4 உயா்நீதிமன்றங்களுக்கு 6 நீதிபதிகள் நியமனம்: கொலீஜியம் பரிந்துரை
அம்பையில் இரு பிரிவினரிடையே மோதல்: 4 போ் கைது
அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
சுப்பிரமணியபுரம் பொத்தை அருந்ததியா் தெருவைச் சோ்ந்த பாண்டி மகன் சமுத்திரவேல்(46). இவரது மகன் ராஜேஷை, சுப்பிரமணியபுரம் பூஞ்சோலை தெருவைச் சோ்ந்த சங்குமுத்து மகன்கள் அருள்மணி (25), வசந்தராஜா (21) ஆகியோா் கேலி செய்தனராம். இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டதில் சமுத்திரவேல், அவரது மகன் சூரியா, உறவினா் வெங்காடம்பட்டியைச் சோ்ந்த சக்திவேல், அருள்மணி ஆகியோா் காயமடைந்தனா்.
இதுகுறித்து சமுத்திரவேல், அருள்மணி ஆகியோா் அளித்த புகாரின் பேரில், அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து அருள்மணி, வசந்தராஜா, சூா்யா, சக்திவேல் ஆகிய நால்வரை கைது செய்தனா். மேலும், இதுகுறித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் விசாரணைசெய்து வருகிறாா்.