செய்திகள் :

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணி நிறுவனம்... பாஜக-வுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்த அல்லானா !

post image

இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் மாட்டிறைச்சித் தொழிலுக்கு எதிராக சில இந்துத்துவா குழுக்கள் தொடர் போராட்டங்களையும், அதைக் காரணமாக வைத்து சிறுபான்மையினர் மீது தாக்குதல்களையும் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இதனிடையே, பா.ஜ.க கட்சிக்கு முன்னணி இறைச்சி ஏற்றுமதி நிறுவனமான அல்லானா குழுமம் (Allana Group) ரூ.30 கோடியை நன்கொடையாக வழங்கியிருக்கிறது என Scroll.in அறிக்கை வெளியிட்டுள்ளது.

இர்ஃபான் அல்லானா தலைமையிலான அல்லானா குழுமம் குழுமம், 2024-25 நிதியாண்டில் மட்டும் பா.ஜ.க-வுக்கு ரூ.30 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. சுவாரஸ்யமாக, இதே காலகட்டத்தில் இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி 4 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. இது 2018-ம் ஆண்டிற்குப் பிறகு எட்டப்பட்ட மிகப்பெரிய சாதனை அளவாகும்.

பாஜக
பாஜக

2014-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக, அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு "இளஞ்சிவப்பு புரட்சியை" (இறைச்சி ஏற்றுமதி) ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி கடுமையாகச் சாடியிருந்தார். அதே நேரம், மோடி பிரதமராகுவதற்கு முன்பே அல்லானா குழுமம் பா.ஜ.க-வுக்கு நிதியளித்து வந்திருக்கிறது. 2013-14-ம் ஆண்டில் ரூ.2 கோடியை வழங்கியது.

2019-ம் ஆண்டில் அல்லானா குழுமம் ரூ.2,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அந்தக் குழுமத்துடன் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த இக்கட்டான சூழலில்தான் அல்லானா குழுமம் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கத் தொடங்கியது. அதன் அடிப்படையில், 2019-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க-வுக்கு ரூ.2 கோடியையும், சிவசேனாவுக்கு ரூ.5 கோடியையும் வழங்கியிருக்கிறது. அதன் உச்சமாக 2024-25 நிதி ஆண்டில் நன்கொடைத் தொகை 15 மடங்கு அதிகரித்து ரூ.30 கோடியை வழங்கியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி

சீனாவின் கட்டுப்பாடுகளால் இந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதி பாதிக்கப்பட்டபோது, எகிப்து மற்றும் மலேசியா போன்ற இஸ்லாமிய நாடுகள் புதிய சந்தைகளாக மாறின. எகிப்து தற்போது இந்தியாவின் இரண்டாவது பெரிய மாட்டிறைச்சி சந்தையாக உள்ளது. 2024 அக்டோபர் முதல் அமலுக்கு வந்த 'ஹலால் சான்றிதழ்' தொடர்பான வழிகாட்டுதல்கள், மேற்கு ஆசியா மற்றும் துருக்கி சந்தைகளைக் கைப்பற்ற வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அல்லானா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ரஃபவுசான் அலவி, ``பா.ஜ.க அரசின் கீழ் நிலையான வளர்ச்சிக்கான நேர்மறையான மாற்றங்கள் நடக்கிறது. விக்ஸித் பாரதம்' வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கிற்குத் தங்களது பங்களிப்பை வழங்கு வேண்டும் என விரும்புகிறோம். மேலும், வரி அமைப்பை எளிமைப்படுத்தியிருக்கிறது இந்த அரசு எனக் கருதுகிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்

ஆண்தாய் ஆனந்த் `டு' பிஸி ஆனந்த் - தவெக செயல் வீரர்கள் கூட்டத்தின் கலகல மொமென்ட்ஸ்! | TVK

தவெக-வின் செயல்வீரர்கள் கூட்டம் வில்லிவாக்கத்தில் நடந்திருந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ், செங்கோட்டையன் போன்ற முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், சில ஜாலியான ரகளையான மொமெ... மேலும் பார்க்க

`பக்குவமானவர்; அவர் திமுக-வில் இணைந்தால் வரவேற்பேன்!' - ஓபிஎஸ் குறித்து திருமாவளவன்

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன்,"அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கருணைத்தொகை பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடி தெரிவித்திருக்கிறார். தேர்தல் காலத்து வாக்குறுதிகள்... மேலும் பார்க்க

சென்னை: மின்சார ரயில் சேவை பாதிப்பு; அவதியுறும் பொதுமக்கள்; திமுக எம்.பி-க்கள் கண்டனம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். ஏற்கெனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்ப... மேலும் பார்க்க

எச்சரித்த எ.வ.வேலு; தட்டிக்கொடுத்த விஜய் - வேலூர் TVK வேட்பாளர் ரேஸில் முந்தும் வினோத் கண்ணன்!

வேலூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், வினோத் கண்ணன் என்பவர் விஜய்யின் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாகவும் மாறியிருக்கிறார். விஜய் பேசி முடித்தப் பிறகு அவருக்கு ... மேலும் பார்க்க

`அதிதீவிர சிகிச்சையில் நல்லகண்ணு' - ராஜீவ் காந்தி மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்தார். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட அவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அவ்வப்போத... மேலும் பார்க்க

'விஜய்க்கு உடம்பு சரியில்லன்னா கூட கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குதான் போவாரு' - கனவை பகிரும் ஆதவ் அர்ஜூனா

தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நிர்வாகிகள் மத்தியி... மேலும் பார்க்க