செய்திகள் :

விஜய்யை விமர்சிக்க நடிகையின் பெயர்: `அவதூறு பேசுவது அழகல்ல'- நயினாரை கண்டித்த தமிழச்சி தங்கபாண்டியன்

post image

சேலம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது.

அதில் பேசிய தவெக தலைவர் விஜய், ``கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது போன்ற அனுபவங்கள் எல்லாம் எனக்கு இல்லை.

கட்சி தொடங்கிய அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள்.

முடிந்தால் என்னை போல் புதிய கட்சி தொடங்கி 1 சதவிகித வாக்கு வாங்க முடியுமா?" என்று சவால் விடுத்திருந்தார்.

தவெக விஜய்
தவெக விஜய்

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரனிடம் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், " பாவம்..விஜய் அனுபவமே இல்லாதவர்.

முதலில் வீட்டை விட்டு அவர் வெளியில் வர வேண்டும். (ஒரு பெயரை சொல்லி)நடிகையிடம் இருந்து வெளியில் வந்தால் தான் எல்லாம் நடக்கும்.

நல்ல தலைவர்கள் வழி நடத்திய இயக்கங்கள் பற்றி நல்லதாக அவர் பேச வேண்டும்" என்று நடிகையின் பெயரை பொதுவெளியில் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார்.

நயினாரின் இந்த விமர்சனத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

அந்தவகையில் எம்.பி தமிழச்சி தங்கப் பாண்டியன் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி, அவதூறாகப் பேசுவது அழகல்ல.

பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும்" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ட்ரம்ப் மீது அத்தனை காதல்: மதுரோ டு கிரீன்லேண்ட் - வெள்ளை மாளிகையின் வித்தியாச காதலர் தின போஸ்ட்

இன்று பிப்ரவரி 14 - காதலர் தினம். காதலர் தின வாழ்த்தை ஒவ்வொரு விதமாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் புதிய ஸ்டைலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு காதலர் தின வாழ்த்தைக் கூறியுள்ளது, வெள்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா! - கூட்டணிக்கு இழுத்தடிக்கும் முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு கூட்டணிகளை இறுதி செய்யும் பணிகளில் இறங்கியிருக்கிறது பா.ஜ.க. அதனடிப்படையில் நேற்று திருச்சிக்கு வந... மேலும் பார்க்க

July Charter 2025: இனி பிரதமருக்கு அனைத்திற்கும் 'செக்' - புதிதாக உருமாறும் வங்கதேசம்!

நேற்று முன்தினம் (பிப்ரவரி 12) வங்கதேசம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. வங்கதேசத்தில் மொத்தம் 300 தொகுதிகள் உள்ளன. ஆனால், 12-ம் தேதி 299 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 21... மேலும் பார்க்க

PM RAHAT: 'இதற்கு' ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to

நேற்று புது டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகமான 'சேவா தீர்த்' இந்திய பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அந்தப் புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்ட நான்கு கையெழுத்துகளில் ஒன்று - PM RAHAT (Road A... மேலும் பார்க்க

"அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?"- விஜய்க்கு அதிமுக பதிலடி

சேலம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. ``கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது போன்ற அனுபவங்கள் எல்லாம் எனக்கு... மேலும் பார்க்க