செய்திகள் :

`ஆடின்னே இருப்போம்' - கடைசி வரை போராடிய தென்னாப்பிரிக்கா; சதத்துடன் மாஸ் காட்டிய கோலி - ஹைலைட்ஸ்

post image

இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் ராஞ்சியில் தொடங்கியது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கைத் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 18 ரன்களில் ஏமாற்றம் தந்தாலும் அதன் பிறகு இணைந்த கோலி - ரோஹித் கூட்டணி, தென்னாப்பிரிக்கா பவுலிங்கை நாலாபுறமும் சிதறடித்தனர்.

இருவரும் அரைசதம் கடந்து ஆடிக்கொண்டிருந்த வேளையில் ரோஹித்தின் (47) விக்கெட்டின் மூலம் இக்கூட்டணியை உடைத்தார் மார்கோ யான்சென்.

ரோஹித், கோலி
Rohit, Kohli

நீண்ட நேரத்துக்குப் பிறகு கிடைத்த மொமன்ட்டமில் தென்னாப்பிரிக்கா பவுலர் ஓட்னீல் பார்ட்மேன், அடுத்தடுத்து களமிறங்கிய ருத்துராஜையும், வாஷிங்டன் சுந்தரையும் சொற்ப ரன்களில் அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார்.

ஆனாலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் கே.எல். ராகுல் கோலிக்கு ஒத்துழைக்க, நிதானமாக ஆடிக்கொண்டிருந்த கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 52-வது சதமடித்து 135 ரன்களில் அவுட்டானார்.

விராட் கோலி
Virat Kohli

அவரைத்தொடர்ந்து ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப் போட்ட கே.எல். ராகுலும் அரைசதமடித்து 60 ரன்களில் அவுட்டானார். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புகளுக்கு 349 ரன்கள் குவித்தது.

பின்னர் 350 ரன்கள் என்ற கடினமான டார்கெட் நோக்கி இறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது ஓவராக ஹர்ஷித் ராணா தான் வீசிய முதல் ஓவரிலேயே ரிக்கில்டன், டி காக் ஆகியோரை டக் அவுட் ஆக்கினார்.

அவர்களைத் தொடர்ந்து கேப்டன் மார்க்ரமும் 7 ரன்களில் அவுட்டாக 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்குச் சென்றது தென்னாப்பிரிக்கா.

ஹர்ஷித் ராணா
Harshit Rana

இந்த நேரத்தில்தான் தென்னாப்பிரிக்காவின் சேவியராக இறங்கினார் மேத்யூ ப்ரீட்ஸ்கே. டோனி டி சோர்ஸி, டெவால்ட் பிரெவிஸ், மார்கோ யான்சென் ஆகியோருடன் 50+ பார்ட்னர்ஷிப் போட்டார் மேத்யூ ப்ரீட்ஸ்கே.

தென்னாப்பிரிக்காவுக்கு எல்லாம் சரியாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில் குல்தீப் யாதவ், அரைசதங்களுடன் கிரீஸில் இருந்த மார்கோ யான்சென், மேத்யூ ப்ரீட்ஸ்கேயை ஒரே ஓவரில் அவுட்டாக்கினார்.

தென்னாப்பிரிக்கா 34 ஓவர்களில் 228 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழக்க ஆட்டத்தில் இந்தியாவின் கை மீண்டும் ஓங்கியது.

இப்படியான சூழலில் டெய்ல் எண்டர்ஸை ஈஸியாக காலி செய்துவிட்டு ஆட்டத்தை சீக்கிரம் முடிக்கலாம் என்றிருந்த இந்திய பவுலர்களுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார் கார்பின் போஷ்.

கார்பின் போஷ்
Corbin Bosch

பிரெனலன் சுப்ராயன், நந்த்ரே பர்கருடன் 40+ ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அரைசதமும் அடித்தார்.

இறுதியாக கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது. ஆனால், தென்னாப்பிரிக்காவின் கைவசம் ஒரு விக்கெட் தான் இருந்தது.

67 ரன்களுடன் கிரீஸில் அச்சுறுத்திக் கொண்டிருந்த கார்பின் போஷ், அர்ஷ்தீப் சிங் பந்தை சிக்ஸ் அடிக்க முயன்றார். ஆனால், பந்தோ ரோஹித்தின் கைகளில் தஞ்சமடைய 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

சதமடித்த விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இன்றைய போட்டி குறித்த உங்கள் கருத்தைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்

"டாஸ் போடுறது மட்டுமே கேப்டன் வேலை இல்ல" - சூர்யகுமார் யாதவ் மீது முன்னாள் வீரர் கடும் விமர்சனம்

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி கடந்த நவம்பர் முதல் இந்தியாவில் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் ஆடி வருகிறது.முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 - 0 என இந்தியாவை தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ் செய்ய, அடுத... மேலும் பார்க்க

``என் கணவர் எந்தப் பழக்கத்துக்கும் அடிமையாகவில்லை; ஆனால் அணியினர்.!" - ஜடேஜா மனைவி ரிவாபா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. முதல்முறையாக 2009-ல் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஜடேஜா, 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2024 டி20 ... மேலும் பார்க்க

``என் வாழ்வில் அதை விட வேறெதையும் நான் அதிகம் காதலிக்கவில்லை!" - மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையும், துணைக் கேப்டனுமான (ODI) ஸ்மிருதி மந்தனாவுக்கு, பலாஷ் முச்சல் என்பவருடன் கடந்த மாதம் திருமணம் நடைபெறவிருந்தது.ஆனால், திருமணத்துக்கு முந்தைய நாள... மேலும் பார்க்க

google Search 2025: உலகளவில் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்; முதல் 10 இடம் யாருக்கு?

இந்த 2025 ஆண்டு இந்தியாவிற்குப் புதிய கிரிக்கெட் வீரர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியா - பாகிஸ்தான் இடையே இருந்த தீவிர அரசியல் முரண்பாடுகளுக்கு இடையேயும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் தாக்... மேலும் பார்க்க

IND vs SA: ஹர்திக்கின் அதிரடி; 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகியிருக்கின்றன. தென்னாப்பிரிக்கா அணி டாஸை வென்று, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 1... மேலும் பார்க்க

"வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் பயன்படுத்தாதீங்க, ஏன்னா..!" - கம்பீருக்கு அஷ்வின் ஐடியா!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி வெற... மேலும் பார்க்க