தார் பாலைவனத்தின் அபாயகரமான மாற்றம்: பசுமையை சுமக்கும் மணலின் சாபக் கதை!
"எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோஅம்!" - கூட்டணி குறித்து பியூஸ் கோயல்
மத்திய அமைச்சரும், பாஜகவின் தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் இன்று (டிச.23) தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பாக முதற்கட்ட ஆலோசனையை மேற்கொள்ள சென்னை வந்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியுடன் ஆலோசனையை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பிறகு பியூஸ் கோயலும், எடப்பாடி பழனிசாமியும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல்," எனது நண்பரும், சகோதரருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது மகிழ்ச்சி.
தேசிய ஜனநாயக் கூட்டணி சேர்ந்து பணியாற்றுவது குறித்து ஆலோசனை செய்தோம்.
2026 தேர்தலை மோடியின் வழிக்காட்டுதலுடன் தன்னம்பிக்கையாக எதிர்கொள்வோம்.
வளர்ச்சி வேலை வாய்ப்பே எங்களின் பிரதான இலக்கு. பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம்.
தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும். ஊழல் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்" என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, " தமிழகத்தில் உள்ள நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்ற கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம்.
சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை தேசிய ஜனநாயக கூட்டணி மேற்கொள்ளும்.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.















