தேர்தல் அறிக்கை: `கவர்ச்சிகர திட்டங்கள் இல்லை; முன்னேற்ற திட்டங்களுக்குத்தான் மு...
"ஹீரோயின்கள் கண்டபடி உடை அணிந்தால், பிரச்னை வரும்"- தெலுங்கு நடிகரின் சர்ச்சை பேச்சு
தெலுங்கு நடிகர் சிவாஜி, நடிகை பிந்து மாதவி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'தண்டோரா'.
தெலுங்கில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை முரளிகாந்த் இயக்கியிருக்கிறார்.
ரவீந்திர பானர்ஜி முப்பனேனி இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நேற்று (டிச.22) ஹைதராபாத்தில் நடைபெற்றிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பெண்கள் அணியும் உடைகள் குறித்து நடிகர் சிவாஜி பேசியவை சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
மேடையில் பேசிய அவர், " ஹீரோயின்கள் கண்டபடி உடைகள் அணிந்தால், பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும்.
என்னை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், நீங்கள் எடுத்துக் கொண்டாலும் எனக்கு பிரச்னை இல்லை.
எப்படி சமாளிப்பது என எனக்குத் தெரியும். உங்கள் அழகு முழுதாக மூடும் சேலையில் தான் உள்ளதே தவிர, அங்கங்கள் தெரியும்படி அணியும் உடைகளில் இல்லை.

ஆடைகள் அணிவது பெண்களின் சுதந்திரம் என்று சொல்வதால் மக்கள் வெளிப்படையாக பேசாமல் இருக்கலாம்.
ஆனால் பெண்கள் இப்படி ஆடை அணிவது பலருக்கும் பிடிக்காது" என்று பேசியிருக்கிறார்.
இவரின் இந்தப் பேச்சுக்கு பலரும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



















