செய்திகள் :

`அதிதீவிர சிகிச்சையில் நல்லகண்ணு' - ராஜீவ் காந்தி மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன?

post image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்தார். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட அவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அவ்வப்போது மூச்சுத் திண்றல் ஏற்படுவதும், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதுமாக, உடல்நலம் தேறி சீராகுவதுமாகவே இருந்தது. இந்த நிலையில், நேற்று அவர் மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டதாக தெரிகிறது. உடனே அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை

நேற்று இரவே முதல்வர் ஸ்டாலின் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தற்போது வென்டிலேஷன் முறையில் அவருக்கு சுவாசம் செலுத்தப்படுகிறது என்றத் தகவலும் கிடைத்தது. காலை முதல் திருமாவளவன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்து தோழர் நல்லகண்ணுவின் உடல்நலன் குறித்து விசாரித்துச் செல்கின்றனர். இந்த நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் தோழர் நல்லகண்ணு குறித்து மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், `` நல்லகண்ணு (வயது 101) அவர்கள் நோய்த்தொற்று மற்றும் இணைநோய்களால் (இரத்த கொதிப்பு, சிறுநீரக கோளாறு, உணவை விழுங்க முடியாமை) பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு மருத்துவத்துறை நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று 23.02.2026 அன்று அவருடைய உடல்நிலையில் ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது.

நல்லகண்ணு

அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசக் கருவி சிகிச்சை மற்றும் மருந்துகள் பல்வேறு மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது அவரது உடல்நிலையை பல்வேறு சிகிச்சைகளின் மூலம் சீராக்க அதிதீவிர முயற்சியுடன், 24 மணிநேர தொடர் அதிதீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

சென்னை: மின்சார ரயில் சேவை பாதிப்பு; அவதியுறும் பொதுமக்கள்; திமுக எம்.பி-க்கள் கண்டனம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். ஏற்கெனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்ப... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணி நிறுவனம்... பாஜக-வுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்த அல்லானா !

இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் மாட்டிறைச்சித் தொழிலுக்கு எதிராக சில இந்துத்துவா குழுக்கள் தொடர் போராட்டங்களையும், அதைக் காரணமாக வைத்து சிறுபான்மையினர் மீது தாக்குதல்களையும் நடத்தி வருவதாக குற்றச... மேலும் பார்க்க

எச்சரித்த எ.வ.வேலு; தட்டிக்கொடுத்த விஜய் - வேலூர் TVK வேட்பாளர் ரேஸில் முந்தும் வினோத் கண்ணன்!

வேலூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், வினோத் கண்ணன் என்பவர் விஜய்யின் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாகவும் மாறியிருக்கிறார். விஜய் பேசி முடித்தப் பிறகு அவருக்கு ... மேலும் பார்க்க

'விஜய்க்கு உடம்பு சரியில்லன்னா கூட கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குதான் போவாரு' - கனவை பகிரும் ஆதவ் அர்ஜூனா

தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நிர்வாகிகள் மத்தியி... மேலும் பார்க்க

மதுரை: `தலைவர்கள் வரும்போது கட்சித் துண்டுகளை சுழற்ற வேண்டும்!'- அதிமுக கண்டிஷன்; தவெகவின் தாக்கமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் நடத்திய மாநாட்டில் ரேம்ப் வாக்கில் நடந்து செல்லும்போது, அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் கட்சித் துண்டுகளை அவருக்குக் கொடுத்து அதை அணிந்து கொண்டு... மேலும் பார்க்க

தஞ்சை: காமராசர் மார்கெட்டில் மூடிக் கிடக்கும் கழிவறைகள் - சிரமத்தில் வியாபாரிகள்!

தஞ்சாவூர் மாவட்டம், வடக்கு வீதியில் இருக்கும் காமராசர் காய்கறி மார்க்கெட்டில் மூன்று கழிவறைகள் கட்டப்பட்டிருந்தும் ஒன்றுகூட பயன்பாட்டில் இல்லை என அப்பகுதி மக்கள் கூறியதையடுத்து, அங்கு சென்று அப்பகுதி ... மேலும் பார்க்க