செய்திகள் :

'காங்கிரஸின் சந்திப்பை தவிர்த்த முதல்வர்; பதட்டமடைந்த செல்வப்பெருந்தகை!'- இறுக்கும் டி.ஆர்.பாலு & கோ

post image

கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளால் அனலாக தகித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம். சீட்டை குறைத்து விடுவார்களோ என்கிற பதட்டத்தில் இருக்கும் வைகோ ஒரு துண்டு சீட்டோடு அறிவாலயம் வர, இன்னொரு பக்கம் அறிவாலயத்தில் காங்கிரஸாரை சந்திக்க வாய்ப்பிருந்து அதை தவிர்த்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

சோடங்கர் & செல்வப்பெருந்தகை
சோடங்கர் & செல்வப்பெருந்தகை

திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே இழுபறியாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்று காங்கிரஸின் குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது திமுக. கிரிஷ் சோடங்கர் நேற்றிரவு 10 மணிக்கு மேல் சென்னை வந்து சேர்ந்திருந்தார். இன்று ஒரே நாளில் 7 கட்சிகளுடன் கூட்டணி பேச முடிவெடுத்திருந்தது திமுக.

காங்கிரஸூக்குதான் முதல் ஸ்லாட். காலை 10:30 - 11 க்குள்ளாக அறிவாலயம் வருமாறு காங்கிரஸூக்கு தகவல் சொல்லப்பட்டிருந்தது. சரியாக 11:05 க்கு காங்கிரஸ் குழுவினுடைய கார் அறிவாலயத்துக்குள் நுழைந்தது. ஸ்டாலின் அறைக்கு எதிரே உள்ள மீட்டிங் ஹாலில் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உட்பட திமுகவின் தொகுதி பங்கீடு குழு தயாராக இருந்தது. 11:15 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 12:20 வரை நீண்டது. காங்கிரஸ் பேசிக் கொண்டிருக்கும் போதே தனியரசு, கொங்கு ஈஸ்வரன், வேல்முருகன், தமீமுன் அன்சாரி, வைகோ போன்றோரும் அறிவாலயம் வந்து சேர்ந்தனர்.

காங்கிரஸ் குழு
காங்கிரஸ் குழு

முதல்வர் அறிவாலயம் வருவது திட்டத்திலேயே இல்லை. ஆனால், திடீரென மதியம் 12:15 மணியளவில் அறிவாலயம் பரபரப்பானது. வைகோ கேட்டுக் கொண்டதால் மதியம் 12:30 க்கு அப்பாய்ண்மெண்ட் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். முதல்வரின் கான்வாய்க்காக போலீசார் ரூட்டை க்ளியர் செய்தனர். சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் குழு உள்ளே இருக்கும் போது முதல்வர் வருகை தந்தால் இருதரப்பும் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. நாளை முதல்வரின் பிறந்தநாள் என்பதால் வாழ்த்துகளை கூட பரிமாறிக் கொள்வார்கள் என கூடியிருந்த செய்தியாளர்களும் அலர்ட் ஆகினர். ஆனால், மதியம் 12:25 க்கு பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு செல்வப்பெருந்தகை, சோடங்கர் உட்பட்ட காங்கிரஸ் குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. அத்தனை பேர் முகத்திலும் இறுக்கம். செல்வப்பெருந்தகை மட்டுமே பேசினார்.

'எங்களுக்கு என்ன தேவையோ அதை கேட்டோம். பேச்சுவார்த்தை சுமுகமாக செல்கிறது' என்றார். சோடங்கரை பேசவே விடவில்லை. 'பவர் ஷேரிங்' பற்றி பேசினீர்களா என்கிற அணுகுண்டு கேள்வியை பத்திரிகையாளர்கள் வீச பதறிப் போன செல்வப்பெருந்தகை சோடங்கரை மடக்கி அணைத்து அப்படியே வெளியில் நகர்த்தி சென்றுவிட்டார். காங்கிரஸினரின் கார் கிளம்பிய அடுத்த பத்தே நிமிடங்களில் முதல்வரின் கான்வாய் அறிவாலயத்துக்குள் நுழைந்தது. வைகோ, வேல்முருகன் போன்ற மற்ற கூட்டணி கட்சியினரை சந்தித்த முதல்வர் காங்கிரஸ் குழுவை மட்டும் சந்திப்பதை வேண்டுமென்றே தவிர்த்திருந்தார். இருதரப்புக்கும் இடையேயான இழுபறியில் இன்னும் ஒரு சுமுகமான புள்ளி எட்டப்படவில்லை என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.

திமுக குழு
திமுக குழு

'தேமுதிக, மக்கள் நீதி மய்யம், SDPI, கொங்கு இளைஞர் பேரவை என நிறைய புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்துவிட்டன. நாங்களே கடந்த முறையை விட குறைவான சீட்களில்தான் நிற்கப்போகிறோம். நீங்களும் பார்த்து முடிவெடுங்கள். மத்தியில் பாஜக வலுவாக இருக்கிறது. இந்த சமயத்தில் நம்முடைய கூட்டணி எண்ணிக்கைகளை கடந்து தொடர்வது முக்கியம். பார்த்து முடிவெடுங்கள்' என திமுகவின் பேச்சுவார்த்தைக் குழு கறாராக கூறியதால்தான் 'இவ்வளவு அலப்பறை கொடுத்தும் திமுக மசியவில்லையே...' என்கிற மனவருத்தத்தில் அப்செட்டாக அறிவாலயத்தை விட்டு கிளம்பியிருக்கிறது காங்கிரஸ் குழு. பரஸ்பரமாக எந்த நல்ல முடிவும் எட்டப்படாததால்தான் முதல்வரும் காங்கிரஸை சந்திப்பதை தவிர்த்ததாக கிசுகிசுக்கின்றனர்.

காங்கிரஸிடம் 19 தொகுதிகள் என பேச்சுவார்த்தையை தொடங்கியதால்தான் சோடங்கர் குழு கடும் அப்செட் என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.

தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, 'காயிதே மில்லத் பெயரில் பல்கலைகழகம் அமைக்கக் கோரிக்கை வைத்து முதல்வரை சந்தித்தேன்' என விசித்திரமாக கம்பு சுற்றினார் வைகோ. மதிமுகவின் அவைத்தலைவர் அர்ஜூன ராஜ் தலைமையில் சில நாட்களுக்கு முன்பு மதிமுகவின் குழுவினர் திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தனர்.

முதல்வர்
முதல்வர்

அப்போது மதிமுக இந்த முறை தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றும் ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டுமென்றும் கேட்டிருந்தனர். ஆனால், திமுக கடந்த முறையை போன்றே அல்லது அதற்கும் குறைவாகவே டீலை முடிக்க பார்க்கிறது. இதனால்தான் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவதற்கு முன்பு முதல்வரை அறிவாலயத்திலேயே சந்தித்து தங்களின் எதிர்பார்ப்பை அவரின் காதில் போட்டு வைத்திருக்கிறார் வைகோ. அதனால்தான் சீட் பங்கீடு பற்றி எதுவும் பேசினீர்களா என்கிற கேள்விக்கு, 'அவைத்தலைவர் என்ன சொன்னாரோ அதுதான் எங்களின் நிலைப்பாடு' என ஒரே வரியில் முடித்துவிட்டு வண்டியை கிளப்பினார்.

வைகோ
வைகோ

புதிய வரவாக நிறைய கட்சிகளை உள்ளே இழுத்துப் போட்டுவிட்டு இப்போது தொகுதி பங்கீடின் போது தலைவலியை அனுபவதித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம்.

ஈரானை தாக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்; 'நண்பர்களுக்கு' மோடி ஆதரவா?- சாடும் எதிர்க்கட்சிகள்; காரணம் என்ன?

இப்போது அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானைத் தாக்கி வருகின்றன.இந்த நேரத்தில் இந்திய எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியைச் சாடி வருகின்றன.ஈரானை அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குவதற்கும், பிரதமர்‌ மோடியை இங்கே எதிர்க்கட... மேலும் பார்க்க

அமெரிக்கா, இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான் - தொடரும் பதற்றம்!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து இன்று தாக்குதலை நடந்தி இருக்கின்றனர். தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஈரான் மீது அமெரிக்... மேலும் பார்க்க

ஆந்திரா: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 20 பேர் உயிரிழந்த சோகம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே சூர்யஸ்ரீ என்ற பெயரில் பட்டாசு ஆல... மேலும் பார்க்க

காங்கிரஸை காலி செய்த திமுக; இந்திய அரசியலைத் தீர்மானித்த திருவண்ணாமலை இடைத்தேர்தல்|அரசியல் ஆடுபுலி 7

திருவண்ணாமலை இடைத் தேர்தல்அரசியல் ஆடுபுலி 07ஒரு இடைத்தேர்தல், இந்திய அரசியலின் ஆடுபுலி ஆட்டத்தையே மாற்றியமைத்தது என்றால், அது திருவண்ணாமலை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல் என்று கூறலாம். முதலமைச்சர்களாக ... மேலும் பார்க்க

மதுரை: பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக் கூட்டத்தில் ’பெரியார், அண்ணா’ புகைப்படங்கள்!

மதுரையில் உள்ள மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேச இருக்கிறார்.நாளை காலை புதுச்சேரியில் நடக்கு... மேலும் பார்க்க

`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)மேனாள் ஆசிரியர் , பிபிசி உலகசேவை கட்டுரையாளர்... மேலும் பார்க்க