செய்திகள் :

"ஆதவ் அர்ஜுனா என்ன அரசியல் நிபுணரா? 'லாட்டரி மாபியா' தானே?" - பொள்ளாச்சி ஜெயராமன் சாடல்

post image

கோவை விமான நிலையத்தில் அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க-வினர் மீது பொய் வழக்கு போட்டு ஆளும் கட்சியினர் மிரட்ட பார்க்கின்றனர். இந்த மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். இது பனங்காட்டு நரி, சலசலப்புகளுக்கு அஞ்சாது.

இது போன்ற பொய் வழக்குகளைச் சந்தித்துதான் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இயக்கத்தில் இருக்கிறோம். அ.தி.மு.க வெற்றியைத் தடுக்க இவர்கள் செய்கின்ற முயற்சி அனைத்தும் பொய்த்து போகும்.

பொள்ளாச்சி ஜெயராமன்
பொள்ளாச்சி ஜெயராமன்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு  ஒன்றும் புரியவில்லை. அனுபவ குறைச்சல். பல கட்சி மாறி வந்தவர். இப்போது மந்திரி ஆகிவிட்டதால், அவருக்கு என்ன பேசுவது எனத் தெரியவில்லை. அ.தி.மு.க-வின் பாரம்பர்யம் பெரியது. 55 ஆண்டை இந்த இயக்கம் எட்டி இருக்கிறது.

இந்த இயக்கத்தைத் தொடக்கூட முடியாது. இவர்களின் அனுபவ குறைச்சலுக்காக ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கின்றனர். தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. ஆதவ் அர்ஜுனா போன்றவர்களின் கோமாளித்தனமான, வேடிக்கையான பேச்சுக்களுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் சரியான பதில் கொடுக்கும்.

பொள்ளாச்சி ஜெயராமன்
பொள்ளாச்சி ஜெயராமன்

ஆதவ் அர்ஜுனா என்ன அரசியல் நிபுணரா? அவர் எத்தனை ஆண்டுகாலம் அரசியலில் இருக்கிறார்? லாட்டரி விற்று கொண்டு இருந்த ஒருவர். அவருக்கு என்ன பெயர்? லாட்டரி மாபியா தானே? தமிழகத்தில் தொடர் மின்வெட்டு மட்டுமல்ல, தொடர் கொலைகள் நடைபெறுகின்றன. விதவிதமான கொலைகள், கொள்ளைகள் நடைபெறுகிறது. விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

``தொழிலதிபர் வீரமணி தப்பியது எப்படி? ஸ்டாலின் பதில்சொல்ல வேண்டும்" - அமைச்சர் நிர்மல் குமார்

திமுக ஆட்சிக் காலத்தில் சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி தப்பிச் சென்றது எப்படி என்பது குறித்து அப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலி... மேலும் பார்க்க

வீரமணி பாலியல் வழக்கு: ``கம்யூனிஸ்டுகளின் நிலைபாடு என்ன?" - அமைச்சர் ராஜ் மோகன் கேள்வி

தவெக - இடதுசாரி கட்சிகளுக்கு மத்தியில் தற்போது வார்த்தை போர் நிலவிவருகிறது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்திருந்தாலும் இடதுசாரி கட்சிகள் தனித்தனியே இடைத்தேர்தலை எதிர்க்கொள்கின்றனர். இந்த நிலையில், பள்ளிக்... மேலும் பார்க்க

'பணமா? ரூ.50, UPI பேமென்டா? ரூ.51' - எஸ்கேப் ரூட்டில் வியாபாரிகள்; MDR-ல் மாட்டும் கஸ்டமர்கள்?

உத்தரப்பிரதேசத்தின் காசிபாத் கடை வாசல்களில் கடந்த வார இறுதியில் சில நோட்டீஸ்கள் தொங்கியிருந்தன.‘UPI பேமென்ட்கள் இங்கு கூடாது’.‘பானிபூரி: பணம் - ரூ.50; UPI - 51’.இது MDR அறிமுகப்படுத்தியதும் எதிர்பார்த... மேலும் பார்க்க

முதல்வர் லண்டன் பயணம்: ``அண்ணாமலை முதிர்ச்சியான தலைவர் என நினைக்கிறேன்; ஆனால்..." - மரிய வில்சன்

சென்னை ஆர்.கே. நகரில், மாநகரப் போக்குவரத்துக்கழகம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த நிகழ்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை: ``முதல்வர் விஜய் விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்க வேண்டாம்" - உதயநிதி விமர்சனம்

தவெக அரசு விவசாயிகளை வஞ்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா? இந்த Dummy ஆட்சியாள... மேலும் பார்க்க

'உட்கார கூட இடமில்ல...' - முதல்வர் விஜய் ஆய்வு செய்த எழும்பூர் மருத்துவமனையின் அவலநிலை என்ன?

சென்னை எழும்பூரில் உள்ள பழமையான மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய் சமீபத்தில் ஆய்வு செய்திருந்தார். முதல்வரின் ஆய்வுக்குப் பிறகுமே அடிப்படை வசதிகள் முறையாகச் செய்து தரப்படவில்லை என மருத்துவமனையில... மேலும் பார்க்க