செய்திகள் :

அமெரிக்கா, இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான் - தொடரும் பதற்றம்!

post image

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து இன்று தாக்குதலை நடந்தி இருக்கின்றனர். தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

ஈரான் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த அதிபர் ட்ரம்ப், " ஈரான் அச்சுறுத்தலை முறியடிப்போம். ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கி இருக்கிறோம்.

இஸ்ரேல் - ஈரான் பதட்டம்
இஸ்ரேல் - ஈரான் பதட்டம்

அந்த நாடு அணு ஆயுத வலிமை பெறுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அந்த நாடு அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஏவுகணைகளை உருவாக்க வேலை செய்து வருகிறது.

இதனால் நாங்கள் பெரிய போர் நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறோம். ஈரான் ஆட்சியின் உடனடி அச்சுறுத்தல்களை நீக்குவதன் மூலம் அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதில் தாக்குதலை ஈரான் தொடங்கி இருக்கிறது. இஸ்ரேல், பஹ்ரைன், குவைத், அபுதாபி, கத்தாரைத் தொடர்ந்து சவுதி அரேபியா தலைநகர் ரியாதிலும் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை தொடங்கி இருக்கிறது.

இஸ்ரேல் - ஈரான் பதட்டம்
இஸ்ரேல் - ஈரான் பதட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படைத் தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது ஈரான்.

இந்தத் தாக்குதலால் பதற்றம் நிலவி வரும் நிலையில் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கத்தார், பஹ்ரைன் நாடுகள் மக்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

மேலும் போர் பதற்றம் காரணமாக கத்தார் வான்பரப்பு மூடப்பட்டதைத் தொடர்ந்து, கத்தார் ஏர்வேஸ் தனது அனைத்து விமானச் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரானை தாக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்; 'நண்பர்களுக்கு' மோடி ஆதரவா?- சாடும் எதிர்க்கட்சிகள்; காரணம் என்ன?

இப்போது அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானைத் தாக்கி வருகின்றன.இந்த நேரத்தில் இந்திய எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியைச் சாடி வருகின்றன.ஈரானை அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குவதற்கும், பிரதமர்‌ மோடியை இங்கே எதிர்க்கட... மேலும் பார்க்க

'காங்கிரஸின் சந்திப்பை தவிர்த்த முதல்வர்; பதட்டமடைந்த செல்வப்பெருந்தகை!'- இறுக்கும் டி.ஆர்.பாலு & கோ

கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளால் அனலாக தகித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம். சீட்டை குறைத்து விடுவார்களோ என்கிற பதட்டத்தில் இருக்கும் வைகோ ஒரு துண்டு சீட்டோடு அறிவாலயம் வர, இன்னொ... மேலும் பார்க்க

ஆந்திரா: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 20 பேர் உயிரிழந்த சோகம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே சூர்யஸ்ரீ என்ற பெயரில் பட்டாசு ஆல... மேலும் பார்க்க

காங்கிரஸை காலி செய்த திமுக; இந்திய அரசியலைத் தீர்மானித்த திருவண்ணாமலை இடைத்தேர்தல்|அரசியல் ஆடுபுலி 7

திருவண்ணாமலை இடைத் தேர்தல்அரசியல் ஆடுபுலி 07ஒரு இடைத்தேர்தல், இந்திய அரசியலின் ஆடுபுலி ஆட்டத்தையே மாற்றியமைத்தது என்றால், அது திருவண்ணாமலை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல் என்று கூறலாம். முதலமைச்சர்களாக ... மேலும் பார்க்க