செய்திகள் :

அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; ட்ரம்ப் விதித்த வரியை Refund செய்த அமெரிக்கா; எவ்வளவு தெரியுமா?

post image

2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உலக நாடுகளைத் துரத்தி வந்த பிரச்னைகளில் ஒன்று - பெரும்பாலான உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த 'பரஸ்பர வரி'.

இந்த வரியை அமெரிக்காவின் 'சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)'-ன் கீழ் விதித்திருந்தார் ட்ரம்ப்.

ஆனால், ட்ரம்பின் இந்த வரி விதிப்பு செல்லாது என்று கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்துவிட்டது அமெரிக்க உச்ச நீதிமன்றம். மேலும், அதுவரை வசூலித்திருந்த வரியும் அவரவருக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

அதுவரை ட்ரம்ப் நிர்வாகம் இறக்குமதியாளர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 166 பில்லியன் டாலர்கள் வசூல் செய்திருந்தது.

ட்ரம்ப் - பரஸ்பர வரி
ட்ரம்ப் - பரஸ்பர வரி

இந்த வழக்கு குறித்து அமெரிக்காவின் சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

அதில், "சாத்தியமான மற்றும் சான்றளிக்கப்பட்ட ரீஃபண்ட் என ஒதுக்கப்பட்ட 128.68 பில்லியன் டாலர் வரி வருவாயில் நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமான தொகையைத் திரும்ப வழங்கப்பட்டுவிட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் ரீஃபண்ட் செய்யப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளது அமெரிக்க சுங்கத்துறை.

'திமுக திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கரா?' - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?

மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அப்போது பட்ஜெட்டில் திமுகவின் திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஓட்டுகிறது என்ற விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிர... மேலும் பார்க்க

'என்னப்பா சொல்ல மாட்டீங்களா...' - உதயநிதியின் காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி!

சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவை நிகழ்வுகளை முடித்து விட்டு கிளம்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் காரில் ஏற முயன்றா... மேலும் பார்க்க

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்; சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் முன்னாள் அமைச... மேலும் பார்க்க

”விவசாயிகளை ஏமாற்றிய வறண்ட வெற்று வேளாண் பட்ஜெட் இது” - தவெக அரசுக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள்

பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக தண்ணீர் இல்லாததால் காவிரி திறக்கப்படாமல் வறண்டு கிடக்கிறது. எனவே டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் | Photo Album

கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப... மேலும் பார்க்க

Agri Budget: ``ஸ்டிக்கர் பட்ஜெட்: '-0' மதிப்பெண்தான் கொடுக்க முடியும்" - எடப்பாடி பழனிசாமி

இன்று சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்ப்பட்டது. இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்திருக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பா... மேலும் பார்க்க