செய்திகள் :

"சோகமான காட்சிக்கு 1,2,3,4; கோபமான காட்சிக்கு A, B, C, D" - வைரலாகும் மாளவிகா மோகனின் பதில்

post image

நடிகை மாளவிகா மோகனனிடம் நேர்காணல் ஒன்றில் பிற மொழிகளில் நடிப்பவர்களுக்கு இருக்கும் சவால் பற்றி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

"எந்த மொழியில் உங்களுக்கு ஆளுமை உள்ளதோ, அதில் நடிப்பது சிறப்பானது. நான் மலையாளம் பேசுவேன். `ஹ்ரிதயபூர்வம்' படத்தில் புனேயில் பிறந்து, வளர்ந்த மலையாளி பாத்திரம். எனவே எனது பாத்திரத்துக்கு என் நகரத்து மலையாளம் மிகப் பொருத்தமாக இருந்தது.

மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்

அதுவே நான் தெலுங்கு மொழியில் நடிக்கும்போது, எனக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. வசனங்களை என்னால் பிற மொழிகளில் உடனடியாக கற்றுப் பேச முடியாது. திடீர் என்று வசனத்தை மாற்றியமைத்தால் என்ன செய்வது எனத் தெரியாமல் இருப்பேன்.

படப்பிடிப்பு துவங்க 5 நிமிடங்களுக்கு முன் இதைச் சொல்லும்போது, கதாபாத்திரத்தின் உணர்ச்சி, காட்சியின் தன்மை, இவற்றை எல்லாம் மறந்துவிட்டு, இந்த வார்த்தைக்கு அடுத்து என்ன வரும் என்பதே மனதில் ஓடும். அப்படியான வேளைகளில் மிக மோசமான ஒன்றைச் செய்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டே செய்யும்படி ஆகிவிடும்.

இந்த நெருக்கடிகளைச் சமாளிக்க சில நடிகைகள், சுலபமான வழிகளைப் பின்பற்றுகிறார்கள். தெலுங்கு, தமிழில் சில நடிகைகள் வசனங்களையே பார்க்க மாட்டார்கள். என்ன உணர்ச்சி என்பதை கேட்டுக் கொள்வார்கள்.

மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்

சோகமான காட்சி என்றால், சோகமான முகபாவனையைக் கொடுத்துவிட்டு 1,2,3,4ஐ சோகமாகச் சொல்வார்கள். அதுவே கோபமான காட்சி என்றால் கோபமான முகபாவனையைக் கொடுத்துவிட்டு A,B,C,Dஐ கோபமாகச் சொல்வார்கள். அதையும் டப்பிங் கொடுப்பதற்கு தகுந்த மாதிரி பேசுவார்கள். இப்படியே தங்கள் மொத்த கரியரைக்கூடச் சமாளித்து விடுகிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.

Arasan: வேகமெடுக்கும் 2வது கட்ட ஷூட்டிங்; 2 ஹீரோயின்கள்; சிலம்பரசனின் புது Getup; அசத்தும் அப்டேட்ஸ்

தமிழ் சினிமாவில் இப்போதைய 'அரசன்' சிலம்பரசன்தான். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'அரசன்' முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டி மற்றும் மதுரையில் நடந்து முடிந்திருக்... மேலும் பார்க்க

பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார் - அதிகாலையில் உயிர் பிரிந்த சோகம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் சேர்த்து 40,000 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கும் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார்... மேலும் பார்க்க

Rajini:``அவர்கள் என்னை 'டேய் சிவாஜி' என அழைத்து பேசும்போது" - குதூகலத்துடன் பேசிய நடிகர் ரஜினி

கோவை வேளான் பல்கலைக் கழகத்தில் 1975 - 1979 படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்வில் இந்தக் கல்லூரியில் பயின்ற சைலேந்திர பாபு ஐபிஎஸ், இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் க... மேலும் பார்க்க

"நீங்க அத்தனை கதை கேட்டால் தூங்காமல் இருந்திருப்பீங்களா?" - செய்தியாளரின் கேள்விக்கு அஸ்வின் காட்டம்

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் 'ஹாட்ஸ்பாட்' படத்தின் முதல் பாகம் கடந்த 2024-ம் ஆண்டு திரைக்கு வந்திருந்தது.அதைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. ப்ரியா பவ... மேலும் பார்க்க