செய்திகள் :

"அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?"- விஜய்க்கு அதிமுக பதிலடி

post image

சேலம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது.

``கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது போன்ற அனுபவங்கள் எல்லாம் எனக்கு இல்லை.

கட்சி தொடங்கிய அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள்.

முடிந்தால் என்னை போல் புதிய கட்சி தொடங்கி 1 சதவிகித வாக்கு வாங்க முடியுமா?" என்று சவால் விடுத்திருந்தார்.

தவெக விஜய்
தவெக விஜய்

இந்நிலையில் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், " நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் அங்கிள்? அப்பா மூலமா சினிமா உள்ள வந்தீங்க...

வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார், புரட்சிக் கலைஞர், ஆகியோரைப் பார்த்து காப்பி பேஸ்ட்....

அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் மரபைத் திருடி, காப்பி பேஸ்ட்... இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?

சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா?

உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர் தானே நீங்கள்?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த முதல் காட்சி டிக்கெட்டெல்லாம் ரூ.2000-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா?

அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 ஆண்டு கொள்ளை அனுபவம் இருக்கு தானே?" என்று விஜய்யின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது.

விஜய்யை விமர்சிக்க நடிகையின் பெயர்: `அவதூறு பேசுவது அழகல்ல'- நயினாரை கண்டித்த தமிழச்சி தங்கபாண்டியன்

சேலம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய தவெக தலைவர் விஜய், ``கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது ... மேலும் பார்க்க

PM RAHAT: 'இதற்கு' ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to

நேற்று புது டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகமான 'சேவா தீர்த்' இந்திய பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அந்தப் புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்ட நான்கு கையெழுத்துகளில் ஒன்று - PM RAHAT (Road A... மேலும் பார்க்க

இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained

இந்தியா, சீனாவிற்கு இடையே எல்லைப் பிரச்னையைத் தாண்டி... ஆசிய நாடுகளிலேயே யார் டாப் இடத்தைப் பிடிப்பது என்கிற போட்டி பல தசாப்தங்களைக் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கிறன. இதன் விளைவு தான் அடிக்கடி இந்தியா... மேலும் பார்க்க