செய்திகள் :

'ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி!' - முதல்வர் விஜய்யை சந்திக்கிறாரா?

post image

காங்கிரஸ் கட்சியில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சிக் கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த பயிற்சிக் கூட்டத்தின் நிறைவு விழாவில் ராகுல் காந்தி கலந்துகொள்ளவிருக்கிறார். தமிழகம் வரும் ராகுல் விஜய்யை சந்திக்கிறார் என தகவல் பரவி வருகிறது. அது உண்மையா?

CM Vijay
CM Vijay

காங்கிரஸில் மொத்தம் 72 மாவட்டத் தலைவர்கள் பொறுப்பு இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 69 மாவட்டங்களுக்கான தலைவர்களை காங்கிரஸின் அகில இந்திய தலைமை அறிவித்தது. தேர்தல் காரணமாக அப்போது இவர்களுக்கு பயிற்சி கூட்டத்தை நடத்த முடியவில்லை.

அதனால் கடந்த ஜூலை 22 ஆம் தேதி முதல் மகாபலிபுரத்தில் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல், லோக்கல் அரசியல் செயல்பாடுகள், கொள்கை சார்ந்த விவகாரங்கள் என பல விஷயங்களும் காங்கிரஸின் சீனியர்களால் மாவட்டத் தலைவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தின் நிறைவாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி ராகுல் காந்தி மாவட்டத் தலைவர்கள் மத்தியில் உரையாடி ஆலோசனைகளை வழங்கவிருக்கிறார்.

Vijay - Rahul
Vijay - Rahul

தமிழகம் வரும் ராகுல் காந்தி முதல்வர் விஜய்யை சந்திக்கவிருப்பதாக ஒரு தகவல் ஓடிவருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். 'ராகுல் காந்தியும் முதல்வர் விஜய்யும் சந்திக்கும் திட்டங்கள் எதுவும் இப்போது வரைக்கும் இல்லை. மாவட்டத் தலைவர்களின் கூட்டத்தில் மட்டுமே ராகுல் கலந்துகொள்கிறார்' என்றனர்.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க