சர்வதேச தரத்தில் அனிமேஷன் படத்தை உருவாக்கிய தமிழர் - 'மிஷன் சான்டா'வில் எடிட்டர்...
Vijay Hazare Trophy: வரலாற்று சாதனை படைத்த பீகார் அணி; மாஸ் காட்டிய சூர்யவன்ஷி
விஜய் ஹசாரே கோப்பையின் 33ஆவது சீசன் இன்று (டிச.24) அகமதாபாத்தில் தொடங்கியது.
ஜனவரி 18ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.
இந்தத் தொடரில் மூத்த வீரர்களும், முன்னாள் கேப்டன்களுமான ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றிருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் பீகார் - அருணாச்சல பிரதேச அணிகள் மோதின.
இதில் பீகார் அணியில் களமிறங்கிய அனைவரும் தொடர்ச்சியாக அதிரடி காட்டியதால் அந்த அணி 50 ஓவர்களில் 574 ரன்களை குவித்து வரலாற்று சாதனையை படைத்தது.
குறிப்பாக சூர்யவன்ஷி 84 பந்துகளில் 16 பவுண்டரி, 15 சிக்ஸர் உட்பட 190 ரன்களை குவித்து அனைவரையும் பிரமிக்க வைத்திருக்கிறார்.
இளம் வீரர் சூர்யவன்ஷியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். 50 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை பீகார் அணி பெற்றிருக்கிறது.

இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அணி 506 ரன்களை குவித்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையைப் படைத்திருந்தது. இன்று அந்த சாதனையை பீகார் அணி முறியடித்திருக்கிறது.



















