செய்திகள் :

போலி மருந்து விவகாரம்: பாஜக ஆதரவு முன்னாள் ஐ.எஃப்.எஸ் அதிகாரியை தூக்கிய புதுச்சேரி போலீஸ்

post image

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான `சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டியில் புகாரளித்தது.

அதனடிப்படையில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் மற்றும் திருபுவனைப் பாளையம் தொழிற்பேட்டைகளில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் லார்வன் ஃபார்மா என்ற இரண்டு மருந்து தொழிற்சாலைகளும், உரிய அனுமதி பெறாமல் போலி மருந்துகளை தயாரித்து வந்தது தெரிய வந்தது.

அவற்றை உடைத்து சோதனை செய்த போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி உயிர் காக்கும் மருந்துகளும், தயாரிப்பு இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

சபாநாயகர் செல்வத்துடன், கைது செய்யப்பட்ட சத்தியமூர்த்தி

அதையடுத்து போலியாகவும், உரிய அனுமதி பெறாமலும் இயங்கி வந்த 13 மருந்து தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்தது மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை.

இதற்கிடையில் போலி மருந்து தொழிற்சாலைகளை நடத்திய முக்கிய குற்றவாளியான மதுரை ராஜாவை கைது செய்தனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார்.

இந்த விவகாரத்தில் ஒருசில அரசியல் தலைவர்களும், காவல்துறை அதிகாரிகளும் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருப்பது தெரிய வந்ததால், 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து (SIT – Special Investigation Team) அமைக்க உத்தரவிட்டார் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன். அதனடிப்படையில் எஸ்.பி நல்லாம் பாபு அவர்களின் தலைமையில் எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டது.

அதேவேகத்தில் விசாரணையில் இறங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு, ஆளும் கட்சி எதிர்க்கட்சி என எந்தவித பாகுபாடுமின்றி அடுத்தடுத்து குற்றவாளிகளைக் கைது செய்து வருகிறது.

அந்த வகையில் முன்னாள் ஐ.எஃப்.எஸ் அதிகாரியும், பா.ஜ.கவின் தீவிர ஆதரவாளருமான சத்தியமூர்த்தி என்பவரையும், ஜி.எஸ்.டி கண்காணிப்பாளர் ஃபரிதா என்பவரையும்  அதிரடியாக கைது செய்திருக்கிறது.

ஓசூரில் பதுங்கியிருந்த அவரை கைது செய்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர், அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முதல்வர் ரங்கசாமியின் தீவிர ஆதரவாளரான அரியாங்குப்பம் மணிகண்டன் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

போலி மருந்து தொழிற்சாலை
போலி மருந்து தொழிற்சாலை

புதுச்சேரி வனத்துறையில் பணியாற்றிய சத்தியமூர்த்தி, மத்திய அரசுக்கு விருப்ப விலகல் கடிதத்தை அனுப்பிவிட்டு தேர்தல் அரசியலில் ஈடுபட்டு வந்தார். தன்னை பா.ஜ.க ஆதரவாளராக காட்டிக் கொண்டதுடன், 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டார்.

அது கிடைக்காததால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். அதுவும் கிடைக்கவில்லை என்பதால், பா.ஜ.க-வின் புதுச்சேரி தலைவர் பதவியைப் பெறுவதற்கு முயற்சி செய்தார்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு சுமார் 1,000 பேரைக் கூட்டி வாழ்த்து தெரிவித்தார். ஆனால் அவரின் எந்த முயற்சியும் பலிக்கவில்லை என்பதால், 2026 தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தி வந்தார். இந்த நிலையில்தான் எஸ்.ஐ.டி அவரை அலேக்காக கைது செய்திருக்கிறது.

”எல்லோரும் விஜய் பின்னால் செல்கிறீர்களே.!” - சர்ச் திருப்பலியில் பாதிரியார் பேச்சால் சர்ச்சை

தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சர்ச்சில், நேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதில், நெல்லை செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியின் முதல்வரும், பாதிரியாருமான காட்வின் ரூபஸ் ... மேலும் பார்க்க

சகோதரிக்கு வழிவிடுவாரா ராகுல்? `பிரியங்கா காந்தி பிரதமராவது தவிர்க்க முடியாதது' என்கிறார் வதேரா

பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகராக அரசியல் செய்யக்கூடிய தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது. ராகுல் காந்தியால் நரேந்திர மோடியை சமாளிக்க முடியவில்லை என்று காங்கிரஸ் தலைவர்களே... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலி மருந்துக் கும்பலிடம் சபாநாயகர் லஞ்சம் வாங்கியிருக்கிறார்!’ – நாராயணசாமி பகீர்

`தீபாவளி பரிசு வழங்க ரூ.42 லட்சம்...’புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்... மேலும் பார்க்க

Vijay : 'தூத்துக்குடி மட்டுமா?' ஓடும் விஜய்; பதுங்கும் ஆனந்த்! - கோஷ்டி பூசலில் தவெக

விஜய்யின் பனையூர் தவெக அலுவலகத்தை அல்லோலகலப்படுத்தியிருக்கிறார் தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல். விஜய் காரின் குறுக்கே விழுந்து கட்டையை போட்டவர், ஒரு கட்டத்தில் அலுவலகத்தின் கேட் முன்பு அமர்ந்... மேலும் பார்க்க

மும்பை தேர்தல்: `தாக்கரே சகோதரர்கள் வென்று விடுவார்கள்' - பாஜக-விடம் அதிக இடங்களை கேட்கும் ஷிண்டே

மும்பை மாநகராட்சிக்கு வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர்தல் நடைபெறுகிறது. அதுவும் சிவசேனா உடைந்த பிறகு சந்திக்கும் முதல் தேர்தலாக இருப்பதால் மும்பையில் உத்தவ் தாக... மேலும் பார்க்க

காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸுக்கு இம்முறை வாய்ப்பு மறுப்பா? - குளச்சலில் அலையடிக்கும் அரசியல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளன. இயற்கை துறைமுக தொகுதி என்ற சிறப்பை பெற்ற குளச்சலில் தி.மு.க ஒருமுறையும், அ... மேலும் பார்க்க