ஆமைவேகத்தில் செல்லும் அதிவேக புல்லட் ரயில் திட்டம்?
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டு வந்தநிலையில், 2033-தான் செயல்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த வாரம் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் முதல் புல்லட் ரயிலுக்கான பணிகள் 47 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளதாகக் கூறினர்.
508 கி.மீ. தொலைவிலான இந்தத் திட்டத்தில், 255 கி.மீ. தொலைவிலான பாலப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம், 2026-ல் செயல்படுத்தப்படவிருந்த புல்லட் ரயில் திட்டம், 2033 ஆம் ஆண்டில்தான் செயல்படுத்தப்படும் என்று தோன்றுகிறது.
இதையும் படிக்க:விடாமுயற்சி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 508 கி.மீ. தொலைவிலான மும்பை – அகமாதாபாத் புல்லட் ரயில் தடத்தின் 12 ரயில் நிலையங்களில் 8 நிலையங்கள் குஜராத்திலும் 4 நிலையங்கள் மகாராஷ்டிரத்திலும் இருக்கும் என்று கூறுகின்றனர். இந்த ரயில்கள் 320 -350 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை.
நோய்த்தொற்று, நிலங்களைக் கையகப்படுத்துதல், கொள்கை ஒப்புதல்கள் முதலானவற்றால்தான் புல்லட் ரயில் திட்டத்தில் தாமதம் ஏற்படுவதுபோலத் தெரிகிறது.