான் எப்படியான இடத்தைப் பிடிக்கிறேன் என்பதை மட்டுமே கவனத்தில் கொள்வேன். வெற்றி ஏற்படுத்தி தரும் ஆராவாரம் எனக்கு வேண்டாம். இப்படியான அன்பு என்னை தொடர்ந்து எழுத பயணப்பட வைக்கும்.

நிக்கி கல்ராணி - ஆதி ஜோடிக்கான பாடலாகவும் இது அமைந்துவிட்டது. "என்றவர், "பலரைப் போல எனக்கும் பல காதல்கள் இருந்திருக்கின்றன. அவர்களில் ஒருவரை நினைத்துதான் இந்தப் பாடலை எழுதினேன். இந்தப் பாடலை அவரும் கேட்டுவிட்டு 'நீ எனக்காகதான் இந்தப் பாடலை எழுதியிருக்கிறாய் என்பது எனக்கு தெரியும்' என அன்புடன் வாழ்த்துகளைச் சொன்னார்." என்றார்.

(தொடரும்..)

"எனக்கு மெலடி தான் ஸ்ட்ராங்கான ஏரியா!" - ஹாரிஸ் 25 ஸ்பெஷல்! | From Vikatan Archives

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு சினிமாவில் இது 25வது ஆண்டு. அவர் இசையமைப்பாளராக அறிமுகமான 'மின்னலே' திரைப்படம் வெளியாகி பிப்ரவரி மாதத்துடன் 25 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. அப்படமும் இந்த வாரம் ரீ ரிலீ... மேலும் பார்க்க

With Love: "உங்களுடைய பாராட்டும், அன்பான வார்த்தைகளும்.!- விஜய் தேவரகொண்டாவுடன் அபிஷன் ஜீவிந்த்

'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'வித் லவ்'. இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் 'வித் லவ்' படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் 'டூரிஸ்ட் ஃ... மேலும் பார்க்க

My Lord Review: கிட்னி திருட்டிற்கு எதிரான சாமானியனின் போராட்டம்; படமாகவும் வெல்கிறதா மை லார்ட்?

கோவில்பட்டி, மைப்பாறையில் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் முத்து சிற்பியும் (சசிகுமார்), அவரது மனைவி சுசிலாவும் (சைத்ரா) இறந்து போய்விட்டதாக அரசால் போலியான இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்... மேலும் பார்க்க

Balu Mahendra: அழியாத கோலங்கள் `டு' தலைமுறைகள் - பாலுமகேந்திரா திரைப்பயணம் ஒரு பார்வை!

பாலுமகேந்திரா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர். ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றி இருந்தாலும், இயக்குநராக 23 படங்களை அவர் இயக்கி இருக்கிறார். அவரின் நினைவு நாளான இன்று (பிப்.13) அவர் இய... மேலும் பார்க்க