மும்பை: "பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து" - புறாக்களுக்கு உணவளித்தவருக்கு நீதிமன்ற...
நீலகிரி: டாஸ்மாக் கடையில் ரூ.10 கூடுதலாகக் கேட்ட பணியாளர்கள்; கடைக்குள் நுழைந்து தாக்கிய தந்தை, மகன்
தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடைகளான டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபாட்டிலுக்குக் கூடுதலாக 10 ரூபாயைப் பெறுவதாக பணியாளர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
மதுபாட்டில்களில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலை மற்றும் காலி பாட்டிலைத் திரும்ப பெறுவதற்காக ஒட்டப்படும் 10 ரூபாய்க்கான வில்லை ஆகியவற்றை விடவும் கூடுதலாக 10 ரூபாயைக் கட்டாயமாக வசூலிக்கும் முறைகேடுகள் தொடர்பாக அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரில் இயங்கி வரும் மதுபானக் கடைக்கு நேற்று மது வாங்கச் சென்றவர்களிடம் கூடுதலாக 10 ரூபாயைக் கேட்டு பணியாளர்கள் நிர்ப்பந்தித்திருக்கிறார்கள். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் இருவர் கடைக்குள் நுழைந்து பணியாளர்களைத் தாக்கியுள்ளனர். பணியாளர்களைக் கடுமையாகத் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட டான் சில்வஸ்டர் மற்றும் அவரின் மகன் ஹாலன் ரூபன் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.




















