Types of Money Funds Explained Simply | SGB | IPS Finance - 449
ஈரானை தாக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்; 'நண்பர்களுக்கு' மோடி ஆதரவா?- சாடும் எதிர்க்கட்சிகள்; காரணம் என்ன?
இப்போது அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானைத் தாக்கி வருகின்றன.
இந்த நேரத்தில் இந்திய எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியைச் சாடி வருகின்றன.
ஈரானை அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குவதற்கும், பிரதமர் மோடியை இங்கே எதிர்க்கட்சிகள் சாடுவதற்கும் காரணம் - மோடியின் சமீபத்திய பயணம்.
கடந்த 25, 26-ம் தேதிகளில் இஸ்ரேலுக்கு சென்றிருந்தார் மோடி. அங்கே அவருக்கு இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய விருதான, 'நெசெட் பதக்கத்தின் சபாநாயகர்' அவருக்கு வழங்கப்பட்டது.

அதெல்லாம் சரி... இதில் மோடியைச் சாடுவதற்கான காரணம் என்ன என்பதற்கு பதில் சொல்கிறது எதிர்க்கட்சியான காங்கிரஸ் எக்ஸ் பதிவு...
"மிஸ்டர் மோடி தன்னுடைய இரண்டு இஸ்ரேல் பயணத்தை முடித்த பிறகு, இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
இப்படியொரு பதற்றம் உருவாகும் என்று கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது.
இருந்தும், மோடி இஸ்ரேல் சென்றது அவரது கோழைத்தனத்தைக் காட்டுகிறது.
இது இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்பதைக் காட்டுகிறது. இதற்கு அவர் விருது கூட பெற்றிருக்கிறார்.
இந்த இஸ்ரேல் பயணம் அவமானகரமானது. மேலும் மோடியின் 'நல்ல நண்பர்கள்' இந்தப் போரைத் தொடங்கியுள்ளது மிகவும் மோசமானது".
மோடியின் இஸ்ரேல் பயணம் இந்தியா இஸ்ரேலுக்கு சாதகமாக உள்ளதைப் போல உலக அரங்கில் காட்டுகிறது. இதை மத்திய அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று பரவலாகக் கேள்வி எழுந்துள்ளது.















