செய்திகள் :

"அமெரிக்கா செய்துவிட்டது; ஆனால், தென் கொரியா செய்யவில்லை" - ட்ரம்ப் வரியை உயர்த்த காரணம் என்ன?

post image

தென் கொரியாவிற்கு வரியை 15 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ஏன் இந்த உயர்வு?

இதற்கான பதிலை தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப். அதில் அவர் கூறியுள்ளதாவது...

"நமக்கு நம்முடைய வர்த்தக ஒப்பந்தங்கள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் என்ன முடிவாகி உள்ளதோ, அதைப் பொறுத்து அந்தந்த நாடுகளுக்கு உடனடியாக வரிகளைக் குறைத்து வருகிறோம். இதை நமது வர்த்தகக் கூட்டாளிகளும் நமக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஆனால், தென் கொரியா அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை அமல்படுத்தவில்லை. 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி, நானும், அதிபர் லீயும் இரு நாடுகளுக்கும் சிறந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டோம்.

வரி
வரி

2025-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி, நான் கொரியா சென்றிருந்தபோதும், ஒப்பந்தத்தை மறுபடியும் உறுதிப்படுத்தினேன்.

பின், ஏன் இன்னும் கொரிய சட்டமன்றம் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கவில்லை?

இதனால், தென் கொரியாவில் இருந்து வரும் ஆட்டோமொபைல்கள், மருத்துவம் சார்ந்த பொருள்கள், மரக்கட்டைகள், பரஸ்பர வரிகளை 15 சதவிகித வரியில் இருந்து 25 சதவிகித வரியாக உயர்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

”ED, IT, CBI மூலம் மிரட்டல், உருட்டலில் உருவான பிளாக்மெயில் கூட்டணிதான் பாஜக கூட்டணி” - ஸ்டாலின்

தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு' நடைபெற்றது. இதற்காக 15 மாவட்டங்களைச் சேர்ந்த 46 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து மூவாயிரத்திற... மேலும் பார்க்க

மீண்டும் மொழியைக் கையிலெடுக்கும் திமுக - தேர்தலில் கைகொடுக்குமா?

தியாகிகள் தினம்!தமிழ்நாடு முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவுகூரும் விதமாக ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. நேற்று முந்தினம் செ... மேலும் பார்க்க

மகளிர் மாநாடு: "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் BJP ஆளும் மாநிலங்களில்தாம் அதிகம் நடக்கின்றன"- உதயநிதி

தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு நடைபெற்றது.இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி உள்ள... மேலும் பார்க்க

மகளிர் மாநாடு: ”கொள்கை இல்லாத தலைவர்கள் நல்ல ரசிகர்களை மட்டுமே உருவாக்கலாம்” - கனிமொழி சாடல்

தஞ்சாவூரில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் மாநாட்டில் கனிமொழி எம்.பி., பேசியதாவது, ''அனைவருக்கும் அன்பு வணக்கம். கலைமகளின் கரம் தந்து, கல்வியிலே தரம் தந்து, நல்லாட்சிக்கான வரம் ... மேலும் பார்க்க