செய்திகள் :

'அம்மன் கண், மரம், தங்கம், கரியர்' - சமந்தா வெட்டிங் சாரி சீக்ரெட்ஸ்

post image

நடிகை சமந்தாவிற்கு இயக்குநர் ராஜ் நிதிமொரு என்பவருடன் நேற்று திருமணம் நடந்து முடிந்தது. சமந்தாவின் திருமண ஆடையில் உள்ள சிறப்பசம்ங்களை விளக்குகிறார் சமந்தாவின் ஸ்டைலிஸ்ட் பல்லவி.

நடிகை சமந்தாவிற்கும், 'ஃபேமிலி மேன்' வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நிதிமொருக்கும் நேற்று கோவையில் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமந்தா தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு இருந்தார்.

சமந்தா அணியும் ஆடைகளில் எப்போதும் தனித்துவம் இருக்கும். அதே போல் அவரின் திருமண ஆடையிலும் நிறைய நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்திருப்பதாக சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

Samantha - Raj Nidimoru
Samantha - Raj Nidimoru

சமந்தாவின் திருமணப் புகைப்படத்தில் சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார். அதில் கோல்டன் நிறத்தில் எம்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதற்கு மேட்சிங்காக கோல்டன் சோக்கர் மற்றும் அணிகலன்கள் அணிந்திருந்தார்.

சமந்தாவின் திருமண ஆடையை அவரின் 15 வருட தோழியும், செலிபிரெட்டி ஸ்டைலிஸ்ட்டுமான பல்லவி சிங் ஸ்டைலிங் செய்திருக்கிறார். ஜெயதி போஸ் மற்றும் செலிபிரெட்டி காஸ்டியூம் டிசைனர் ஆர்பிதா மேத்தா ஆகியோர் இணைந்து வடிவமைத்துள்ளனர்.

சமந்தாவின் சேலை

ஸ்டைலிஸ்ட் பல்லவி பதிவிட்டுள்ள பதிவில், "சமந்தா என்னுடைய 15 வருட தோழி, எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். சமந்தாவைப் பொறுத்தவரை ஆடை என்பது அழகுக்காக அணிவது என்பதைத் தாண்டி, அதில் உணர்வுப் பூர்வமான கனெக்‌ஷன் இருக்க வேண்டும் என்று நினைப்பார். அதனால் அவரின் திருமண ஆடைகளிலும் அதனை கொண்டு வர வேண்டும் என்று எண்ணினேன். 

Samantha - Raj Nidimoru
Samantha - Raj Nidimoru

இந்த ஆடையை வடிவமைத்தவர் ஆர்பிதா மேத்தா. இதற்கு முன்பும் கூட நான், சமந்தா, ஆர்பிதா மூவரும் இணைந்து வேலை செய்திருக்கிறோம். அது மேஜிக் மொமன்ட்களை உருவாக்கியிருக்கிறது.

இந்த முறையும் அதே கூட்டணி வேலை செய்திருக்கிறது. ஆடையில் உணர்வுப்பூர்வமான வடிவங்களை ஆடையில் கொண்டு வர வேண்டும் என்று எண்ணியதுமே எனக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் ஜெயதி போஸ். 

Tree of life

ஜெயதி போஸ் ஒரு கதையை வடிவங்களாக உருவாக்கிக் கொடுப்பதில் வல்லவர். சமந்தாவின் திருமண ஆடையை வடிவமைக்க வேண்டும் என்றதும், சில நிமிடங்கள் நேரம் எடுத்துக் கொண்டார்.

'Tree of life' ஒன்றை உருவாக்கி, அதில் அம்மனின் மூன்றாவது கண் இருப்பது போல் உருவாக்கலாம் என்று ஐடியா கொடுத்தார்.

Samantha - Raj Nidimoru
Samantha - Raj Nidimoru

அதாவது சமந்தாவின் கலைப்பயணம், வேர்கள், இன்றைய வளர்ச்சி, எதிர்கால ஆசீர்வாதம் ஆகியவற்றை விளக்கும் வகையில் மரம் ஒன்றையும், அதில் அம்மனின் மூன்றாவது கண் இருப்பதுபோல் வடிவமைத்தார். இதனை நாங்கள் சமந்தாவின் பிளவுஸ் டிசைன் ஆக்கியிருக்கிறோம். 

ராஜ் நிதிமொரு ஆடை

அதே போல் ராஜ் நிதிமொரு ஆடையிலும் ஸ்பெஷல் இருக்கிறது. நான் பழகியதில் அவர் ஒரு நல்ல மனிதர். 'குணத்தில் தங்கம்' என்பதை குறிக்கும் விதமாக தங்க நிற ஆடையைத் தேர்வு செய்தோம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Samantha - Raj Nidimoru
Samantha - Raj Nidimoru

மோதிரம்

சமந்தா அணிந்திருந்த மோதிரத்திலும் தனித்துவம் இருக்கிறது. சமந்தா அணிந்திருந்த மோதிரம், பெரிய டிசைன்களில் செய்யப்படாமல் சிம்பிள் லுக்கில் இருந்தது.

இதற்கு அவர்களுடைய இயல்பான குணத்தையும், மனதின் தெளிவை எதிரொலிப்பதைப் போலவும் மோதிரம் சிம்பிள் லுக்கில் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். 

உங்கள் பயத்தை ஆசிரியராக மாற்றும் ரகசியம்! - மறந்துபோன பண்புகள் - 7

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

லாட்டரி வெற்றியை மனைவியிடம் மறைத்து, ஆடம்பர வாழ்க்கை - மனஉளைச்சலில் முடிந்த ஜப்பானிய முதியவரின் கதை

கனவில் கூடக் காண முடியாத ஒரு அதிர்ஷ்டம், கோடிக்கணக்கான பணம் ஒருவருக்குக் கிடைத்தால், அவர் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போவார். ஆனால், ஜப்பானில் 66 வயதான ஒருவருக்குக் கிடைத்த லாட்டரி வெற்றி, நிம்மதியை... மேலும் பார்க்க

ஈரோடு: கோட்டை ஈஸ்வரன் கோயிலில் 70+ தம்பதியருக்கு சீர்வரிசையுடன் திருக்கல்யாணம் | Photo Album

ஈரோட்டில் திருக்கல்யாணம்ஈரோட்டில் திருக்கல்யாணம்ஈரோட்டில் திருக்கல்யாணம்ஈரோட்டில் திருக்கல்யாணம்ஈரோட்டில் திருக்கல்யாணம்ஈரோட்டில் திருக்கல்யாணம்ஈரோட்டில் திருக்கல்யாணம்ஈரோட்டில் திருக்கல்யாணம்ஈரோட்டில... மேலும் பார்க்க

சேலம் தி ஃபுட் ஸ்ட்ரீட்: 35 கடைகளுடன் கோடிக்கணக்கில் அமைந்த புதிய டைம் பாஸ் ஸ்பாட் - எப்படி இருக்கு?

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி ஏரி பூங்கா அருகில் பிரமாண்டமான அழகுடன், அனைத்து வசதிகளும் அடங்கிய சுமார் ₹300 கோடி செலவில் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு விழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறது சேலம... மேலும் பார்க்க

திடீரென்று ஒரு சைரன் சத்தம்! - அந்நிய மண்ணில் ஒரு அபாய அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Maldives: 2007-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் மாலத்தீவில் புகைப்பிடிக்க தடை; மீறினால்?

2007-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள், மாலத்தீவில் கண்டிப்பாக புகைப்பொருள்களைப் பயன்படுத்தவே கூடாது என்கிற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது அந்த நாட்டு அரசு. என்ன அறிவிப்பு? இந்த அறிவிப்பு Tobacco Cont... மேலும் பார்க்க