செய்திகள் :

`விஷத்தின் சுவை என்ன?' - சிறுமிகளின் விபரீத எண்ணத்தில் பறிபோன 4 உயிர்; நடந்தது என்ன?

post image

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மோடி பிகா என்ற இடத்தை சேர்ந்த 4 மைனர் பெண்கள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 12 முதல் 15 வயதுட்பட்டவர்கள் ஆவர்.

5 மைனர் பெண்களின் விபரீத ஆசையால் அவர்களில் 4 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். அப்பெண்கள் பறவைகளை கொல்ல பயன்படும் விஷத்தை எடுத்துக்கொண்டு யாரும் இல்லாத காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் இந்த விஷத்தை, `குடித்து பார்த்து சாவுகிறோமா அல்லது உயிரோடு இருக்கிறோமா?' என்று சோதித்து பார்ப்போமா என்று பேசிக்கொண்டனர்.

விஷத்தை குடித்து சுவை பார்த்த தோழிகள்

அதோடு அவர்கள் அதனை தண்ணீரில் கலந்து குடித்து என்ன சுவையில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிவு செய்தனர். அவர்கள் ஐந்து பேரும் விஷத்தை தண்ணீரில் கலந்து குடித்தனர்.

விஷம்

இதில் சிறிது நேரத்தில் 4 பெண்கள் அப்படியே மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த 5வது பெண் உடனே கிராமத்திற்கு ஓடி வந்து நடந்த சம்பவத்தை தெரிவித்தார். ஐந்தாவது மைனர் பெண்ணும் விஷம் குடித்து இருந்ததால் அவரை காப்பாற்ற அவருக்கு வேப்ப எண்ணெய் கொடுத்து குடிக்க வைத்து வாந்தி எடுக்க வைத்தனர்.

இதனால் அப்பெண் உயிர் பிழைத்துக்கொண்டார். அப்பெண்ணிடம் விசாரித்தபோது, ''4 பேரும் எனது கண்முன்பாக கீழே விழுந்து இறந்தனர். நான் சிறிதுதான் குடித்தேன். அதையும் துப்பிவிட்டேன். அதனால் பிழைத்துக்கொண்டேன்''என்று தெரிவித்தார். கிராமத்தினர் வெளியில் தெரியக்கூடாது என்று கருதி உடனே 4 பெண்களின் உடல்களையும் எடுத்து வந்து ஒரே சிதையில் வைத்து தகனம் செய்தனர்.

காதல் பிரச்னையில் தற்கொலை?

ஆனால் 4 பேரும் காதல் பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரி அசோக்குமார் கூறுகையில், ''நாங்கள் நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட பெண்கள் சரஸ்வதி பூஜை நேரத்தில் சில வாலிபர்களுடன் சுற்றி இருக்கின்றனர். இதனால் அவர்களுடன் பெற்றோர் சண்டையிட்டுள்ளனர். எனவேதான் 5 பேரும் ஒன்றாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்''என்றார்.

ஆனால் போலீஸாரின் இக்கருத்தை இறந்து போனவர்களின் உறவினர்கள் மறுத்துள்ளனர். இது குறித்து இறந்து போன சிறுமி ஒருவரின் தந்தை கூறுகையில், ''எனது மகள் இறந்ததால் மகாராஷ்டிராவில் இருந்து வந்துள்ளேன். இறந்து போன அனைவருக்கும் 12 முதல் 15 வயது இருக்கும். அவர்கள் எப்படி இந்த சின்ன வயதில் ஒருவரை காதலிக்க முடியும்?. எதற்காக அவர்கள் அங்கு சென்று விஷம் குடித்தார்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை''என்று தெரிவித்தார்.

க்ரைம்

போலீஸார் இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் தப்பி பிழைத்த மைனர் பெண்ணிடம் போலீஸார் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். 5 பேரும் வீட்டில் விளையாட செல்வதாக சொல்லிவிட்டு சென்றதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் 4 மைனர் பெண்கள் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த காதலி; நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ.படித்து வந்த 24 வயது பெண் தனது தந்தையுடன் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்றார். வேலை முடிந்தவுடன் தனது தந்தையிடம் தனது நண்பர் பியூஷ் தனோடியாவின் ... மேலும் பார்க்க

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து? - இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு... வீட்டில் ரெய்டு!

சென்னை போலீஸ் கமிஷனரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மத்திய குற்றப்பிரிவின் கீழ் விபச்சார தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜலட்சுமி. இவரின் வீடு சென்... மேலும் பார்க்க

வீடு தேடிச் சென்று பஜ்ரங் தள் பிரமுகரைக் குத்திக் கொன்ற மர்ம நபர்; புதுக்கோட்டையில் பரபரப்பு!

புதுக்கோட்டை, திருவப்பூர் குட்செட் சாலையைச் சேர்ந்தவர் மெய்யப்பன். இவர் மகன் மோகன்ராஜ் (வயது: 38). இவர், பஜ்ரங் தள் அமைபின் முன்னாள் மாவட்டத் தலைவராகவும், ராமேஸ்வரம் கோட்டப் பொறுப்பாளராகவும் இருந்தார்... மேலும் பார்க்க

MP: பில்லி சூனிய நம்பிக்கை; பக்கத்து வீட்டுக்காரர்களை வெட்டிப் பலி கொடுத்த நபர்; வெளியான பகீர் தகவல்

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் மனைவிக்குக் கருச்சிதைவு ஏற்பட்டதற்குப் பக்கத்து வீட்டுக்காரர்கள் இரண்டு பேரை கடவுளுக்குப் பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.அங்குள்ள அ... மேலும் பார்க்க

சென்னை: பெண் காவலர் மர்ம மரணம்; உள்ளாடையுடன் சடலம் மீட்பு; கணவரிடம் விசாரணை

சென்னை எழும்பூர் காவல் குடியிருப்பில் வசித்து வருபவர் காவலர் சிலம்பரசன். இவரின் மனைவி புவனேஸ்வரி. இவர், எழும்பூர் குற்றப்பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தார்.சிலம்பரசனுக்கும் புவனேஸ்வரிக்கும் அடிக்கடி... மேலும் பார்க்க

நடிகர் ரன்வீர் சிங்கை தொடர்ந்து சல்மான் கான் மைத்துனர்! தொடரும் பிஷ்னோய் கேங்க் மிரட்டல் சம்பவங்கள்

மும்பையில் நேற்று முன்தினம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆட்கள் பல கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்திருந்தனர். வாட்ஸ் ஆப் மூலம் ரன்வீர் சிங் செ... மேலும் பார்க்க