வேலை போனாலும் வருமானம்! ₹50 லட்சம் SWP முதலீட்டில் மாதம் ₹25,000 சம்பளம் - எப்பட...
TVK : விஜய்யின் தவெக-வுக்கு விசில் சின்னம்; அதிகாரப்பூர்வமாக அறிவித்த தேர்தல் ஆணையம்!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது.

கடந்த 2024 பிப்ரவரி 2 ஆம் தேதியில் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கினார். தொடர்ந்து விக்கிரவாண்டி, மதுரை ஆகிய மாவட்டங்களில் மாநாடை நடத்திய விஜய் 2026 தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். அங்கீகாரம் பெறாத கட்சிகள் தங்கள் கட்சிக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.
விருப்பச் சின்னங்களாக சில சின்னங்களையும் குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும். கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்களை ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தனி விதிமுறைகள் உள்ளது.

அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கும். தவெக தரப்பில் ஆட்டோ, கால்பந்து, கிரிக்கெட் பேட், விசில் போன்ற சின்னங்களை விருப்பச் சின்னங்களாக தேர்தல் ஆணையத்தில் சமர்பித்திருந்தனர். அதிலிருந்து இப்போது விசில் சின்னத்தை தவெகவுக்கென தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது.














