செய்திகள் :

`ஆசிரியர்களின் அலட்சியத்தால் விபத்து’ - வேலூர் கலெக்டரைச் சந்திக்க ஆம்புலன்ஸில் வந்த பள்ளி மாணவி

post image

வேலூர் அருகேயுள்ள அரியூர் காந்தி நகரைச் சேர்ந்த தம்பதி ரூபன்குமார் - தீபிகா. இவர்களின் மகள் ரூபிகா தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்புப் பயின்று வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலையில் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றார் ரூபிகா.

அன்றைய தினம், ஊசூர் தெள்ளூர் சாலை அருகிலுள்ள அரசுப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதால் அதில் கலந்துகொள்வதற்காக சக மாணவிகள் சிலருடன் ரூபிகாவையும் ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறார் உடற்கல்வி ஆசிரியர். மாணவிகளும் அந்தப் பள்ளிக்குச் சென்று விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட பிறகு மதிய வேளையில் தங்களின் பள்ளிக்குத் திரும்புவதற்காக ஊசூர் பேருந்து நிறுத்தப் பகுதிக்குச் சாலையோரமாக நடந்து வந்தனர்.

மாணவி ரூபிகா

அப்போது, வேகமாக வந்த கார் சாலையோரமாகச் சென்ற மாணவிகள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரூபிகா உட்பட 7 மாணவிகள் காயமடைந்ததால், விரைவாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரூபிகாவுக்கு மட்டும் இடுப்பு எலும்பு மற்றும் கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால், அவரால் எழுந்து நடக்க முடியாமல் போனது. மருத்துவர்கள் ஆபரேஷன் செய்து 5 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு மாணவி ரூபிகாவை டிஸ்சார்ஜ் செய்திருக்கின்றனர். இதனால், மேல்சிகிச்சைக்குச் செல்ல வழித்தெரியாமல் மாணவி ரூபிகாவின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மகளின் எதிர்காலத்தை நினைத்து பெற்றோரும் திக்குதிசைத் தெரியாமல் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஸ்ட்ரெச்சரில் படுத்தவாறு பெற்றோரால் அழைத்துவரப்பட்டிருந்தார் மாணவி ரூபிகா. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸிடம் புகாரளித்தார் தாய் தீபிகா.

இதுபற்றி, செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தாய் தீபிகா, ``என் மகள் உட்பட மாணவிகளை தனியாக அனுப்பி வைத்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் உடன் செல்லாத உடற்கல்வி ஆசிரியர், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டரிடம் முறையிட்ட மாணவியின் தாய்

அரியூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றால் அங்கிருக்கும் எஸ்.ஐ என் மனுவை வாங்க மறுத்துவிட்டார். பாதிக்கப்பட்டது என்னுடைய மகள். 5 நாள்களாக என் மகளை அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்துக்கும் வீட்டுக்குமாக திரிந்துக்கொண்டிருந்தேன். கடைசிவரை என்னுடைய மனுவைப் போலீஸார் ஏற்றுக்கொள்ளவில்லை.

விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் பற்றியும் எந்தவொரு தகவலையும் போலீஸார் தரவில்லை. இதனால், கலெக்டரிடம் மனு அளிக்க வந்தேன். `சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்து உயர் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுப்பதாக’ கலெக்டர் கூறியிருக்கிறார். அலட்சியமாக செயல்பட்ட சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார் ஆதங்கமாக.

"திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் விசுவாசமாக இல்லை.!" - வருந்தும் செல்வப்பெருந்தகை | பேட்டி

'தளபதி விஜய்தான் அடுத்த பிரதமர்' என்ற த.வெ.க அமைச்சர்களின் வாய்ப்பாட்டுக்கு, முதல்வரை நேரில் சந்தித்து வாய்ப்பூட்டு போட முயற்சித்தார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர்.ஆனால், அதன்பிறகும்... மேலும் பார்க்க

"திராணி இருந்தால் சர்க்காரியா கமிஷன் பற்றி விவாதிக்க விஜய் தயாரா?" - ஆர்.எஸ்.பாரதி சவால்

சட்டமன்றத்தில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது முதல்வர் விஜய், திமுகவைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக சர்க்காரியா கமிஷன் குறித்து பேசியிருந்தார். இ... மேலும் பார்க்க

"பொய் என நிரூபிக்கப்பட்ட 'சர்க்காரியா அறிக்கை'யை வாசிக்க வெட்கமில்லையா?" - விஜய்க்கு அப்பாவு கேள்வி

இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசிய உரையைக் கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் அப்பாவு. அப்பாவு, "சட்டமன்றத்தில்... மேலும் பார்க்க

"தவெக-வினரே பெண்கள் மீது தவறான பதிவுகளைப் பதிவிடுகிறார்கள்" - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "காவல... மேலும் பார்க்க

போர் நிதி: `ஆபாசப் படங்களுக்கு அரசு அங்கீகாரம்' - உக்ரைன் எடுத்திருக்கும் முடிவின் பின்னணி என்ன?

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான நிதியைத் திரட்ட, உக்ரைன் நாடு ஆபாசப் பட தயாரிப்பை சட்டப்பூர்வமாக்கும் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.உக்ரைனில் ஆபாசப் படங்களைத் தயாரிப்பது மற்றும் விநி... மேலும் பார்க்க

லண்டன் கிளம்ப இருந்த முதல்வர் விஜய்... ஆளுநரின் ஒரு போன் காலில் மாறிய திட்டம்!

வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வரும் செப்டம்பர் 10-ம் தேதி வாக்கில், முதல்வர் விஜய் லண்டன் கிளம்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தச்சூழலில், அவருடைய பயணம் தள்ளிப்போகவிருப்பதாகச் சொல்கின்றன கோட்டை ... மேலும் பார்க்க