செய்திகள் :

காளான் வளர்ப்பில் மாதம் 'ரெண்டு லட்சம் டேர்ன் ஓவர்' - கெத்துக் காட்டும் எம்.பி.ஏ பட்டதாரி கெளரி!

post image

"பிசினஸ்ல தினம் தினம் சவால்களைச் சந்திக்கிறது சாதாரணமானது. பிரச்னைகளை எப்படி சமாளிக்றோங்கிறதுல இருக்கு நமக்கான வெற்றி. நிறைய நஷ்டங்களை சந்திச்சாச்சு. ஆனாலும், முயற்சிகள் தொடருது. முயற்சிகள் வெற்றியை நோக்கி நகர்த்துது" உற்சாகம் பொங்கப் பேசுகிறார் கெளரி.

காளான் வளர்ப்பு

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கெளரி. எம்.பி. ஏ பட்டதாரியான இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக காளான் உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டலில் ஈடுபட்டு வருகிறார். நெய்வேலியில் காளான் மூலம் தயாரிக்கும் பொருள்களை விற்கும் உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அரியலூர், மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் பல பெண்களை ஒருங்கிணைத்து தினமும் 100 கிலோ காளான் வரை அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறார். கடலூரில் சுமார் 750 சதுர அடி உள்ள அந்தப் பண்ணையில், அறுவடை செய்த காளான்களை எடை போடுவதில் பிஸியாக இருந்த கெளரியிடம் பேசினோம். 

"எனக்குச் சொந்த ஊர் கடலூர், பெத்தாங்குப்பம் கிராமம். விவசாயக் குடும்பம். திருமணத்துக்குப் பிறகு என் கணவரோடு சிங்கப்பூரில் செட்டில் ஆயிட்டேன். அங்கேதான் பல வண்ண காளான்களைப் பார்த்தேன். அதனால காளான் வளர்ப்பில் ஈர்ப்பு வந்துச்சு. சிங்கப்பூரில் இருந்து கடலூர் வந்ததும் அரசாங்கம் சார்பா இலவசமாக  நடத்தப்பட்ட  காளான் வளர்ப்பு தொடர்பா பயிற்சி வகுப்பில் கலந்துக்கிட்டேன். காளான் வளர்ப்பை கத்துக்கிட்டு பிசினஸ் பண்ண ஆரம்பிச்சேன்" என்ற கெளரி தொழில் தொடங்கியது பற்றிப் பேச ஆரமபித்தார். 

காளான் வளர்ப்பு

"ஒரு லட்ச ரூபாய் முதலீட்டுல 360 சதுர அடியில் 2017 - ம் வருஷம் காளான் வளர்ப்பை ஆரம்பிச்சேன். சிப்பிக் காளான், பால் காளான் வகைகளை வளர்க்கத் தொடங்கினேன். முதல் சில மாசங்கள்ல உழைப்பைக் கொட்டியும் நல்ல அறுவடை கிடைக்கல. விதை கொடுத்தவங்ககிட்ட கேட்டா, 'நீங்க ஒழுங்கா பராமரிக்கல'னு சொல்லிட்டாங்க. ஆனா, தரமான விதைகளைக் கொடுக்காம என்னை ஏமாத்திட்டாங்கன்னு லேட்டா தான் புரிஞ்சுது. பிசினஸ் ஆரம்பிச்ச சில மாசங்கள்லேயே கிட்டத்தட்ட எண்பதாயிரம் ரூபாயை இழந்தேன். ஆனாலும் நம்பிக்கையை கைவிடல. பிறகு எங்க ஏரியாவுல உள்ள வேளாண் அறிவியல் மையத்துலேருந்து விதைகளை வாங்கி பிசினஸை தொடர்ந்தேன். 

காளான் வளர்க்கிறது லேசான காரியம் இல்ல. கொஞ்சம் கவனக்குறைவா இருந்தாலும் மொத்த காளானும் பூஞ்சைத்தொற்று வந்து வீணாகிடும்.  பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகுதான் காளான் வளர்ப்புல உள்ள சூட்சமங்கள் பிடிபட்டுச்சு. 2021-லேருந்து விதைகளையும் நானே உற்பத்தி பண்ண ஆரம்பிச்சேன்" என்ற கெளரி, பாலிதீன் பைகளில் வைக்கோலை அடைத்துக்கொண்டே பேச்சைத் தொடர்ந்தார்.  

காளான் வளர்ப்பு

"வெவ்வேறு ரகங்கள்ல உற்பத்தி பண்ண காளானின் முதல் அறுவடையை எங்க பகுதி மக்களுக்குதான் கொடுத்தேன். காளான்கள் பல்வேறு நிறங்கள்ல இருந்ததால செயற்கை கலர் எதுவும் பயன்படுத்திருக்கோம்னு நினைச்சு வாங்குறதுக்கு மக்கள் தயக்கம் காட்டுனாங்க. இது காளான்ல ஒரு ரகம்னு சொல்லிப் புரியவெச்சதும் வாங்கினாங்க. அடுத்தபடியா கடைகளுக்கு, வீடுகளுக்குனு விற்பனை பண்ண ஆரம்பிச்சேன்.

எங்க பகுதியில் உள்ள வேளாண் அறிவியல் மையம் மூலமாக நூற்றுக்கும் அதிகமானவங்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சிகள் கொடுத்திருக்கேன். என்கிட்ட பயிற்சி எடுத்தவங்க இன்னிக்கு காளான் உற்பத்தியை தங்களோட பிசினஸாக மாத்தியிருக்காங்க. அவங்களுக்கு உற்பத்தி மட்டுமில்லாம, விற்பனை, மார்க்கெட்டிங் போன்றவற்றுக்கும்  உதவுறேன். அவங்க உற்பத்தி பண்ற காளான்களை நானே கொள்முதல் பண்ணி விற்பனையும் பண்ணிக்கொடுக்குறேன். நாங்க உற்பத்தி பண்ற காளான்களை ஹோட்டல்கள், கடைகளுக்கு விற்பனைக்கு கொடுக்குறோம். கடந்த எட்டு மாசமா நெய்வேலியில் காளான் உணவு கடை ஒன்றை ஆரம்பிச்சிருக்கேன். காளான் சூப், கிரேவி, தோசை, பிரியாணினு காளான் மூலம் செய்யக்கூடிய உணவுகளை மட்டும் தயார் பண்ணி விற்பனை பண்ணிட்டு இருக்கேன். எங்க தேவைகள் போக மீதமுள்ள காளானில் பிஸ்கட், ஊறுகாய், சூப் மிக்ஸ்னு மதிப்புக்கூட்டல் செஞ்சும் விற்பனை பண்ணிக்கிட்டு இருக்கோம்.

காளான் வளர்ப்பு படுக்கைகள்

ஒரு கிலோ காளான் 200 ரூபாய் வரை விலை போகுது. என் கணவரும் என்கூட சேர்ந்து காளான் வளர்ப்பு பிசினஸ்தான் பண்றாரு. ஆறுபேர் வேலைக்கும் இருக்காங்க. இப்போ என் பிசினஸ் மூலமா மாசம் ரெண்டு லட்சம் வரை டேர்ன் ஓவர் பண்றேன். 'எம்.பி. ஏ படிச்சுட்டு வைக்கோல் கொட்டகைனு தேவையில்லாத வேலை பார்க்குது'னு சொன்னவங்களுக்கு என் வெற்றி மூலமா பதில் கொடுத்திருக்கேன். உழைக்கத் தயாரா இருந்தா அதுக்கேத்த கூலி நிச்சயம் கிடைக்கும். எந்த வேலையும், உழைப்பால் கிடைக்கும் எந்த வருமானமும் வெற்றியின் வெளிப்பாடே'' என்று கெத்தாக சொல்கிறார் கெளரி. 

பிரேக் - அப்பில் இருந்து மீள அடுத்த ரிலேஷன்ஷிப் - சரியான முடிவா?

ரிலேஷன்ஷிப் பிரேக் அப் ஆனவுடன் பலரும் எதிர்கொள்ளும் ஒரு சவால் அடுத்த ரிலேஷன் ஷிப். முதல் ரிலேஷன் ஷிப் போல் அடுத்தடுத்த ரிலேஷன்ஷிப் உடனடியான ஒரு ஈர்பை தரும் என்று சொல்லிவிட முடியாது. அதே நேரம் இன்னும் ... மேலும் பார்க்க

"100 நாளும் கடன் வாங்கித்தான் சமாளிச்சாங்க; இப்பவும் கடனுக்காத்தான் ஓடுறேன்" - பிக்பாஸ் சுபிக்‌ஷா

'ஹாய் மக்களே, நான் உங்கள்மீனவப்பொண்ணு சுபி' என கடல் விலாக் செய்யும் தமிழகத்தின் முதல் பெண், யூடியூபராக அறிமுகம் ஆனவர் மீனவப் பொண்ணு சுபிக்‌ஷா. பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் ... மேலும் பார்க்க

Week end-ல் மொபைல் போன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்?

ஸ்மார்ட்போன் நம் கையில் இருக்கும் வரை, வார இறுதி நாட்கள் ஓய்வு நாட்களாக இல்லாமல், வெறும் ஸ்க்ரோலிங் நாட்களாகவே முடிகின்றன. இதிலிருந்து விடுபட சில வழிகள்:* உங்கள் கவனத்தை சிதைக்கும் சமூக வலைதள நோட்டிபி... மேலும் பார்க்க

`அரசுப் பள்ளி மாணவர்களின் 50 நூல்கள்' இறையன்பு ஐ.ஏ.எஸ் வழிகாட்டுதலில் சாதித்த கண்ணகி நகர்!

சென்னைக்குள் இருந்து வேர்பிடுங்கி எறியப்பட்ட அடித்தட்டு மக்களின் புகலிடமாக இருக்கிறது கண்ணகி நகர். இந்தப் பகுதியில் 1,20,000 பேர் வசிக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கல்வி, விளையாட்டு, என ... மேலும் பார்க்க

`அன்னைக்கு நானே நடந்த மாதிரி சந்தோஷப்பட்டேன்; ஒரு நாளைக்கு 1,500 ரூபா.!' - நெகிழும் `நம்பிக்கை' ராஜா

திருச்சி மாவட்டம், மேலப்புதூரில் உள்ள கான்வென்ட் ரோடு. பள்ளிக் குழந்தைளை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் பரபரப்பாக இருந்தது அந்தச் சாலை. காலை ஒன்பது மணிக்கு, தன் வண்டியில் வந்து இறங்கினார் அந்த ஆண். கால்... மேலும் பார்க்க

காலத்தால் அழியாத நற்பெயரையும் புகழையும் ஈட்டுவது எப்படி? - மனிதத்தின் உண்மையான முகம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க