Arasan: வேகமெடுக்கும் 2வது கட்ட ஷூட்டிங்; 2 ஹீரோயின்கள்; சிலம்பரசனின் புது Getup...
"அவருக்கு கோபம், மனக்கசப்புகள் இருந்தாலும்கூட..!"- டிடிவி NDA கூட்டணியில் இணைந்தது குறித்து அண்ணாமலை
தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று (ஜன.22) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
"அண்ணன் டி.டி.வி.தினகரன் என்னிடம் முதலில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரின் மனநிலை என்ன என்பது நன்றாகவே தெரியும்.
அவருக்குக் கோபம் இருந்தாலும்கூட, மோடியை விட்டுப் போகக்கூடிய மனிதர் அவர் அல்ல.

கசப்பான விஷயங்களை மறந்து.!
2024-ல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்முடன் (தேசிய ஜனநாயகக் கூட்டணி) இணைந்த அவர், எப்படி 2026-ல் நம்மை விட்டுச் செல்வார்?
சில மனக்கசப்பு காரணமாக தற்காலிகமாக அவர் கூட்டணியில் இருந்து விலகி இருந்திருக்கலாம். அவர் நம்முடன்தான் மீண்டும் இணைவார் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தேன்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்பதற்காக சில கசப்பான விஷயங்களை எல்லாம் மறந்து தினகரன் அண்ணன் கூட்டணிக்கு வந்திருக்கிறார்.
மிகப்பெரிய விஷயம்...
இது அவருக்குக் கடினமான முடிவாகத்தான் இருந்திருக்கும். அவர் எடுத்த முடிவு மிகப்பெரிய விஷயம்.
இப்படி இருக்கையில் டி.டி.வி.தினகரன் குறித்து எதுவும் தெரியாமல் செல்வப்பெருந்தகை பேச வேண்டாம்.
மூழ்கிக்கொண்டிருக்கும் அவர்களது கூட்டணியையும், ஆட்சியையும் காப்பாற்றுவது குறித்து அவர் சிந்திக்க வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்ன நடக்கிறது என்பது குறித்து பேச அவர் யார்.... ஏன் அவர் பேச வேண்டும்?" என்றிருக்கிறார்.

சத்திய சோதனை எல்லாம் கடந்து நிற்கக்கூடியவர்.!
தொடர்ந்து ஓ.பி.எஸ்., குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஓ.பி.எஸ் அண்ணனைப் பொறுத்தவரை அவர் ஒரு பெரிய தலைவர். நல்ல மனிதர்.
சத்தியச் சோதனை எல்லாம் கடந்து நிற்கக்கூடியவர். தமிழ்நாட்டில் மிக முக்கியமான தலைவர்.
அரசியலில் அவர் நல்ல முடிவை எடுப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.
கனிமொழி அக்காவிற்கு என்ன பிரச்னை?
தொடர்ந்து சர்ச்சையான ரஹ்மான் கருத்து குறித்த கேள்விக்கு, "ரஹ்மான் ஓர் இசை மேதை. தமிழ்நாட்டின் அடையாளம் அவர். எங்கு சென்றாலும் மேடைகளில் தமிழ்தான் பேசுவார்.
அவர் அளித்த பேட்டியில் சில விஷயங்களை எடுத்து திரித்து அங்கும் இங்கும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லோருக்கும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது.
'ராமாயணா' படத்திற்கு அவர்தான் இசையமைக்கிறார். எல்லாவிதமான படங்களுக்கும் அவர் இசையமைக்கிறார்.

சினிமாத் துறையில் பவர் ஷிஃப்ட் எப்படி மாறி இருக்கிறது என்றுதான் அவர் கூறியிருந்தார். அது அவருடைய கருத்து. பாஜக பின்னணியில் இருக்கிறது என்று அவர் சொல்லவில்லை.
அவருடைய ரசிகன் நான். அவர் கருத்து சர்ச்சையான நிலையில் விளக்கம் கொடுத்துவிட்டார். இதில் கனிமொழி அக்காவிற்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை" என்று பேசியிருக்கிறார்.













