பெங்களூரு: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி; நடுரோட்டில் சுட்டுக் கொலைசெய்த இள...
BB 9: "ஆரம்பிச்சு விட்டுட்டு எங்க புகையுதுன்னு பார்ப்பாங்க" - பார்வதியை கலாய்த்த திவ்யாவின் அப்பா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர்.
இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது.
அந்தவகையில் நேற்று(டிச. 24) வினோத், சபரி, மற்றும், கனி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் அமித்தின் மனைவி ஸ்ரீரஞ்சனி வந்திருந்தார்.
"நீ இந்த வீட்டோட கவுன்சலர் இல்ல அமித். சாண்ட்ரா ரொம்ப சோகமா இருக்காங்கன்னு நினைச்சிட்டு இருக்க, ஆனா அவங்க பிக் பாஸ் தமிழ், மலையாளம்'னு எல்லாத்தையும் பார்த்திட்டு வந்திருக்காங்க.
அவங்க கேம் சாதரணமாலாம் இல்ல. அரோராலாம் கணக்கு வச்சு விளையாடுறாங்க.
யார் என்ன பேசுறாங்க, எப்படி பேசுறாங்க, அதை பத்தி எங்க பேசலாம்'னு ரொம்ப தெளிவா இருக்காங்க.

பார்வதியோட விசுவாசம் கேமுக்கு மட்டும்தான். அடுத்தக்கட்டம் போறதுக்கு என்ன வேணாலும் பண்ணுவாங்க.
இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு விளையாடு" என்று அமித்துக்கு ஸ்ரீரஞ்சனி அட்வைஸ் கொடுத்தார்.
தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் திவ்யாவின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர்.
" இந்த வாரம் வீட்டு தலை பொறுப்பை சிறப்பா பண்ணிட்டு இருக்கீங்க" என கம்ருதீனை திவ்யாவின் அப்பா பாராட்டுகிறார்.
உடனே பார்வதி, " எல்லாப் பேரன்ட்ஸும் வர்றதுனால வீட்டு தலைய நாங்க பெருசா தொந்தரவு பண்ணல" என்று சொல்கிறார்.

அதற்கு திவ்யாவின் தந்தை, " இதுதான் பாரு. பதில் சொல்ல வேண்டியது கம்ருதீன் அல்லவா? தாங்கள் இடையில் வருவது ஏன்?
ஒரு விஷயத்தை ஆரம்பிச்சு விட்டிட்டு எங்க புகையுதுன்னு வந்து பார்ப்பாங்க" என பார்வதியை கலாய்கிறார்.


















