செய்திகள் :

பாஜக-வை எதிர்க்காத விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா? - குழப்பத்தில் கதர்கள்!

post image

2024 நாடாளுமன்றத் தேர்தலில் விலகிச் சென்ற அ.தி.மு.க-வை, என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவந்த டெல்லி பா.ஜ.க., 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வீழ்த்த பல்வேறு அஸ்திரங்களை கையிலெடுத்திருக்கிறது.

ஆனால், அந்த அஸ்திரத்தை லாகவமாக எதிர்கொண்டு வீழ்த்த வேண்டிய காங்கிரஸோ, கூட்டணியை சிதைக்கும் வேலைகளை கச்சிதமாக செய்துவருவதாக கொதிக்கிறார்கள் தி.மு.க புள்ளிகள்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

“2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் கணிசமான வாக்கு சதவிகிதத்தை பா.ஜ.க பெற்றிருந்தாலும் அதனால் எந்தவித பயனும் இல்லை எனக் கருதியது டெல்லி பா.ஜ.க. அதனாலேயே 2026 ஏப்ரலில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு, 2025 ஏப்ரல் 9-ம் தேதியே அ.தி.மு.க-வுடன் கூட்டணியை உறுதிசெய்தார் அமித் ஷா.

மத்தியிலும் 16 மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தாலும்கூட அ.தி.மு.க கூட்டணியை வலுப்படுத்த கூட்டணி பேச்சுவார்த்தை, ராஜ்ய சபா ஆஃபர், கணிசமான ஸ்வீட் பாக்ஸ் என்று வாடிவாசலில் நின்று ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீரர்களைப் போல் சாதுர்யமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ சாணக்கியத்தனமாக இல்லாமல் ஆளும் கூட்டணி தலைமையான தி.மு.க-வை சீண்டிப் பார்க்கிறது” என்கிறார்கள் சில அரசியல் நோக்கர்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், “தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து 10 எம்.பி-க்களையும், 17 எம்.எல்.ஏ-க்களையும் பெற்றிருக்கிறது காங்கிரஸ். அக்கட்சியின் வலிமைக்கும் கள செயல்பாடுகளுக்கும் இந்த எண்ணிக்கை சற்று அதிகம் என்பதே சக கூட்டணிக் கட்சியினரின் கருத்து. கட்சியை வலுப்படுத்தும் வேலையை செய்யாமல் கூடுதல் சீட், அதிகாரப் பகிர்வு என்று கம்பு சுற்றும் சில காங்கிரஸ் புள்ளிகள், தி.மு.க கூட்டணியை முறித்துக் கொண்டு த.வெ.க-வுடன் கூட்டணி அமைத்துவிட தீயாய் வேலை செய்துவருகிறார்கள்.

காங்கிரஸ் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின்
காங்கிரஸ் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின்

சொல்லப்போனால், இந்தியாவிலேயே சமரசங்களின்றி பா.ஜ.க எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் மாநிலக் கட்சிகளில் தி.மு.க முதன்மையானது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க சக இந்தியா கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் தயங்கின. ஆனால் முதல் ஆளாக ஏற்றுக்கொண்டது தி.மு.க-தான். ‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்’ என பா.ஜ.க ருத்ரதாண்டவம் ஆடிவரும் நிலையிலும் தங்கள் கூட்டணியில் காங்கிரஸை வைத்திருக்கிறது தி.மு.க. ஆனாலும், நேற்றைக்கு வந்த த.வெ.க-வுடன் கூட்டணிக்குப் போக வேண்டும் என ஆலோசனை நடத்திவருகிறார்கள். அது சாத்தியப்படுமானால், அதனால் பயனடையப் போவது என்.டி.ஏ கூட்டணிதான்” என பகீர் கிளப்பினர்.

த.வெ.க-வுடன் கைகோர்க்க முடியுமா?

கூட்டணி விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸின் மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். “2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க இல்லாமல் பா.ஜ.க-வுக்கு என்ன நிலை ஏற்பட்டது என்பதை நேரடியாகப் பார்த்தும் திராவிடக் கட்சிகள் அல்லாத கூட்டணி குறித்து ஆலோசிக்கிறது காங்கிரஸ் தலைமை.

அதிலும் கட்சி ஆரம்பித்ததிலிருந்து பா.ஜ.க-வை கண்டித்து தெருமுனைக் கூட்டம்கூட நடத்தாத விஜய்யை நம்பி கூட்டணிக்குப் போக முடியுமா? மதச்சார்பின்மைக்கு குந்தகம் விளைவித்த திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் வாய்திறந்தாரா? மத்தியிலும் மாநிலத்திலும் பட்டியலின தலைவர்களை கொண்டிருக்கும் காங்கிரஸ், ஆணவக் கொலை விவகாரத்தில் நழுவிய த.வெ.க-வுடன் கைகோர்க்க முடியுமா?

 விஜய்
விஜய்

டெல்லி தலைமை புரிந்துகொள்ளாதது ஏன்?

அவ்வளவு ஏன்... கரூர் விவகாரம் சி.பி.ஐ விசாரணைக்கு மாறியபோது ‘நீதி வென்றது’ என்றார் விஜய். `ஜனநாயகன்’ படத்தை பா.ஜ.க முடக்கி வைத்திருக்கும் சூழலில் பா.ஜ.க-வை கண்டிக்காமல், அதற்கு ராகுல் காந்தி குரல் கொடுத்தபோதும் நன்றிகூட சொல்ல பயந்த விஜய்யுடன் கைகோத்து பாசிசத்தை காங்கிரஸ் வீழ்த்தப் போகிறதா.. மறுபக்கம், ‘த.வெ.க-வுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது’ என்ற சர்வேக்களை நம்பி தி.மு.க கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியே போனால் தி.மு.க கூட்டணிக்கு கிடைத்த இஸ்லாமிய, பட்டியலின வாக்குகள் காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணிக்கு கணிசமாகப் பிரியும். அப்படிப் பிரிந்தால் என்.டி.ஏ கூட்டணிக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். அதை டெல்லி தலைமை புரிந்துகொள்ளாதது ஏன்.. ஆக, ‘நாமளும் தோற்கணும்.. தி.மு.க-வும் தோற்கணும்’ என்ற காங்கிரஸின் விநோத கணக்கு புரியாத புதிராகவே இருக்கிறது” என்றனர்.

ராகுல் காந்தியும்தான் பொறுப்பு!

நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “பா.ஜ.க-வை வீழ்த்துவது தி.மு.க-வின் வேலை என்ற மனநிலையில்தான் காங்கிரஸ் இருக்கிறது. தி.மு.க கூட்டணியில் நிலவும் பிரச்னைக்கு ராகுல் காந்தியும்தான் பொறுப்பு. தி.மு.க உதவி இல்லாமல் ராகுல் காந்தி கூட்டத்துக்கு காங்கிரஸால் ஆள் திரட்ட முடியாத நிலைதான் அக்கட்சி உள்ளது” என்றார்.

கோபண்ணா

இன்னும் ஒரு வாரத்தில் அணைந்துபோகும்!

காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணாவிடம் பேசினோம். “பாசிச பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற புள்ளியில் ராகுல் காந்தியும் முதல்வர் ஸ்டாலினும் மிகத் தெளிவாக இருப்பதால்தான் நீண்டகாலமாக தி.மு.க-வும் காங்கிரஸும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இதை புரிந்துகொள்ளாத ஒருசிலர் கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிவருகிறார்கள். அவர்கள் பேச்சுகள் இன்னும் ஒரு வாரத்தில் அணைந்துபோகும்” என்றார்.

சென்னை தொகுதிகளுக்கு மல்லுக்கட்டும் கூட்டணிக் கட்சிகள்... கறார் காட்டும் திமுக!

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வரும் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகரில் ஒருசில தொகுதிகளை கைபற்ற காய்நகர்த்தி வருகிறார்கள் வி.சி.க, கம்யூனிஸ்ட், ... மேலும் பார்க்க

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்!

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது. அதன் கீழ், சில நடைமுறைகள் மாறும் அல்லவா? அப்படிப் பான் கார்டு எங்கெங்கு தேவை என்பதைப் பார்க்கலாம்... வாங்க...1. முன்பு, ஒரே ந... மேலும் பார்க்க

கலைஞர் உரிமைத் தொகை: ``வங்கி கணக்கில் ரூ.5000" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில... மேலும் பார்க்க

தவெக: சேலம் விஜய் சந்திப்பு; 51 நிபந்தனைகள்; 5,000 பேருக்கு அனுமதி; செங்கோட்டையன் சொல்வது என்ன?

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்திற்குக் கடந்த டிசம்பர் மாதம் அனுமதி கேட்டு தவெக-வினர் போலீஸில் மனு அளித்திருந்தனர். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தக் கூட்டத்துக்கு போலீஸார் தரப்பி... மேலும் பார்க்க

`டி.என்.பி.எஸ்.சி.யில் அரசியல் தலையீடா?' - முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் என்ன சொல்கிறார்?

கடந்த ஞாயிற்றுக் கிழமை டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டிருந்த குரூப் 2 தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்ட‌ நிலையில், தேர்வாணையத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற காவல்துறை அத... மேலும் பார்க்க

TNPSC: நிரப்பப்படாத பதவிகள், ஆளுநர்; அரசு மோதல் - சரி செய்யப்பட வேண்டியது தேர்வாணையம்தான்!

கடந்த ஞாயிற்றுக் கிழமை டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் 2 தேர்வு ரத்தானது அல்லவா? தேர்வாணைய வரலாற்றிலேயே தேர்வு நாள் அன்று காலையில் தேர்வு ரத்தாவது இதுதான் முதல் முறை. 'தொழில்நுட்பக் கோளாறு, தவறுக்கு வருந... மேலும் பார்க்க