செய்திகள் :

'விஜய்க்கு உடம்பு சரியில்லன்னா கூட கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குதான் போவாரு' - கனவை பகிரும் ஆதவ் அர்ஜூனா

post image

தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நிர்வாகிகள் மத்தியில் அவர் ஆவேசமாக பேசியிருந்தார்.

ஆதவ்
ஆதவ்

ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 'வில்லிவாக்கம் தொகுதியில் ஒரு நல்ல மருத்துவமனை இல்லை. ஒரு நல்ல கல்லூரி இல்லை. அரசுப்பள்ளி இல்லை. மழை பெய்யும் போது முழுவதும் சாக்கடை நீர் வருகிறது. வில்லிவாக்கம் கழிவுநீர்வாக்கமாக மாறிவிட்டது.

தொகுதியில் எம்.எல்.ஏ அலுவலகமும் இல்லை. எம்.எல்.ஏவும் இல்லை. பேராசிரியர் அன்பழகனின் பெயரை அவர் பேரன் கெடுத்துக் கொண்டிருக்கிறார். இங்கே திமுகவும் இல்லை. அதிமுகவும் இல்லை. களத்தில் தவெக மட்டுமே இருக்கிறது.

5 வருடத்தில் 6 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள். அதில் 2 லட்சம் கோடியை முதல்வரின் குடும்பம் அடித்துவிட்டது. அமைச்சர்கள் 1 லட்சம் கோடியை அடித்துவிட்டனர்.

2015 இல் மழை வெள்ளத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட தொகுதி வில்லிவாக்கமே. இன்னமும் இந்த தொகுதி அப்படியே இருக்கிறது.

ஆதவ்
ஆதவ்

தலைவர் விஜய் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலையை ஏற்படுத்துவார்.

2014 வரைக்கும் மோடியா லேடியா என சவால்விட்டார் ஜெயலலிதா. உண்மையான அதிமுக தவெக பக்கம் வந்துவிட்டது.

பாஜகவுக்கு எதிராக தைரியமாக பேசும் இரண்டு தலைவர்கள் ராகுல் காந்தியும் விஜய்யும் மட்டும்தான்.

ஜனநாயகன் வெளியாக வேண்டிய நேரத்தில் இன்னொரு படம் வெளியானது. அந்தப் படம் ஒருநாள் கூட ஓடவில்லை. மக்கள் தியேட்டருக்கே வரவில்லை. திமுகவின் படத்துக்கு மட்டும் பாஜக எப்படி சான்றிதழ் கொடுக்கிறது?

வேலூரில் தலைவர் விஜய் நேற்று கண்கலங்கினார். எம்.ஜி.ஆரும் அரசியல் களத்தில் கண் கலங்கினார். ஜெயலலிதாவும் கண் கலங்கினார். இருவரும் வாழ்நாள் முழுவதும் திமுகவை ஓடவிட்டனர்.

பிரசார வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில் தலைவர் மக்களை சந்திப்பதை தடுக்கின்றனர்.

வில்லிவாக்கம் தொகுதிக்குள் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு என வாக்கு கேட்டு வந்தாலும் கதவை திறக்காதீர்கள்' என்றார்.

சென்னை: மின்சார ரயில் சேவை பாதிப்பு; அவதியுறும் பொதுமக்கள்; திமுக எம்.பி-க்கள் கண்டனம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். ஏற்கெனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்ப... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணி நிறுவனம்... பாஜக-வுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்த அல்லானா !

இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் மாட்டிறைச்சித் தொழிலுக்கு எதிராக சில இந்துத்துவா குழுக்கள் தொடர் போராட்டங்களையும், அதைக் காரணமாக வைத்து சிறுபான்மையினர் மீது தாக்குதல்களையும் நடத்தி வருவதாக குற்றச... மேலும் பார்க்க

எச்சரித்த எ.வ.வேலு; தட்டிக்கொடுத்த விஜய் - வேலூர் TVK வேட்பாளர் ரேஸில் முந்தும் வினோத் கண்ணன்!

வேலூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், வினோத் கண்ணன் என்பவர் விஜய்யின் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாகவும் மாறியிருக்கிறார். விஜய் பேசி முடித்தப் பிறகு அவருக்கு ... மேலும் பார்க்க

`அதிதீவிர சிகிச்சையில் நல்லகண்ணு' - ராஜீவ் காந்தி மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்தார். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட அவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அவ்வப்போத... மேலும் பார்க்க

மதுரை: `தலைவர்கள் வரும்போது கட்சித் துண்டுகளை சுழற்ற வேண்டும்!'- அதிமுக கண்டிஷன்; தவெகவின் தாக்கமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் நடத்திய மாநாட்டில் ரேம்ப் வாக்கில் நடந்து செல்லும்போது, அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் கட்சித் துண்டுகளை அவருக்குக் கொடுத்து அதை அணிந்து கொண்டு... மேலும் பார்க்க

தஞ்சை: காமராசர் மார்கெட்டில் மூடிக் கிடக்கும் கழிவறைகள் - சிரமத்தில் வியாபாரிகள்!

தஞ்சாவூர் மாவட்டம், வடக்கு வீதியில் இருக்கும் காமராசர் காய்கறி மார்க்கெட்டில் மூன்று கழிவறைகள் கட்டப்பட்டிருந்தும் ஒன்றுகூட பயன்பாட்டில் இல்லை என அப்பகுதி மக்கள் கூறியதையடுத்து, அங்கு சென்று அப்பகுதி ... மேலும் பார்க்க