செய்திகள் :

Nigeria: "கிறிஸ்தவர்களைக் குறிவைத்து கொல்கிறார்கள்; அதனால் ISIS தீவிரவாதிகளைத் தாக்கினோம்" - ட்ரம்ப்

post image

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கா சக்திவாய்ந்த மற்றும் கொடிய தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

கடந்த அக்டோபர் மாத இறுதியிலிருந்து அவ்வப்போது நைஜீரியா குறித்து பேசிவரும் ட்ரம்ப், `` நைஜீரியாவில் கிறிஸ்தவ மதம் இருப்புக்கு அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. கிறிஸ்தவ சமூகங்களை இலக்காகக் கொண்ட வன்முறையைத் தடுக்கத் தவறிய மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் ராணுவ ரீதியாகத் தலையிட வேண்டும் எனக் கருதுகிறேன்" என்றெல்லாம் அச்சுறுத்தி வந்தார்.

நைஜீரியா
நைஜீரியா

இந்த நிலையில் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை இலக்காக வைத்து நேற்று தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்திருக்கிறார்.

ட்ரம்ப், ``கிறிஸ்தவர்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டதற்குப் பதிலடியாகவே ராணுவம் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தலைமைத் தளபதி எனது உத்தரவின் பேரில், வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் கயவர்களுக்கு எதிராக சக்திவாய்ந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

அவர்கள் பல ஆண்டுகளாக அப்பாவி கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு கொடூரமாகக் கொன்று வருகின்றனர். கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்வதை நிறுத்தவில்லை என்றால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நான் இதற்கு முன்பு அந்தப் பயங்கரவாதிகளுக்கு எச்சரித்திருந்தேன், இன்று இரவு அது நடந்தது.

அமெரிக்காவால் மட்டுமே செய்யக்கூடிய வகையில், போர்த் துறை பல கச்சிதமான தாக்குதல்களை நடத்தியது. எனது தலைமையின் கீழ், நமது நாடு தீவிரவாத இஸ்லாமியப் பயங்கரவாதம் செழிக்க அனுமதிக்காது. கடவுள் நமது ராணுவத்தை ஆசீர்வதிக்கட்டும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

மேலும் இறந்த பயங்கரவாதிகள் உட்பட அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். அவர்கள் கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்வதைத் தொடர்ந்தால், இன்னும் பலர் கொல்லப்படுவார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் நைஜீரிய அரசு, ``ஆயுதக் குழுக்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இருவரையும் குறிவைக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் மட்டுமே துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற ட்ரம்பின் கூற்றுகள் முழுமையானது அல்ல.

மத சுதந்திரத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை ட்ரம்ப் புறக்கணிக்கிறார். ஆனால், போராளிக் குழுக்களுக்கு எதிராக எங்கள் படைகளை வலுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டிருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.

பாமகவில் இருந்து ஜி.கே மணி நீக்கம்; அன்புமணி தரப்பு அதிரடி

பாமகவில் இருந்து ஜி.கே.மணியை நீக்கம் செய்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இருவரும் ஒ... மேலும் பார்க்க

காற்று மாசு: ``டெல்லியில் இரண்டு நாள் தங்கினாலே தொற்று வந்துவிடுகிறது" - அமைச்சர் நிதின் கட்கரி

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.கடந்த சில மாதங்களாக காற்றின் தரக் ... மேலும் பார்க்க

``தவறான பாதையில் நகர்ந்து கொண்டிருக்கும் நடைமுறைகள்” : ராஜாஜியின் பார்வையில் தேர்தல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பதவி கிடைக்காத விரக்தி? - தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி!

தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 23-ம் தேதி, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டச் செயலாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த ந... மேலும் பார்க்க