செய்திகள் :

நம்பிக்கை ஆளுமைகளும் அருமை வாசகர்களும் அளவளாவும் சாதனை மேடை!| இன்று நம்பிக்கை விருதுகள் 2025

post image

நூற்றாண்டுகளாக தமிழ் மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இரண்டறக் கலந்துள்ளது நமது நூற்றாண்டு நாயகன் ஆனந்த விகடன்.

இத்தகைய ஆனந்த விகடனின் நம்பிக்கை விருதுகள் விழா இன்று மாலை 4 மணி அளவில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கிறது. 

நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளை கொண்டாடும் இந்த மாபெரும் விழாவில் 2025-ம் ஆண்டின் டாப் 10  மனிதர்கள், டாப்  10 இளைஞர்கள் மற்றும் நம்பிக்கை விருதுகளில் உச்சமாக கருதப்படும் 'பெருந்தமிழர் விருது' ஆகிய பெருமைமிகு விருதுகள் வழங்கி சிறப்பிக்க உள்ளோம்.

எஸ்.வி.ராஜதுரை
எஸ்.வி.ராஜதுரை

இந்த விழாவில் அளவளாவ வரும் ஆளுமைகளையும், அருமை வாசகர்களையும் உச்சி முகர்ந்து வாஞ்சையுடன் வரவேற்க விகடன் தயாராகிக்கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் யார் யார் விருது பெறப்போகிறார்கள் என்கிற தகவல் உங்கள் பார்வைக்கு இதோ...

பெருந்தமிழர் விருது - எஸ்.வி.ராஜதுரை

85 வயதிலும் பூதக்கண்ணாடியை வைத்துக்கொண்டு தினமும் 12 மணி நேரம் வாசிப்பு, எழுத்து என கால் நூற்றாண்டுக்கும் மேல் போராடிவரும் மனித உரிமைப் போராளி இவர்.

இவருக்கு பெருமைமிகு ‘பெருந்தமிழர் விருது’ வழங்கி மரியாதை செய்கிறது ஆனந்த விகடன்.

டாப் 10 மனிதர்கள்

கோட்டை முதல் குமரி வரை உள்ள அரிய சாதனையாளர்களையும், அருந்தொண்டு புரிந்துவரும் நல்லுள்ளங்களையும் கண்டறிந்து அங்கீகாரம் வழங்கும் இந்த ஆண்டிற்கான டாப் 10 மனிதர்கள் வரிசையில்...

ஆனந்தம் யூத் பவுண்டேஷன் - வழி காட்டும் ஒளி

டாக்டர் முரளி - மனிதநேய மருத்துவர்

அமீர் ஹம்சா - பெருந்தகையாளர்

ஜகபர் அலி - உயிர் கொடுத்து மலை காத்தவர்

கிருஷ்ணம்மாள் - இரும்பு மனுஷி

துளிர் அமைப்பு - குழந்தைகளின் உரிமைக்குரல்

கவிதா - சிங்கப்பெண்

அமீர் ஹம்சா
அமீர் ஹம்சா

காளி வெங்கட் - யதார்த்த திரைக்கலைஞன்

சுப்ரஜா தாரினி - ஆமைகளைக் காக்கும் அன்னை

கணேசன் - அக்கறையான மீட்பன்

ஆகியோர் விருது பெற உள்ளனர்.

டாப் 10 இளைஞர்கள்

ஒவ்வொரு ஆண்டும் துளிர்த்து, மிளிர்ந்து நம்பிக்கையூட்டும் டாப் 10 இளைஞர்களை அடையாளம் காணும் இந்த மேடையில்...

துருவ் விக்ரம் - ஒளிரும் நாயகன்

வீ.ப.ஜெயசீலன் ஐ.ஏ.எஸ் - அன்பின் அதிகாரி

ராஜேஸ்வரி - தடையுடைத்த தங்கை

சாண்டி - ட்ரெண்டிங் மாஸ்டர்

மாயா - பறக்க வைக்கும் ராஜாளி

இசக்கிமுத்து - வியக்க வைக்கும் வேகப்பந்தாளன்

அருண் ராஜீவ் சங்கரன் - சாதனைத் தொழில்நுட்பன்

அபினேஷ் மோகன்தாஸ் - தமிழகத்தின் பெருமிதம்

அலமேலு மங்கையற்கரசி - மானுட நேசகி

`Bro’ Volunteers குழு - பொதுநலப் போராளிகள்

இந்த ஆண்டு இவர்கள் டாப் 10 இளைஞர்கள் விருது பெற உள்ளனர்.

எளியவர்களையும் நேசிக்கும், வழி தெரியாதவர்களுக்கு வழிகாட்டும், எண்ணற்ற துறைகளில் இலக்கை நோக்கி ஓடும் உன்னத மனிதர்களை அடையாளம் காணும் மேடை இன்றைய நம்பிக்கை விருதுகள் மேடை.

அங்கே எல்லோரும் இன்புற்றிருக்க விழா அரங்கில் கூடுவோம் ...கொண்டாடுவோம்.

குறிப்பு: இன்று கலைவாணர் அரங்கில் நடக்கும் 'நம்பிக்கை விருதுகள் 2025'-ல் அனைவரும் கலந்துகொள்ளலாம். வாருங்கள்.!

நம்பிக்கை விருதுகள் 2025 : நேரில் கண்டு நெகிழ வேண்டுமா? பதிவு செய்யுங்க, அனுமதி இலவசம்!

நம்பிக்கைதான் ஆகப்பெரிய வாழ்வாதாரம். அதைப் பற்றிக்கொண்டே மனித இனம் எல்லாப் பேரிடர்களையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது. சக மனிதர்களுக்கு அன்பையும் கருணையும் பகிர்ந்தளித்து, நம்பிக்கையூட்டுகிற அக்... மேலும் பார்க்க