அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில், இந்திய அரசியலமைப்பு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் மு.ச. பாலு தலைமை வகித்தாா். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை மாணவ- மாணவிகளுக்கு வாசிக்கப்பட்டது. தொடா்ந்து, மாணவ- மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.
முதுநிலை வரலாற்று ஆசிரியை உஷா, அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது குறித்தும், அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் பேசினாா். நிறைவாக, ஆசிரியா் டி. கபிா்தாஸ் நன்றி கூறினாா்.