குன்றத்தூர்: பூட்டிய வீட்டுக்குள் கணவன் தற்கொலை; மனைவி மர்ம மரணம் - திருமணமான 9-...
சேலம்: அரசு பள்ளிக்குள் நள்ளிரவில் மாந்திரீக பூஜை? அதிர்ச்சியில் ஆசிரியர்கள் - போலீஸார் விசாரணை
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமாண்டப்பட்டியில், ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஓமலூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ கென்னடி உட்பட 30 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில், இன்று காலை நடைபயிற்சி மேற்கொள்வதற்காக பள்ளிக்கு வந்த இளைஞர்கள், தலைமை ஆசிரியர் அறை முன்பாக கருப்பு வட்டம், கட்டம் வரைந்து, மஞ்சள், குங்குமம், மரக்கட்டை பொம்மை மற்றும் தலைமை ஆசிரியர் அறை கதவில் மலர் மாலை அணிவித்து முட்டை வைத்து மாந்திரீக பூஜை செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக இளைஞர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் அங்கு வந்த பள்ளி நிர்வாகத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். நள்ளிரவில் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் விடிய விடிய மாந்திரீக பூஜையில் ஈடுட்டுள்ளனரா? அல்லது மாணவர்கள் யாராவது விளையாட்டுக்கு இவ்வாறு செய்தார்களா? என்பது குறித்து ஓமலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மாந்திரீக கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் அருகே அரசு பள்ளியில் முட்டை வைத்து மாந்திரீகம் செய்திருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

















