செய்திகள் :

விபி-ஜி ராம் ஜி: "உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே பழனிசாமி.!" - ஸ்டாலின்

post image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மத்திய பாஜக அரசு, வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு (விபி -ஜி ராம் ஜி) சட்ட மசோதாவாக மாற்றி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றிய நிலையில் அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கினார்.

இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது முதலே காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா?

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி.

ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது சட்டமாக இருந்தபோதே அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் அலைக்கழித்த பா.ஜ.க. அரசு இப்போது 1008 நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலை தரப்போகிறதா? உண்மையைச் சொன்னால், ஒருநாள் வேலைக்குக் கூட இனி ஒன்றிய அரசு உத்தரவாதம் கொடுக்காமல் கடமையைக் கைகழுவியுள்ளது.

மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என்று உங்கள் ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே... என்ன ஆனது? உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மாநில அரசின் மீது 40% நிதிச்சுமையை ஏற்றும் எதேச்சாதிகாரமும் கைவிடப்படவில்லையே? டெல்லியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிவு உங்களுக்கு இருக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முட்டுகளையாவது தவிர்க்கலாம்.

வறுமையை ஒழித்து, மக்களின் மாண்பை உயர்த்திய UPA அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பா.ஜ.க. அரசால் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு வக்காலத்து வாங்கி, உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவூட்டுகிறேன்" என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருக்கிறார்.

"எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோஅம்!" - கூட்டணி குறித்து பியூஸ் கோயல்

மத்திய அமைச்சரும், பாஜகவின் தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் இன்று (டிச.23) தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பாக முதற்கட்ட ஆலோசனையை மேற்கொள்ள சென்னை வந்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த போராட்டம் - இம்முறை இந்தியா பக்கம் திரும்புவது ஏன்?

2024-ம் ஆண்டு, ஜூலை மாதம் வங்கதேசமே கலவரப்பூமியாக இருந்தது. இட ஒதுக்கீடு, ஊழல், கொலைகள் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வங்கதேசத்தின் இளைஞர்கள் பட்டாளம் அப்போதைய வங்கதேச அரசை எதிர்த்துப் போராடியது.... மேலும் பார்க்க

TVK: அமைச்சர் சம்பந்திக்கு வாய்ப்பு? பட்ட அவமானம்தான் காரணமா? - அஜிதாவுக்கு மறுக்கப்படுவது ஏன்?

கட்சி தொடங்கி, இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்கவில்லை. அதற்குள் மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார், பதவி நீக்கம், கட்சி அலுவலகத்தையே முற்றுகையிடும் தொண்டர்கள் என தவெக சம்பவங்கள் தொடர்கதையாகி வருக... மேலும் பார்க்க

தேர்தல் அறிக்கை: `கவர்ச்சிகர திட்டங்கள் இல்லை; முன்னேற்ற திட்டங்களுக்குத்தான் முன்னுரிமை'- கனிமொழி

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வரும் 29-ஆம் தேதி மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டுப் பணிகளை அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளரும், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்ப... மேலும் பார்க்க

இந்தியா, நியூசிலாந்து இடையே முடிவான ஒப்பந்தம்; எந்தெந்த துறைக்கு லாபம்? உள்ள ஒரே ஒரு சிக்கல் என்ன?

'இந்தியா - நியூசிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நேற்று முடிவாகி உள்ளது' - இது தான் இன்று எந்தப் பக்கம் திரும்பினாலும், அதிகம் பேசப்படும் ஒன்று. இந்தியா - நியூசிலாந்து பேச்சுவார்த்தை இந்தியா, ... மேலும் பார்க்க

TVK : 'காரை மறித்த பெண் நிர்வாகி; நிற்காமல் சென்ற விஜய்! - என்ன நடந்தது?

பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய்யின் காரை பெண் நிர்வாகி ஒருவர் மறிக்க, நிற்காமல் விஜய்யின் கார் கடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.Ajithaதவெக சார்பில் ஏற்கெனவே 120 ... மேலும் பார்க்க