விபி-ஜி ராம் ஜி: "உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே பழனிசாமி.!" - ஸ்ட...
"நான் புல்லட் புரூஃப் கார் வச்சிருக்கேன், ஏன்னா..!"- ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான்
ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் தன்னிடம் புல்லட் புரூஃப் கார் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
கிரிட்கெட்டில் முன்னணி வீரர்களுள் ஒருவராக வலம் வருபவர் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான்.

தனது சொந்த நாட்டு அணிக்காக மட்டுமல்லாது பிற நாடுகளில் நடக்கும் லீக் தொடர்களிலும் கலந்துகொண்டு அசத்தி வருகிறார்.
குறிப்பாக, இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் இதுவரை 136 போட்டிகளில் ஆடி, 158 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.
இந்நிலையில் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கானை நேர்காணல் எடுத்திருக்கிறார்.
அந்த நேர்காணலில் பேசிய ரஷீத் கான், " என்னால் ஆப்கானிஸ்தான் தெருவில் நடக்க முடியாது.
அதனால் புல்லட் புரூஃப் கார் வைத்திருக்கிறேன். பாதுகாப்பிற்காகத்தான் அந்தக் காரை வைத்திருக்கிறேன்.

ஆப்கானிஸ்தானில் பெரும்பாலனோரிடம் புல்லட் புரூஃப் கார் இருக்கும். இது அங்கு சகஜம்தான்" என்று தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

















