செய்திகள் :

ஆன்லைன் முதலீடு: லிங்க் அனுப்பி, பொறியாளரிடம் ரூ.3.24 கோடி மோசடி - சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

post image

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த 47 வயது நபர், அபுதாபியில் பொறியாளராக வேலைச் செய்கிறார். இவர், அண்மையில் விடுமுறை எடுத்துக்கொண்டு காட்பாடியிலுள்ள தனது வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, அவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு முகம் தெரியாத யாரோ ஒரு மர்மநபர் `` `PZENA App’-ல் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம்’’ என்று மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.

பொறியாளரும் அதை நம்பி, மர்மநபர் அனுப்பிய லிங்க் வாயிலாக PZENA App-ஐ டவுன்லோடு செய்து, அதில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறார். முதலில், பத்தாயிரம் ரூபாய் லாபம் வந்ததைபோல, மர்மநபர் பணம் அனுப்பியிருக்கிறார். இதனால், ஆர்வமடைந்த பொறியாளர் டிரேடிங் செய்வதற்காக மேலும் பணம் செலுத்தியிருக்கிறார்.

தொடர்ந்து, அதிக லாபம் இருப்பு வைக்கப்பட்டிருப்பதைபோல மெசேஜ் அனுப்பப்பட்டதால், ரூ.3.24 கோடி பணத்தை முதலீட்டுக்காக பல்வேறு கட்டமாக செலுத்தியிருக்கிறார் பொறியாளர்.

சைபர் கிரைம் மோசடி

இதையடுத்து, பணத்தை பரிவர்த்தனை மூலமாக திரும்ப பெற முயன்றபோது, மேலும் குறிப்பிட்டத் தொகையை செலுத்துமாறு அந்த ஆப்பில் இருந்து தகவல்கள் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தன. அதன் பிறகே, `இது ஒரு மோசடி ஆப்’ என்பதையும், தான் ஏமாற்றப்பட்டிருப்பதையும் அந்த பொறியாளர் தெரிந்துகொண்டார்.

உடனடியாக, 1930 எண்ணில் தொடர்புகொண்டு சைபர் கிரைமில் புகாரை பதிவு செய்தார். இப்புகார் தொடர்பாக, சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

``இதுபோன்று, பொதுமக்கள் யாரும் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் இதர சமூக ஊடகங்களில் முதலீடு, வீட்டிலிருந்தே வேலை (Investment, Online Trading, Online Part Time Job, Work From Home) சம்பந்தமாக வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். மேலும், ஏ.பி.கே ஃபைல் பதிவிறக்கம் செய்யவோ மற்றும் தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்க்கை கிளிக் செய்யவோ வேண்டாம்’’ என்றும் சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: அக்கா கணவர் கொலை; தம்பி, தாய், சகோதரியுடன் கைது - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காதி போர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரின் மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஆகாஷ், ஹரிஷ் ஆகிய இரு மகன்களும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். ராம்குமார் பழைய ... மேலும் பார்க்க

மும்பை: ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு சாப்பிட சென்ற டிரைவர் - உயிருக்கு போராடிய நோயாளி உயிரிழப்பு

மும்பை புறநகர் ரயில்களில் இருந்து கீழே விழுந்து அல்லது ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். இது போன்று ரயிலில் இருந்து விழுந்து காயம் அடையும் பயணிகளை உடனே மருத்துவமனைக்கு கொண்டு... மேலும் பார்க்க

திருவள்ளூர்: அண்ணியை கொலை செய்த கொழுந்தன் - மனைவியை அவதுறாக பேசியதால் ஆத்திரம்

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு அடுத்த இருளஞ்சேரியை பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (30). இவர் தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சாந்தி (26). இந்தத் த... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; காதலன் துணையோடு கணவனை கொன்று, உடலை வெட்டி வீசிய மனைவி - சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள சந்தெளசி என்ற இடத்தில் பேக் ஒன்று சாலையோரம் கிடந்தது. அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் ஒருவரின் உடல் இருந்தது. அதில் கை, கால் மற்றும் தலை இல்லாமல் இ... மேலும் பார்க்க

திருவள்ளூர்: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம்; அரசு வேலை - பாம்பை வைத்து அப்பாவை கொலை செய்த மகன்கள்

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (56). அந்தப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மோகன்ராஜ் (29), ஹரிஹ... மேலும் பார்க்க

நண்பர் அறை என கருதி கதவை தட்டிய செவிலியர்; உள்ளே இழுத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் - அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து கிரண் ரத்தோட் உட்பட 3 நண்பர்கள் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அந்நேரம் பெண் ஒருவர் வந்து அந்த அறை கதவ... மேலும் பார்க்க