செய்திகள் :

'ஆட்சியில் பங்கு டு வாரியங்கள்.!' - தலைமைக்கு தமிழக காங். நிர்வாகிகள் அனுப்பிய கடிதம் வெளியானதா?

post image

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஸ்டாலின் திட்டவட்டம்

கடந்த வாரம் தனியார் ஊடகத்தின் கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஸ்டாலின் ' ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று காங்கிரஸுக்கும் நன்றாக தெரியும்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

திமுக கூட்டணி நன்றாக இருக்கிறது. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வலுவாகத் தொடரும்" என்று காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும். ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை என்பதை தெளிவுப்படுத்தியிருந்தார்.

மாணிக்கம் தாகூர் எதிர்வினை

ஸ்டாலினின் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் "மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை... 2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழக காங்கிரஸின் தவறு தான்" என்று பதிவிட்டு தொடர்ந்து எதிர்வினை ஆற்றி வந்தார்.

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம்

இப்படி திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதில்...

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

நான்கு கோரிக்கைகள்

* ஆட்சியில் உறுதியான பங்கு வேண்டும்

* கூடுதல் சட்டமன்ற தொகுதிகளை உறுதி செய்ய வேண்டும்

* வாரியங்கள் முதல் கூட்டுறவு சங்கங்கள் வரை பங்கு வழங்கப்பட வேண்டும்

* உள்ளாட்சி தேர்தல்களிலும் கணிசமான பங்கு வேண்டும் என அந்தக் கடித்தடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்தக் கடிதம் தொடர்பாக காரங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை. அதேசமயம் இதனை அவர்கள் மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை: `அரசு தலைமை மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தின் அவல நிலை' - குமுறும் நோயாளிகள்!

மயிலாடுதுறை மாவட்டம், அரசு பெரியார் தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அனைத்து பேரூராட்சி, நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நி... மேலும் பார்க்க

Exclusive `பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை ரகசியமாக சந்தித்தது இதனால்தான்.!’ - உடைத்துப் பேசும் கோபண்ணா

`அதிக சீட், ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழக அரசியல் களத்தை அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். பா.ஜ.க அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியை முழுவீச்சில் எதிர்க்க வேண்டிய காங்கிரஸ்... மேலும் பார்க்க

அவதூறு வழக்கு: ``டி.ஆர் பாலுவை குறுக்கு விசாரணை செய்தேன்" - அண்ணாமலை

அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக இருந்தபோது திமுக ஃபைல்ஸ் என்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, திமுக தலைவர்களின் சொத்து விவரம் என்றப் பெயரில் பட்டியல் ஒன்றை வெளியிட்டார். அதில், திமுக எம்.பி டி.ஆர்.ப... மேலும் பார்க்க

`தவெக நாடக கம்பெனி; நம்ம பிள்ளைகளுக்கு நாம்தான் புத்திமதி சொல்ல வேண்டும்' - மதுக்கூர் ராமலிங்கம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கலந்து கொண்டார். ... மேலும் பார்க்க

`திமுக ஆட்சி தேர்தலுக்கான ஆட்சி; தனிநபர் தாக்குதலில்..!' - நயினார் நாகேந்திரன்

மதுரையில் உள்ள மண்டோலா நகரில் மார்ச் 1 ஆம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக முகூர்த்தகால் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நய... மேலும் பார்க்க

காமராஜர் : அடித்தளமிட்ட சாத்தூர்; `முதல்’ தேர்தலிலேயே அன்னபோஸ்ட்டாக வென்றது எப்படி? | முதல் களம் 06

(`முதல் களம்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின்... மேலும் பார்க்க