செய்திகள் :

ஓடும் ரயிலில் கோவை கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - வீடியோ ஆதாரத்தால் சிக்கிய போலீஸ்காரர்

post image

கோவை ஆர்எஸ்புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் ஷேக் அப்துல்லா. இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை சென்றுள்ளார். பணியை முடித்துக் கொண்டு இன்டர்சிட்டி ரயில் மூலம் சென்னையில் இருந்து கோவை திரும்பியுள்ளார்.

பாலியல் தொல்லை கொடுத்த காவலர்

அதே ரயிலில் கோவையை பூர்விகமாக கொண்டவரும், சென்னையில் சட்ட கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவியும் பயணித்துள்ளார்.

அந்த ரயில் காட்பாடி ரயில் நிலையம் அருகே செல்லும்போது, ஷேக் அப்துல்லா மாணவியின் அருகே அமர்ந்துள்ளார். தொடர்ந்து அவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

பாலியல் தொல்லை

அதிர்ச்சியடைந்த மாணவி அந்த நிகழ்வை தன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அந்த மாணவி ரயில்வே காவல்துறையிடம் புகாரும் அளித்துள்ளார்.

காட்பாட்டி ரயில் நிலையத்தில், சம்பந்தப்பட்ட ரயில் பெட்டிக்கு வந்த காவல்துறையினர் ஷேக் அப்துல்லாவிடம் விசாரணை நடத்தினார்கள். வீடியோ ஆதாரத்துடன் சிக்கியதால் ரயில்வே காவல்துறையினர் ஷேக் மீது வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸார் சஸ்பெண்ட்

இதையடுத்து சேக் அப்துல்லாவை காவல்துறையில் இருந்து பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி; நடுரோட்டில் சுட்டுக் கொலைசெய்த இளைஞரால் பரபரப்பு!

பெங்களூருவில் வசிப்பவர் பாலமுருகன் (40). தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஆவார். அவர் தற்போது வேலை இல்லாமல் இருக்கிறார். இவர் மனைவி புபனேஷ்வரி (39). இவர் அரசு வ... மேலும் பார்க்க

கேரளா: பாலியல் கொடுமைக்கு ஆளான நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தி வீடியோ; 3 பேரைக் கைதுசெய்த போலீஸ்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் திலீப் விடுவிக்கப்பட்ட நிலையில், பல்சர் ... மேலும் பார்க்க

`இன்டர்னல் மார்க்கில் கைவைப்பேன்!' - மாணவிக்குப் பாலியல் தொல்லை; மருத்துவக் கல்லூரி அலுவலர் தலைமறைவு

தென்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், சென்னை புறநகர் பகுதியில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில்தான் மாணவிக்கு கல்லூரி நிர்வாகத்த... மேலும் பார்க்க

குன்றத்தூர்: பூட்டிய வீட்டுக்குள் கணவன் தற்கொலை; மனைவி மர்ம மரணம் - திருமணமான 9-வது நாளில் சோகம்

சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (25). இவர் அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த யுவஸ்ரீ (24) என்பவர் பணியாற்றி வந்தார்.... மேலும் பார்க்க

சேலம்: அரசு பள்ளிக்குள் நள்ளிரவில் மாந்திரீக பூஜை? அதிர்ச்சியில் ஆசிரியர்கள் - போலீஸார் விசாரணை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமாண்டப்பட்டியில், ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஓமலூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகி... மேலும் பார்க்க

சிவகாசி: குடும்பப் பிரச்னை; மனைவி, பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற நபர்!

Lவிருதுநகர் மாவட்டம், சிவகாசி நகர காவல் நிலையம் அருகே உள்ள முஸ்லிம் ஓடை தெருவில் நேற்று நடந்த பயங்கர சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தன் மனைவி, இரு பிள்ளைகள் ... மேலும் பார்க்க