செய்திகள் :

'என்னப்பா சொல்ல மாட்டீங்களா...' - உதயநிதியின் காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி!

post image

சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவை நிகழ்வுகளை முடித்து விட்டு கிளம்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் காரில் ஏற முயன்றார். பின்னர் சுதாரித்துக் கொண்டு உடனடியாக தன்னுடைய காரை நோக்கி சென்ற சம்பவம் சட்டமன்ற வளாகத்தில் கலகலப்பூட்டியது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இதேமாதிரி தவறுதலாக உதயநிதியின் காரில் ஏற முயன்று பின்னர் தன்னுடைய காரில் ஏறி சென்றிருந்தார். அதைப் பற்றி உதயநிதியே ஒரு முறை நகைச்சுவையாக சட்டசபையில் பேசியிருந்தார். இந்நிலையில், இன்றும் அப்படியொரு சம்பவம் நடந்திருந்தது.

சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் உள்ளே செல்லும் நுழைவு வாயில் 4 க்கு வெளியே போடப்பட்டிருக்கும் பந்தலுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமியின் கார் பந்தலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. உதயநிதிக்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்துவிட்டு கிளம்ப தயாராகினார். அப்போது எடப்பாடியின் காரை அவரது ஓட்டுநர் எடுத்து வந்து உதயநிதியின் கார் முன்பாக நிறுத்தினார். இந்த சமயத்தில்தான் எஸ்.பி.வேலுமணியும் சி.வி.சண்முகமும் அமைச்சர் ஆனந்தை சந்தித்திருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கிளம்புவதற்காக வெளியில் வந்த எடப்பாடியிடம் எஸ்.பி.வேலுமணி குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க விரும்பாத எடப்பாடி பழனிசாமி வேகவேகமாக கிளம்ப நினைத்தார். அந்த அவசரத்தில்தான் தவறுதலாக உதயநிதியின் கார் கதவை திறந்துவிட்டார். உடனே பாதுகாவலர்கள் விஷயத்தை சொல்ல சுதாரித்த எடப்பாடி 'என்னப்பா சொல்ல மாட்டீங்களா...' என்றபடியே தன்னுடைய காரை நோக்கி சென்றார்.

'திமுக திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கரா?' - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?

மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அப்போது பட்ஜெட்டில் திமுகவின் திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஓட்டுகிறது என்ற விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிர... மேலும் பார்க்க

அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; ட்ரம்ப் விதித்த வரியை Refund செய்த அமெரிக்கா; எவ்வளவு தெரியுமா?

2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உலக நாடுகளைத் துரத்தி வந்த பிரச்னைகளில் ஒன்று - பெரும்பாலான உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த 'பரஸ்பர வரி'. இந்த வரியை அமெரிக்காவின் 'சர்வதேச அவசர பொருள... மேலும் பார்க்க

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்; சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் முன்னாள் அமைச... மேலும் பார்க்க

”விவசாயிகளை ஏமாற்றிய வறண்ட வெற்று வேளாண் பட்ஜெட் இது” - தவெக அரசுக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள்

பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக தண்ணீர் இல்லாததால் காவிரி திறக்கப்படாமல் வறண்டு கிடக்கிறது. எனவே டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் | Photo Album

கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப... மேலும் பார்க்க

Agri Budget: ``ஸ்டிக்கர் பட்ஜெட்: '-0' மதிப்பெண்தான் கொடுக்க முடியும்" - எடப்பாடி பழனிசாமி

இன்று சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்ப்பட்டது. இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்திருக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பா... மேலும் பார்க்க