செய்திகள் :

`தாக்கரே குடும்பத்தால் மட்டுமே முடியும்!'-மாநகராட்சி தேர்தலில் கூட்டணியை அறிவித்த தாக்கரே சகோதரர்கள்

post image

மும்பை மாநகராட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் ஏற்கெனவே முடிவு செய்துள்ளன. இதற்காக இரு கட்சிகளும் தொகுதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இப்பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், காங்கிரஸ் கட்சியையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள உத்தவ் தாக்கரே விரும்பினார். ஆனால் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் `நாங்கள் மாநகராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்' என்று திட்டவட்டமாக அறிவித்தனர்.

இதையடுத்து தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் இன்று மும்பையில் கூட்டணியை முறைப்படி அறிவித்தனர். முன்னதாக உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் தங்களது குடும்பத்துடன் சென்று தாதர் சிவாஜி பார்க்கில் இருக்கும் பால் தாக்கரே நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பிறகு தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் ஒர்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது பேசிய ராஜ் தாக்கரே, ''மும்பை மாநகராட்சித் தேர்தலில் சிவசேனாவும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் இணைந்து போட்டியிடும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். சிவசேனா மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவைச் சேர்ந்த மராத்தியர் ஒருவர் மும்பை மேயராக வருவார்'' என்று தெரிவித்தார். அந்நேரம் அருகில் இருந்த உத்தவ் தாக்கரே, ``எப்படி இருந்தாலும் மும்பை நம்முடன் இருக்கும். `படேங்கே தோ கதேங்கே' என்ற முழக்கத்தின் படி எந்தவொரு பிளவும், ஒற்றுமையின்மையும் பேரழிவை ஏற்படுத்தும்'' என்று எச்சரித்தார்.

உடனே பேசிய ராஜ் தாக்கரே, ``மும்பை மராத்தி மக்கள் விரும்புவதை நாங்கள் செய்வோம்'' என்றார். ``பா.ஜ.க-ஏக்நாத் ஷிண்டே கூட்டணியில் அதிருப்தியில் இருப்பவர்களும் எங்களுடன் சேரலாம்" என்றும், ``பா.ஜ.க-வில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க சகிக்காதவர்கள் எங்களது கூட்டணிக்கு வரலாம்" என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார். மும்பை, நாசிக் போன்ற மாநகராட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு முடிந்து இருப்பதாகவும், தொடர்ந்து ஒற்றுமையாக இருக்கவே இப்போது இணைந்து இருப்பதாகவும், மகாராஷ்டிரா தலைமை தாக்கரே குடும்பத்திற்கானது என்றும், தாக்கரேயால் மட்டுமே மகாராஷ்டிராவை வழிநடத்த முடியும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

இதில் பேசிய ஆதித்ய தாக்கரே, ''மும்பைக்கும், மகாராஷ்டிராவிற்கும் இன்று மிகவும் முக்கியமான நாள்'' என்று குறிப்பிட்டார். ஆனால் தோல்வி பயத்தில் இருவரும் ஒன்று சேர்ந்திருப்பதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது.

OPS : தனிக்கட்சி; விஜய்யுடன் கூட்டணி! - ரூட்டை மாற்றுகிறாரா ஓ.பன்னீர்செல்வம்?

'எடப்பாடி பழனிசாமி என்கிற பெயரை சொல்லவே அவமானமாக இருக்கிறது. பழனிசாமி இருக்கும் வரை அதிமுகவில் இணையப் போவதில்லை' என தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் வெடித்திருக்கிறார் ஓ.பி.எஸ். தம... மேலும் பார்க்க

”எல்லோரும் விஜய் பின்னால் செல்கிறீர்களே.!” - சர்ச் திருப்பலியில் பாதிரியார் பேச்சால் சர்ச்சை

தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சர்ச்சில், நேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதில், நெல்லை செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியின் முதல்வரும், பாதிரியாருமான காட்வின் ரூபஸ் ... மேலும் பார்க்க

சகோதரிக்கு வழிவிடுவாரா ராகுல்? `பிரியங்கா காந்தி பிரதமராவது தவிர்க்க முடியாதது' என்கிறார் வதேரா

பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகராக அரசியல் செய்யக்கூடிய தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது. ராகுல் காந்தியால் நரேந்திர மோடியை சமாளிக்க முடியவில்லை என்று காங்கிரஸ் தலைவர்களே... மேலும் பார்க்க

போலி மருந்து விவகாரம்: பாஜக ஆதரவு முன்னாள் ஐ.எஃப்.எஸ் அதிகாரியை தூக்கிய புதுச்சேரி போலீஸ்

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான `சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டியில் புகாரளித்தது. அதனடிப்படையில் புதுச்சேரி மேட்டுப... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலி மருந்துக் கும்பலிடம் சபாநாயகர் லஞ்சம் வாங்கியிருக்கிறார்!’ – நாராயணசாமி பகீர்

`தீபாவளி பரிசு வழங்க ரூ.42 லட்சம்...’புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்... மேலும் பார்க்க

Vijay : 'தூத்துக்குடி மட்டுமா?' ஓடும் விஜய்; பதுங்கும் ஆனந்த்! - கோஷ்டி பூசலில் தவெக

விஜய்யின் பனையூர் தவெக அலுவலகத்தை அல்லோலகலப்படுத்தியிருக்கிறார் தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல். விஜய் காரின் குறுக்கே விழுந்து கட்டையை போட்டவர், ஒரு கட்டத்தில் அலுவலகத்தின் கேட் முன்பு அமர்ந்... மேலும் பார்க்க