Arasan: வேகமெடுக்கும் 2வது கட்ட ஷூட்டிங்; 2 ஹீரோயின்கள்; சிலம்பரசனின் புது Getup...
`ஆரம்பிக்கலாங்களா..!' - கோவையில் வேலுமணி கேம் ஸ்டார்ட் - செந்தில் பாலாஜி ஷாக்!
தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். கோவை மாவட்டம் அதிமுகவின் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோட்டையாகவே இருந்துள்ளது. இந்தமுறை அங்கு வெற்றி பெறுவதற்கு திமுக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக களமிறங்கியுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற்று தங்களின் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சி புள்ளிகள் கரைவேட்டி மாற்றுவது சஜகமானது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது, அதிமுக கோவை முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி திமுகவில் இணைந்தது போன்றவற்றால் அதிமுகவில் களேபரம் ஏற்பட்டது.

அடுத்தடுத்து சீனியர் நிர்வாகிகள் திமுக, தவெக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாற்றுக் கட்சிக்கு சென்றவர்கள் மற்றும் ஏற்கனவே அந்தக் கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை அதிமுகவில் இணைக்கும் அஸைன்மென்டுடன் வேலுமணி களமிறங்கியுள்ளார்.
கோவை திமுக ஆனைமலை மேற்கு ஒன்றியத்தின் அவைத் தலைவராக இருந்தவர் ஈஸ்வரமூர்த்தி. அவர் அதிருப்தியில் இருந்த நிலையில் தன் ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் பகுதி செயலாளராக இருந்த பார்த்திபன், கடந்த மாதம் தவெகவில் இணைந்தார்.


தற்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அதிமுகவில் இணைத்துள்ளனர். மேலும் மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் சுயேச்சையாக வெற்றி பெற்ற பேரூராட்சி தலைவர் சசிக்குமார், 8 கவுன்சிலர்களுடன் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாக மேலும் பல நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க வேலுமணி திட்டமிட்டுள்ளார்.
அதிமுவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேலுமணி கோவையை தனி அசைன்மென்ட்டாக கையில் எடுத்துள்ளாராம். இதனால் செந்தில் பாலாஜி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது என்கிறார்கள்.













